இலாவாசு வானூர்தி நிலையம்
மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள வானூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia
மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள வானூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia
இலாவாசு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LWY, ஐசிஏஓ: WBGW); (ஆங்கிலம்: Lawas Airport; மலாய்: Lapangan Terbang Lawas) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் இலிம்பாங் பிரிவு, இலாவாசு நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும். சபா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.[3]
Lawas Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
டுவின் ஒட்டர் வானூர்தி | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | லாவாசு | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 10 ft / 3.048 m | ||||||||||
ஆள்கூறுகள் | 04°50′57″N 115°24′10″E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
இந்த வானூர்தி நிலையம் இலாவாசு நகரம்; இலாவாசு மாவட்டம்; இலிம்பாங் பிரிவு ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு வானூர்திப் போக்குவரத்தை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.
சரவாக் மாநிலத் தலைநகரான கூச்சிங்கில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும்; சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் இந்த வானூர்தி நிலையம் உள்ளது. சரவாக், சபா மற்றும் புரூணை நிலப் பகுதிகளுக்கு இடையே அமைந்து இருப்பதால் ஒரு சிறப்பான போக்குவரத்து மையமாகவும் திகழ்கின்றது.
தற்போது உள்ள வானூர்தி நிலையத்தைப் புதிய இடத்திற்கு மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. தற்போதைய தளம் பாதுகாப்பற்றதாகக் கருதப் படுகிறது. வானூர்தி நிலையம் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆற்றங்கரையில் சில நில அரிப்புகள் காணப்பட்டன.
இந்தப் புதிய விமான நிலையம், மாஸ் விங்சு மூலம் இயக்கப்படும் ATR 72-500 ரக விமானங்கள் பயன்படுத்த இடமளிக்கும். புதிய விமான நிலையத்தை இலாவாசில் உள்ள மக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சரவாக் சபா எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் பயன்படுத்துவார்கள்.
காடுகளில் உள்ள காட்டு மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்வதும்; விவசாயமும் தான், இந்த நகரின் முக்கியமான பொருளாதார ஆதாரங்கள். பாகெலாலான் (Ba'Kelalan) எனப்படும், இலாவாசு மேட்டு நிலப் பகுதிகளில் ஆப்பிள் சாகுபடி பரிசோதனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ஆப்பிள் அறுவடை செய்கிறார்கள்.
இலாவாசு நகரத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மாநில அரசாங்கத்திடம் முன்மொழியப்பட்டுள்ளன.
இலாவாசு பகுதியில் நெல் சாகுபடி நிலத்தின் பெரும்பகுதி செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டு உள்ளன.
விமானச் சேவைகள் | சேரும் இடங்கள் |
---|---|
மாஸ் சிவிங்சு (MASwings) |
பாகெலாலான் வானூர்தி நிலையம் கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் லிம்பாங் வானூர்தி நிலையம் மிரி வானூர்தி நிலையம் |
வானூர்திப் பயண எண் 3516 கொண்ட அந்த வானூர்தி மிரியில் இருந்து லாவாஸுக்கு உள்நாட்டுச் சேவையில் ஈடுபட்டு இருந்தது. ஓடுபாதையில் தரையிறங்கும் போது ஓடுபாதையின் வலதுபுறம் திரும்பி அதன் மூக்குச் சக்கரம் உடைந்தது.[5]
இலாவாசு வானூர்தி நிலையத்தின் சில காட்சிகள்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.