பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
கிழக்கத்திய வானம்பாடி (அலொட குல்குலா), சின்ன வானம்பாடி (Oriental skylark) என்று அழைக்கப்படும் வானம்பாடி இனம், தெற்கு மத்திய மற்றும் கிழக்கு பேலியார்டிக் பகுதிகளில் காணப்படுகிறது. மற்ற வானம்பாடிகளைப் போலவே, இது புல்வெளியில் காணப்படுகிறது. புல்வெளிகளில் காணப்படும் விதைகள் மற்றும் பூச்சிகளை இவை உண்கிறது.
சின்ன வானம்பாடி Oriental skylark | |
---|---|
இந்தியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பெசாரிபார்மிசு |
குடும்பம்: | அல்லெடிடே |
பேரினம்: | அலொட |
இனம்: | அ. குல்குலா |
இருசொற் பெயரீடு | |
அலொட குல்குலா பிராங்ளின், 1831 | |
துணையினங்கள் | |
உரையினைப் பார்க்கவும் | |
சின்ன வானம்பாடி பரம்பல் |
கிழக்கத்திய வானம்பாடியை 1831ஆம் ஆண்டில் ஆங்கில சிப்பாயும் இயற்கை ஆர்வலருமான ஜேம்ஸ் பிராங்க்ளின் விவரித்தார். இவர் இதற்கு அலாடா குல்குலா என இருசொற் பெயரினை இட்டார்.[2] குல்குலா எனும் சிற்றினப் பெயருக்கு பொருள் ஏதும் இல்லை எனினும் குலா என்பது இலத்தீன் பாடல் ஒன்றினையும் "தொண்டை" என்பதைக் குறிக்கும்.[3]
கிழக்கத்திய வானம்பாடியின் பிற பெயர்கள் கிழக்கு வானம்பாடி, இந்திய வானம்பாடி மற்றும் சிறிய வானம்பாடி ஆகும்.[4]
பதின்மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [5]
கிழக்கத்திய வானம்பாடி சுமார் 16 நீளம் உடையது. வெள்ளை வெளிப்புற வால் இறகுகள் மற்றும் ஒரு குறுகிய முகடு ஆகியவற்றைக் கொண்ட, மஞ்சள்-பழுப்பு நிற மேல் சிறகமைப்பினைக் கொண்டது . பாலின வேறுபாடு காணப்படுவதில்லை.
இந்த வானம்பாடி அடிக்கடி வானத்தில் உயரமாகப் பறக்கின்றன. கீழிறங்கும் முன் ஓசை எழுப்பும். ஆண் கிழக்கத்திய வானம்பாடி துணையை ஈர்க்கும் பொருட்டு ஆகாயத்தில் சுற்றவும் பாடவும் செய்யும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.