From Wikipedia, the free encyclopedia
சீக்கியர் (ஆங்கில உச்சரிப்பு: /ˈsiːk/ அல்லது /ˈsɪk/; பஞ்சாபி மொழி: ਸਿੱਖ, sikkh [ˈsɪkkʰ]) என்பவர் சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவர். சீக்கியம் (பஞ்சாபி மொழியில் சீக்கி) என்பது முதன் முதலில் 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய மதமாகும், இப்போது உலகில் நான்கு முக்கிய மதங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது, மற்றும் ஏராளமானவர்கள் இதை பின்பற்றிவருகின்றனர்.. "சீக்கியம்" என்ற சொல்லின் மூலப்பொருள் சமஸ்கிருத மொழியில் உள்ளது. śiṣya , இதன் பொருள் "சீடர், கற்பவர்" அல்லது "அறிவுரை" என்ற பொருள் தரும் śikṣa என்பதைக் குறிக்கிறது.[24][25]
நிஷான் ஷாஹிப், சீக்கியரின் கொடி | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
25,000,000 (25 million)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா 19,215,730[2]
| |
ஐக்கிய இராச்சியம் | 750,000[3] |
கனடா | 278,000[4] |
ஐக்கிய அமெரிக்கா | 200,000[5] |
மலேசியா | 100,000[6] |
இத்தாலி | 70,000[7] |
தாய்லாந்து | 70,000[8] |
ஆத்திரேலியா | 22,000[9] |
பாக்கித்தான் | 20,000[10] |
குவைத் | 20,000[11] |
நெதர்லாந்து | 12,000[12] |
இந்தோனேசியா | 15,000[13]‡ |
பிரான்சு | 10,000[14] |
சிங்கப்பூர் | 9,733[15] |
நியூசிலாந்து | 9,507[16] |
செருமனி | 8,000[17] |
நேபாளம் | 5,890[18] |
5,000[19] | |
பிஜி | 4,674[20] |
ஆப்கானித்தான் | 3,000[21] |
ஆஸ்திரியா | 2,794[22] |
அயர்லாந்து | 1,200[23] |
மொழி(கள்) | |
Among the Sikh diaspora ஆங்கிலம், இந்தி, உருது, சுவாகிலி, மலாய், தாய், and others. | |
சமயங்கள் | |
சீக்கியம் | |
† Estimated figure as of 2004. ‡Indonesian law does not recognize Sikhism, thus Sikhs are not allowed to identify themselves as such on their identity cards or birth or marriage certificates, Sikhs are therefore registered as Hindu. |
"ரேஹத் மர்யாதா" நூலின் (சீக்கிய நடத்தை வழிகாட்டுதல்கள் மற்றும் நம்பிக்கைகள்) முதல் சட்டத்தின்படி, ஒரு சீக்கியர் என்பவர், "ஒரே முடிவற்ற இறைவனையும், குருநானக் தேவ் முதல் ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வரையிலான பத்து குருக்களையும்; ஸ்ரீ குரு கிரந்த சாஹிப்பையும், பத்து குருக்களின் சொற்களையும் போதனைகளையும், எந்த மதத்துடனும் இணைய விரும்பாத பத்தாவது குரு விட்டுச்சென்ற ஞானத்தையும் முழுமனதாக நம்பும் ஒரு மனிதனாவான்".[26] எல்லா சீக்கியர்களிடையேயும் காணப்படும் பொதுவான அடையாளம், கத்தரிக்கப்படாத முடி(ஆண்களுக்கு தாடியும் அடங்கும்) மற்றும் அவர்களுடைய தலைப்பாகை.ஆகும்.
பெரிய பஞ்சாப் மாகாணம் வரலாற்று ரீதியாக சீக்கிய மதத்தின் பூர்வீக இடமாகும். பெரும்பாலான சீக்கியர்கள் பஞ்சாபிகள் ஆவர். அவர்கள் பஞ்சாப் பகுதியிலிருந்து வந்தவர்கள், ஆனாலும் உலகெங்கும் கணிசமான அளவு இவர்கள் பரவி வசித்து வருகின்றனர்.பஞ்சாபிகளும் பஞ்சாப் பகுதியும், சீக்கியம் என்பதை ஒரு மதமாக உருவாக்கியதில் வரலாற்றில் மிகமுக்கிய பங்காற்றி உள்ளன.
சீக்கிய மதத்தின் அடிப்படை தத்துவத்தை அவர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பின் முதல் பாடலிலேயே புரிந்து கொள்ளலாம்.
