From Wikipedia, the free encyclopedia
சீரகம், அசை அல்லது நற்சீரகம் (தாவர வகைப்பாடு : Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
சீரகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Apiales |
குடும்பம்: | |
பேரினம்: | சீரகி |
இனம்: | C. cyminum |
இருசொற் பெயரீடு | |
Cuminum cyminum லி.[1] | |
சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
இதன் புற்றுநோய் தடுக்கும் வல்லமை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது.
ஊட்ட மதிப்பீடு - 100 g | |
---|---|
உணவாற்றல் | 1567 கிசூ (375 கலோரி) |
44.24 g | |
சீனி | 2.25 g |
நார்ப்பொருள் | 10.5 g |
22.27 g | |
நிறைவுற்றது | 1.535 g |
ஒற்றைநிறைவுறாதது | 14.04 g |
பல்நிறைவுறாதது | 3.279 g |
17.81 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (8%) 64 மைகி(7%) 762 மைகி |
உயிர்ச்சத்து ஏ | 1270 அஅ |
தயமின் (B1) | (55%) 0.628 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (27%) 0.327 மிகி |
நியாசின் (B3) | (31%) 4.579 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (33%) 0.435 மிகி |
இலைக்காடி (B9) | (3%) 10 மைகி |
உயிர்ச்சத்து பி12 | (0%) 0 மைகி |
கோலின் | (5%) 24.7 மிகி |
உயிர்ச்சத்து சி | (9%) 7.7 மிகி |
உயிர்ச்சத்து டி | (0%) 0 மைகி |
உயிர்ச்சத்து டி | (0%) 0 அஅ |
உயிர்ச்சத்து ஈ | (22%) 3.33 மிகி |
உயிர்ச்சத்து கே | (5%) 5.4 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (93%) 931 மிகி |
இரும்பு | (510%) 66.36 மிகி |
மக்னீசியம் | (262%) 931 மிகி |
மாங்கனீசு | (159%) 3.333 மிகி |
பாசுபரசு | (71%) 499 மிகி |
பொட்டாசியம் | (38%) 1788 மிகி |
சோடியம் | (11%) 168 மிகி |
துத்தநாகம் | (51%) 4.8 மிகி |
நீர் | 8.06 g |
Reference [2] | |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
100 கிராம் சீரகத்தில் உடலுக்கு ஊட்டந்தரும் பல பொருட்கள் அடங்கியுள்ளன. இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியனவும் புரதம், நார்ப்பொருள், ஒற்றைபப்டி நிறைவுறு கொழுப்பு முதலியன நல்ல அளவில் உள்ளன.
சீரகத்திலிருந்து 56% Hydrocarbons,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன. இதில் Thymol –[anthelmintic againt HOOK WORM infections, and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமி நாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது.
என சித்தர் பாடல் ஒலிக்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.