“ | There is one supreme eternal reality; the truth; immanent in all things; creator of all things; immanent in creation. Without fear and without hatred; not subject to time; beyond birth and death; self-revealing. Known by the Guru’s grace.[27] | ” |
இந்த மார்க்கத்தைத் தோற்றுவித்த குருநானக், மூன்று அத்தியாவசிய கடமைகளில் சீக்கிய வாழ்க்கைமுறையைச் சுருக்கமாக கூறுகிறார்: நாம் ஜபோ, கிராத் கர்னி மற்றும் வாண்ட் கே ஷாக்கோ, இவற்றின் பொருளாவது தெய்வீக பெயரை (வாஹெகுரு) தியானம் செய்க, கண்ணியமாகவும் நேர்மையாகவும் பணி செய்யுங்கள் மற்றும் ஒருவர் பெற்ற பலன்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆகியவையே ஆகும்.[28]
சீக்கியர்கள் குரு கிரந்த சாஹிப்பை தங்களுடைய முதன்மை குருவாக பாவிக்கின்றனர், இதுவே சீக்கிய குருக்களின் போதனைகளின் எழுத்துப்பூர்வ வடிவமாகும். பத்தாவது குரு குரு கிரந்த சாஹிப்பையே தனக்கு அடுத்து வரும் குருவாக தேர்வு செய்தார். இது சீக்கிய குருக்களால் தொகுக்கப்பட்டு, அதனுடைய அசல் வடிவத்திலேயே பராமரிக்கப்படுகிறது, சீக்கியர்கள் குரு கிரந்த சாஹிப் புத்தகத்தை அவர்களுடைய முதன்மை வழிகாட்டியாக வழிபடுகிறார்கள். சீக்கியர் அல்லாதோர், சீக்கிய ஆராதனை கூட்டங்களிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் முற்றிலும் கலந்துகொள்ளலாம். அவர்களின் தினசரி பிராத்தனைகளில், மனித இனத்தின் நல்வாழ்வும் அடங்கியுள்ளது.[29]
நவம்பர் 11. 1675 -இல் டில்லியில் நடந்த மதப்போராட்டம் ஒன்றில் இந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக 9வது குரு திரு குரு தேக் பஹதூர் என்பவர் வீரமரணம் அடைந்தது, அனைவரும் பின்பற்றத்தக்க ஒரு எடுத்துக்காட்டாகும்.[30]
சீக்கியர்கள் உலகவாழ்க்கையைத் துறக்குமாறு கூறப்படவில்லை,[31] ஆனால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். சீக்கிய வழிபாட்டில் மிகமுக்கிய பகுதி சேவா (சேவை) என்பதாகும், இதனை அதிக அளவில் குருத்துவாராக்களில் காணலாம். எந்தவகையான மதம் அல்லது சமூக பொருளாதார நிலையில் உள்ள மக்களும் வரவேற்கப்படுவார்கள், அங்கு அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.
பல்வேறு சமூக பின் புலங்களைச் சேர்ந்த பஹகத்கள் அல்லது துறவிகள் ஆகியோரையும் சீக்கியர்கள் பின்பற்றுகின்றனர். இந்த பஹகத்களின் பணிகளும் குரு கிரந்த சாஹிப்பில் சேகரிக்கப்பட்டுள்ளன, இது பாகத்-பாணி (பாகத்தின் புனித சொற்கள்) என்று அழைக்கப்படுகிறது, சீக்கிய குருக்களின் பணிகள் குர்-பாணி (குருவின் புனித சொற்கள்) என்றழைக்கப்படுகிறது.
சீக்கியர்களால் வணங்கப்படும் மனிதர்களில் இவர்களும் அடங்குவர்:[32]
ஆரம்பகால சீக்கிய அறிஞர்களில் பாய் வீர் சிங் மற்றும் பாய் கான் சிங் நபா ஆகியோர் அடங்குவர்.
ஐந்து Kக்கள், அல்லது பஞ்ச காக்கர்/காக்கி என்பது, எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களுக்குமான (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமான ஐந்து பொருட்களாகும், இவற்றை பொதுவாக எல்லா நேரங்களிலும் ஒருவர் அணிந்திருக்க வேண்டும், இந்த கட்டளையை இட்டவர் பத்தாவது சீக்கிய குரு. இதனை 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில் கூறினார். சீக்கியத்தின் நோக்கங்களை அடையாளப்படுத்தவும் வெளிப்படுத்தவும் இந்த சின்னங்கள் அணியப்படுகின்றன, அவையாவன நேர்மை, சமநிலை, நம்பகம், போர்க்கலை மற்றும் இறைதியானம் மற்றும் ஒரு ஆக்கிரமிப்பாளனுக்கு எப்போதும் அடிபணியாமை.[33] இந்த ஐந்து சின்னங்களாவன:-
சீக்கிய வரலாறு, ஒரு தனிப்பட்ட அமைப்பாக மாறி வளரத் தொடங்கியது, ஐந்தாவது சீக்கிய குரு, குரு அர்ஜன் தேவ் 1606ஆம் ஆண்டில் வீரமரணம் அடைந்த பின்னர் தொடங்கியது என்று கூறலாம். குரு கோபிந்த் சிங் 1699ஆம் ஆண்டில் கல்சா (ਖ਼ਾਲਸਾ) என்பதை நிறுவிய பின்னர் மேலும் சீக்கிய பிரிவு மேம்பட்டது.[34] பஞ்சாபில் பதினைந்தாம் நூற்றாண்டில், ஒரு மதத் தலைவராகவும், சமூக மறுசீரமைப்பாளராகவும் குரு நானக் மாறியவுடன் சீக்கியம் மீண்டும் மறுமலர்ச்சியடைந்தது. மார்ச் 30, 1699 -இல் மதரீதியான நடைமுறைகள் குரு கோபிந்த் சிங்கால் முறைப்படுத்தப்பட்டது. முந்தைய குரு ஐந்து வெவ்வேறு சமூக பின்புலங்களைச் சார்ந்த ஐந்து நபர்களை தீட்சையளித்து கால்சாவை உருவாக்கினார். முதல் ஐந்து, தூய நபர்கள், பின்னர் கோபிந்த் சிங்கை, கால்சா அமைப்பிற்குள் தீட்சை அளித்தனர்.[35] இதனால் சீக்கியம் என்பது, ஒரு முறைப்படுத்தப்பட்ட குழுவாக மாறியது, மேலும் 400 ஆண்டுகள் வரையிலான மத வரலாறு கிடைக்க காரணமாக மாறியது.
பொதுவாக சீக்கிய மதம், மிதமான அளவு உறவுகளை பிற மதத்தினருடன் கொண்டிருக்கிறது. ஆனாலும், முகாலயர்களின் ஆட்சிகாலத்தில் (1556–1707), வளர்ந்து வந்த இந்த மதமானது, ஆட்சியில் இருந்த முகலாயர்களுடனான உறவில் பிணக்கைச் சந்தித்தது. சில முகலாய மன்னர்கள் சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்த காரணத்தால் பிரபலமான சீக்கிய குருமார்கள் பலர் முகலாயர்களால் கொல்லப்பட்டனர்.[36] இதே நேரத்தில், சீக்கிய மதம் முகலாய பேரரசை எதிர்ப்பதற்காக ராணுவத்தை உருவாக்கியது. சீக்கியப் பேரரசு மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரின் கீழ் உருவாகியது, இது மத சகிப்புத்தன்மை மற்றும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரையும் அதிகாரத்தில் அமர வைத்ததன் மூலம் பன்மைத்தன்மையையும் பேணி வந்தது. சீக்கிய அரசை நிறுவியது பொதுவாக, சீக்கிய மதத்தை அரசியல் ரீதியாக வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சி என்று கருதப்படுகிறது,[37] இந்த சீக்கிய அரசாங்கத்தின் கீழ் ஜம்மு, காஷ்மீர், லடாக், மற்றும் பெஷாவர் ஆகியவை அடக்கி விட்டன. வட மேற்கு எல்லைப்புறத்தில் இருந்த சீக்கிய ராணுவத்தின் தளபதியாக இருந்த ஹரிசிங் நல்வா என்பவர் சீக்கிய அரசாங்கத்தின் எல்லையை கைபர் கணவாயின் தொடக்கம் வரை விரிவாக்கினார். அரசாங்கத்தின் வெளிப்படையான நிர்வாகத்தில், புதுமையான ராணுவம், பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைவுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டன.
1947ஆம் ஆண்டில் இந்தியாவைப் பிரிப்பதற்கான காலத்தில், பஞ்சாபில் சீக்கியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடு உருவானது, இதனால் மேற்கு பஞ்சாபிலிருந்து பல பஞ்சாபி சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் இடமாறி வந்தனர், இதேபோல் கிழக்கு பஞ்சாபிலிருந்து இதற்கு நேரெதிரான இடப்பெயர்வு நிகழ்ந்தது.[38]
1960களில், பஞ்சாபி சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இந்தியாவில் பெரிய அளவிலான சண்டைகளும் முரண்பாடுகளும் நிலவிவந்தது,[39] ஏனெனில் பஞ்சாபி சீக்கியர்கள் பஞ்சாபில் சீக்கிய பெரும்பான்மை மாநிலத்தை உருவாக்க அதிகமாக வலியுறுத்தி வந்தனர், இந்திய சுதந்திரத்தின்போது அரசியல் ரீதியான ஆதரவைத் தந்ததற்காக, இவ்வாறு செய்யப்படுவதாக மாஸ்டர் தாரா சிங் என்பவருக்கு நேருவால் உறுதி தரப்பட்டது.[40] நவம்பர் 1, 1966 -இல் சீக்கிய பெரும்பான்மை மாநிலமான பஞ்சாபை சீக்கியர்கள் பெற்றனர்.
1970களில் ஆட்சியில் இருந்த கட்சியான இந்திய தேசிய காங்கிரஸில் சீக்கியர்கள் ஒதுக்கி வைக்கப்படவும் பாகுபாட்டுடன் நடத்தப்படவும் செய்கின்றனர் என்று காரணம் கூறப்பட்டது அதற்கு அப்போதைய இந்திய பிரதமாராக இருந்த இந்திரா காந்தியின் "சர்வாதிகாரத்தனமான" நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக இருந்தது.
இந்திரா காந்தி 1975ஆம் ஆண்டில் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்ததார் இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்வினையாக, சீக்கிய தலைவர் சான்ட் ஜர்னாயில் சிங் பிந்திரன்வாலே என்பவரின் எழுச்சிக்கு வழி வகுத்தது, மேலும் அவர் நீதிக்காகவும் சீக்கிய மதநம்பிக்கைகளுக்காகவும் குரல் கொடுத்தார், மேலும் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு உருவாக்கவும் கோரினார். இதனால் பஞ்சாபில் திடீரென்று மதரீதியான வன்முறை தூண்டி விடப்பட்டது.[41] காலிஸ்தான் போராளிகளை ஒடுக்க 1984ஆம் ஆண்டில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்த பொற்கோயில் மீது இந்திராகாந்தி எடுத்த ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையின் காரணமாக இந்திராகாந்தி அவருடைய சீக்கிய பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார்.[41]. இதன் காரணமாக சீக்கிய எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்து, சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் படுகொலை செய்யப்பட்டனர்; பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இந்த செயல்களை, ஒரு சீக்கிய போக்ரோம் ஆக இருப்பதால், "சொந்த நாட்டிலேயே நான் ஒரு அகதியாக உணருகிறேன்" என்று கூறினார். உண்மையில், நான் நாஜி ஜெர்மனியில் ஒரு யூதனைப் போல உணர்கிறேன்" என்றார்.[42] 1984 முதல், சீக்கியர் மற்றும் இந்துக்கள் இடையேயான உறவுகள் மீண்டும் மலர்ச்சியடைய தொடங்கின, இதற்கு வளரும் பொருளாதாரமும் ஒரு காரணமாக இருந்தது; ஆனாலும் 2002 ஆம் ஆண்டில், வலது சாரி இந்து அமைப்பான RSS -இன் கோரிக்கைகள், அதாவது "சீக்கியர்களும் இந்துக்களே" என்பது சீக்கிய உணர்வுகளைத் தூண்டி கோபமூட்டின.[43] காலிஸ்தான் இயக்க நடவடிக்கைகளின் போது நிகழ்ந்த வன்முறை மற்றும் அரசியல், பொருளாதார தேவைகளுக்காக பல சீக்கியர்கள் இன்றும் போராடி வருகின்றனர்.
சீக்கியர்கள் அவர்களுக்கென சொந்தமான இசைக்கருவிகளை உருவாக்கியுள்ளனர்: ரபாப், தில்ரூபா, டாவஸ், ஜோரி மற்றும் சாரிண்டா. சாரங்கி என்ற கருவியையும் குரு ஹர் கோபிந்த் ஆதரித்தார். ரபாப் முதன்முதலில் பாய் மர்டானா என்பவரால் பயன்படுத்தப்பட்டது, குரு நானக் தேவுடன் அவருடைய பயணங்களில் கூடவே சென்று வந்தார். ஜோரி மற்றும் சாரிண்டா ஆகிய இரண்டையும் வடிவமைத்தவர் குரு அர்ஜுன் தேவ் என்பவராவார். டாவஸ் என்பது குரு ஹர் கோபிந்த்தால் வடிவமைக்கப்பட்டது, இது இவர் ஒரு மயில் பாடுவதையும் அந்த சத்தத்தை போன்ற ஒலியை உருவாக்கும், ஒரு கருவியை அவரிடம் வடிவமைக்குமாறு கோரியதாகவும் கூறப்படுகிறது, டவஸ் என்பது மயிலைக் குறிக்கும் ஒரு பெர்சிய சொல்லாகும். தன்னுடைய சீடர்களின் விருப்பத்திற்கேற்ப, தில்ருபா குரு கோபிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியான போர்களின் காரணமாக, டவஸ் கொண்டு செல்லவும், பராமரிக்கவும் கடினமானதாக இருப்பதால் இது உருவாக்கப்பட்டது. ஜப்ஜி சாஹிப் எல்லாவகையான சத்தங்களைப் பற்றியும் குரு கிரந்த சாஹிப்பில் ராக் என்பதன் கீழ் எழுதிவிட்டார். ஷப்த் என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட ராகத்தைச் சார்ந்ததாக இருக்கும். இந்த வகை பாடலுக்கு குர்மாத் சங்கீத் என்று பெயர்.
போருக்கு நடக்கும்போது, சீக்கியர்கள் அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்திக் கொண்டு, சிகிடு ஆக மாறுவார்கள். இதற்கு பெயர் ரஞ்சித் நகாரா (வெற்றியின் மேளம்) என்று பெயர். நகராக்கள் பெரிய போர் மேளங்களாகும், இது இடியோசையைப் போன்ற ஒலியை உருவாக்கும். இவை கிட்டத்தட்ட 2 முதல் 3 அடி விட்டமுள்ளதாகவும், இரண்டு குச்சிகளால் அடிக்கப்படுவதாகவும் இருக்கும். சிறப்பு அல்லது அசல் ரஞ்சித் நகாரா, பழங்கால போர்களில் பயன்படுத்தப்பட்டன, அவை 5 அடி விட்டம் கொண்டது. பெரிய மேளங்களில் இடியோசை போன்ற ஓசைகளானது, அவர்களின் படையானது போர்களத்தில் அணிவகுத்து செல்வதையே குறிக்கின்றன. சில நேரங்களில் இவற்றை போர்க்களத்திற்கு உள்ளேயும் கொண்டு செல்வார்கள், இதனால் சீக்கியர்கள் முழக்கங்களை அதிகமாக வைத்து செல்வர், எதிரி படையினர் இவர்கள் வருவதை அறிந்து கொள்ள முடியும். சீக்கியர்களின் மனவலிமை அதிகரிக்கும் அதே வேளையில், எதிரிகளின் மனநிலை இன்னும் மோசமாகக்கூடும்
கிட்டத்தட்ட உலகளவில் 27 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர், உலக மக்கள்தொகையில், சீக்கியர்கள் 0.39%[44] உள்ளனர், அவர்களின் 83% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய சீக்கிய சமூகத்தில் 19.2 மில்லியன், அதாவது இந்திய சீக்கியர்களில் 76% பேர் பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கின்றனர், இவர்கள் அங்குள்ள மக்கள்தொகையில் 70.9% சதவீதம் பேர் ஆவர். கணிசமான அளவிலான சீக்கியர்கள் அதாவது 200,000க்கும் அதிகமானோர், இந்திய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களான ஹரியானா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், டில்லி, மகாராஷ்ட்ரா, உத்தராஞ்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர்.[45]
19 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், பஞ்சாப் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பின்னர், அப்போதைய பிரித்தானிய இந்திய பகுதிகளில், சீக்கியர்கள் வரத்தொடங்கினர்.[38] பிரித்தானிய ராஜ்ஜியம் இந்திய சிவில் சேவை]]களுக்கு குறிப்பாக சீக்கியர்களை வேலைக்கமர்த்தியது, குறிப்பாக பிரித்தானிய இந்திய ராணுவத்தில், இதனால் சீக்கியர்கள் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர்.[38] பிரித்தானிய அரசு காலகட்டத்தில், ஓரளவுக்கு திறன் மிகுந்த சீக்கிய கலைஞர்கள் பஞ்சாபிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ரயில் பாதைகளை அமைக்கப் பயன்படுத்தப்பட்டனர். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், சீக்கியர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து, அதிக அளவில் இங்கிலாந்திற்கு செல்ல தொடங்கினர், ஆனாலும் பலரும் வட அமெரிக்காவிற்கு சென்றனர். .[46] தொடர்ச்சியாக பொருளாதார காரணங்களுக்காக சீக்கிய நபர்களின் இடப்பெயர்வு, இப்போது கணிசமான பொருளாதார வளத்துடன் சீக்கிய மக்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, மலேசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர்.
பஞ்சாபிலிருந்து சீக்கிய மக்கள் இடம் பெயர்வது, அதிக அளவில் இருந்தாலும், சீக்கிய இடப்பெயர்வின் பாரம்பரிய முறைகள் மாறி விட்டன, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளான இங்கிலாந்து போன்றவற்றுக்கு செல்லுதல், கடுமையான குடிமை கட்டுப்பாடுகளால் குறைந்து போய்விட்டபஞ்சாபிலிருந்து சீக்கிய மக்கள் இடம் பெயர்வது, அதிக அளவில் இருந்தாலும், சீக்கிய இடப்பெயர்வின் பாரம்பரிய முறைகள் மாறி விட்டன, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளான இங்கிலாந்து போன்றவற்றுக்கு செல்லுதல், கடுமையான குடிமை கட்டுப்பாடுகளால் குறைந்து போய்விட்டது. 'உண்மையில்' "1970களின் பிற்பகுதிக்கு பின்னர் கிட்டத்தட்ட சாத்தியமில்லாமல் போய்விட்டது", ஐரோப்பிய கண்டத்தின் பிற பகுதிகளுக்கு சீக்கிய இடப்பெயர்வு மாறிவிட்டது. சீக்கிய இடப்பெயர்வின் புதிய வளரும் பகுதியாக இத்தாலி தற்போது மாறிவிட்டது,[47]
இந்திய அரசியலில இந்திய பிரதமராக மன்மோகன் சிங்பொறுப்பு வகித்துள்ளார்.இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவராக மாண்டேக் சிங் அலுவாலியா இருந்துள்ளார். கடந்தகால சீக்கிய அரசியல்வாதிகளில் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் கியானி ஜெயில் சிங், முன்னாள் பாரளுமன்றத்தின் சபாநாயகர் குருதயாள் சிங் தில்லான்,முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரதாப் சிங் கைரோன், பூட்டாசிங் ஆகியோர்.குறிப்பிடத்தவர்கள்
சீக்கியர்கள் இந்திய ராணுவத்தில் 10–15% வரையில் எல்லா பதவிகளிலும் காணப்படுகின்றனர், மற்றும் அதன் அலுவலர் நிலைகளில் 20% பேர் காணப்படுகின்றனர்,[48] அதே நேரத்தில் சீக்கியர்கள் இந்திய மக்கள்தொகையில் 1.87% பேர்களே காணப்படுகின்றனர், இதனால் அவர்கள் ஒரு சாரசரி இந்தியனை விட 10 மடங்குகள் அதிகமாக போர்வீரராகவும் மற்றும் அலுவலராகவும் இந்திய ராணுவத்தில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பை பெறுகின்றனர்.[49] சீக்கிய ரெஜிமென்ட் என்பது இந்திய ராணுவத்தில் மிக அதிகமாக புகழப்படும் மற்றும் மிகவும் வீரமிக்கது என்று நம்பப்படும், மற்றும் திறன்வாய்ந்த ரெஜிமன்ட்டாக கருதப்படுகிறது,[50] அதற்கு 73 போர் அங்கீகாரங்களும், 14 விக்டோரியா பதக்கங்களும்,[51] 21 முதல் தர இந்திய ஆணை (விக்டோரியா பதக்கத்திற்கு ஈடானது) ,[52] 15 அரசாங்க அங்கீகாரங்கள் மற்றும் 5 COAS யுனிட் குறிப்புகளையும் 2 பரம் வீர் சக்ரா, 14 மஹா வீர் சக்ரா, 5 கீர்த்தி சக்ரா, 67 வீர் சக்ரா மற்றும் 1596 பிற கேலன்டிரி விருதுகளையும் பெற்றுள்ளது.இந்திய வான் படையின் வரலாற்றில் அதிகபட்ச பதவியை வகித்தவர் ஒரு பஞ்சாபி சீக்கியர் ஆவர், அவர் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் அர்ஜன் சிங் ஆவார்.[53] பாதுகாப்புத் துறையால் ஒரு இன்ஃபேன்ட்ரி படையை, யுகே சீக்கிய ரெஜிமென்டை உருவாக்கும் திட்டம் ஜூன் 2007ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது, இதற்கு இங்கிலாந்தில் சீக்கிய பிரிவினரின் எதிர்ப்பும், பிரிட்டன் இளவரசர் சார்லஸின் எதிர்ப்பும் காரணமாகும்.[54].
வரலாற்று ரீதியாக, பெரும்பாலான இந்தியர்கள் விவசாயிகளாகவே இருந்து வருகின்றனர், இன்றும் 66% இந்தியர்கள் (மூன்றில் இரண்டு பங்கு) விவசாயிகளே.[55] இந்திய சீக்கியர்களும், பெரும்பாலும் வேளாண் தொழிலைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர், 2001 -ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பணிசெய்யும் நபர்களில் 39% இந்தியாவில் இந்தத் துறையில் உள்ளனர் (இந்திய சராசரியை விடக் குறைவு) .[56] 1960களில் பசுமை புரட்சியின் வெற்றியின் காரணமாக, அதாவது, "பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவையும், தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கும்" இந்தியா அந்நேரத்தில் உயர்வடைந்தது,[57] இதில் சீக்கிய பெரும்பான்மை மாநிலமான பஞ்சாபை "இந்தியாவின் ப்ரெட்பாஸ்கட்டாக" மாறியது.[58][59] சீக்கிய பெரும்பான்மை மாநிலமான பஞ்சாப், புள்ளிவிவரத்தின் படி இந்தியாவில் மிகவும் பணக்கார மாநிலமாகும் (தனிநபர் வருவாய்) இந்திய சராசரியை விட 3 மடங்கு அதிகமாக பஞ்சாபில் காணப்படுகிறது.[60]
முதலாம் உலகப் போரின் காலத்தில், பிரித்தானிய இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 100,000 மேலாகும்; அதாவது பிரித்தானிய இந்திய ராணுவத்தில்|முதலாம் உலகப் போரின் காலத்தில், பிரித்தானிய இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 100,000 மேலாகும்; அதாவது பிரித்தானிய இந்திய ராணுவத்தில் 20% பேராவர். 1945 -ஆம் ஆண்டுகள் வரை, 14 விக்டோரியா பதக்கங்கள் சீக்கியர்களுக்கு வழங்கப்பட்டது, ஒட்டுமொத்த சாதனை விருதுகள் சீக்கிய ரெஜிமண்ட்களுக்கு வழங்கப்பட்டது.[51] 2002 -ஆம் ஆண்டில், எல்லா சீக்கிய VC மற்றும் ஜார்ஜ் பதக்க வெற்றியாளர்களின் பெயர்கள் லண்டனில் பக்கிங்காம் அரண்மனைக்கு அடுத்துள்ள கான்ஸ்டிட்யூஷன் ஹில் -இல் அமைந்துள்ள பெவிலியன் நினைவுச்சின்னமான மெமோரியல் கேட்ஸ் -இல் செதுக்கப்பட்டன[61].[62] முதல் உலகப்போரின்போது, சீக்கிய பட்டாலியன்கள் எகிப்து, பாலஸ்தீனம், மெசப்பட்டோமியா, காலிபோலி மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களில் போரிட்டுள்ளது. சீக்கிய ரெஜிமண்டின் ஆறு பட்டாலியன்கள் இரண்டாம் உலகப்போரில் உருவாக்கப்பட்டன, அவை, எல் அல்மெயின் மற்றும் பர்மா, இத்தாலி மற்றும் ஈராக் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன, இவர்கள் 27 போர் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய விடுதலையைப் பெறுவதற்கு சீக்கியர்கள் மிக முக்கிய பங்கை வகித்தனர். அவர்களின் மக்கள்தொகை வலுவின் விகிதத்திற்கு முற்றிலும் ஒத்துப்போகாத அளவுக்கு முழுவதுமாக தியாகங்கள் செய்தனர் (சீக்கியர்கள் இந்திய மக்கள்தொகையில் 2% க்கும் குறைவான அளவே உள்ளனர்).
(சுதந்திரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மவுலானா அபுல் ஆசாத் என்பவரால் தரப்பட்ட விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.)
கொல்லப்பட்ட 2125 இந்தியர்களில், 1550 (73%) பேர் சீக்கியர்கள்.
அந்தமான் தீவுகளுக்கு, (பிரித்தானிய அரசாங்கம் அரசியல் மற்றும் பொது குற்றங்களில் ஈடுபட்டவர்கள்க்கு தண்டனை வழங்க பயன்படுத்திய இடம்) ஆயுள் தண்டனைக்காக கொண்டு செல்லப்பட்ட 2646 இந்தியர்களில் 2147 (80%) பேர் சீக்கியர்கள்.
கேல்லோஸுக்கு அனுப்பப்பட்ட 127 இந்தியர்களில் 92 (80%) பேர் சீக்கியர்கள்.
ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை செய்யப்பட்ட, 1302 ஆண், பெண் மற்றும் குழந்தைகளில் 799 (61%) பேர் சீக்கியர்கள்.
இந்திய விடுதலை ராணுவத்தில், 20,000 பதவிகள் மற்றும் அலுவலர்களில் 12,000 (60%) பேர் சீக்கியர்கள்.
விடுதலை போராட்டத்தின்போது, தூக்கிலிடப்பட்ட 121 பேர்களில், 73 (60%) பேர் சீக்கியர்கள்.
சீக்கிய கலை மற்றும் வரலாறு, பஞ்சாப் பகுதியுடன் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. பஞ்சாப் பகுதியே இந்தியாவின் ஒன்றுசேர்தல் பகுதி என்றழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்குதான் பல ஆக்ரமிப்பாளர்களின் கலாச்சாரமும் முதலில் உள்வரத் தொடங்கியது, கிரேக்கர்கள், முகலாயர்கள் மற்றும் பெர்சியர்கள் ஆகியோர் அவற்றில் சில, மேலும் இங்கு ஐந்து நதிகள் பாய்கின்றன. எனவே, இந்த கலாச்சாரங்களின் சேர்க்கைகளினால் சீக்கிய கலாச்சாரம் ஏராளமான விஷயங்களைப் பெற்றுள்ளது.
சீக்கியம் ஒரு தனிப்பட்ட வகை கட்டிடக்கலையை உருவாக்கியது, இதை பட்டி என்பவர் "குரு நானக்கின் ஆக்கப்பூர்வ புதிர்தன்மையின்" தாக்கத்தால் சீக்கிய கட்டிடக்கலை உருவானது என்று குறிப்பிடுகிறார். இது "பாரபட்சமற்ற தெய்வீகத்தன்மையை அடிப்படையாக கொண்ட, ஆன்மீக மனித பண்பின் அமைதியான பயணம்" என்கிறார்.[63] சீக்கிய கட்டிடக்கலையின் மிக முக்கிய சின்னம் குருத்துவாராக்களாகும், இவை பஞ்சாபி கலாச்சாரத்தின், "உருகும் பானை" அமைப்பாகும், இவை இஸ்லாமிய, சூஃபி மற்றும் இந்து மத பாதிப்புகளைத் தன்னகத்தே கொண்டது.
சீக்கிய பேரரசின் பகுதிகளே, சீக்கிய வடிவ அமைப்புகளை உருவாக்குவதற்கான முக்கியமான தூண்டுதலாக இருந்தது, இதில் மஹாராஜா ரஞ்சித் சிங் ஏராளமான கோட்டைகள், குடியிருப்பு பகுதிகள், கல்லூரிகள் முதலானவற்றை சீக்கிய பாணி எனப்படும் அமைப்பில் கட்டினார். சீக்கிய கலாச்சாரத்தின் பண்புக்கூறுகளாவன தங்கமுலாம் பூசப்பட்ட குழிவான கூரைகள், புகைபோக்கிகள், கியோஸ்கள் மற்றும் சதுரமான கூரைகளின் மேல்பகுதியில் கல்லாலான கைப்பிடிகள் அதிக அழகுடன் அலங்கரிக்கப்பட்டிருப்பவை ஆகியனவாகும். சீக்கிய பாணி என்ற "மகுடத்தில் ஒரு அலங்காரமாக இருப்பது" ஹர்மிந்தர் சாஹிப் ஆகும்.
சீக்கிய கலாச்சாரம், ராணுவ நோக்கங்களின் பாதிப்புகளைக் கொண்டுள்ளது, அவற்றில் கண்டா இருப்பது மிகவும் அவசியமானது, எனவேதான் பெரும்பாலான சீக்கிய ஆடைகள் ஒரு ராணுவ கட்டமைப்புடன் காணப்படும், இதில் சீக்கிய குருக்களின் போதனைகள் சார்ந்திருக்கப்படுவதில்லை. ஹோலா மொஹால்லா மற்றும் வைசாகி போன்ற சீக்கிய பண்டிகைகளிலும் இந்த நோக்கமே அதிகமாக காணப்படும், இவற்றில் வலிமையின் அளவு வெளிக்காட்டப்படும்.
சீக்கிய மக்கள்பரவலில் காணப்படும் கலையும் கலாச்சாரமும், 'இந்தோ-கனடியன்', 'பிரித்தானிய ஏஷியன்', இந்தோ கனடியன் போன்ற பிற இந்தோ-குடிபெயர்ந்த குழுக்களுடன் இணைந்து காணப்படுகின்றன; ஆனாலும் ஒரு தனிப்பட்ட கலாச்சார நிகழ்வும் உருவாகி விட்டது, இதனை 'அரசியல் சீக்கியம்' என்று விவரிக்கலாம்.[64] அமர்ஜீத் கவுர் நந்தாரா & அம்ரித் மற்றும் ரபிந்த்ர கவுர் சிங் போன்ற பரவி வாழும் சீக்கியர்களின் கலையானது, அவர்களின் சீக்கியம் மற்றும் பஞ்சாபில் தற்போதைய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவையாகும்.
தனித்துவம் மிக்க பஞ்சாபி நாட்டுப்புற நடனங்களாவன பாங்கரா மற்றும் ஜித்தா ஆகியவையாகும், இவற்றை பஞ்சாபி சீக்கியர்கள் மிகவும் விரும்பி ஆடுகின்றனர். இந்த வகையான வெளிப்பாடுகளினால், பஞ்சாபி சீக்கியர்கள் உலகெங்கும் பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர், சீக்கிய கலாச்சாரம் பிரிக்கமுடியாத அளவிற்கு பாங்க்ராவுடன் இணைந்து காணப்படுகிறது, சொல்லப்போனால் "பாங்க்ரா சீக்கிய நடனம் அல்ல, ஒரு பஞ்சாபி நடனமாகும்."[65]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.