அறுபத்து நான்கு சிவவடிவங்கள் என்பவை சைவர்களின் இறைவனான சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களாகும். இதனை சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமசுகிருத மொழியில் அழைப்பர்.

64 வடிவங்கள்

அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும், அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்குச் சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஈக்காடு இரத்தினவேலு முதலியாரின் சிவபராக்கிரமம் எனும் தமிழ் நூலிலும் இந்த அறுபத்து நான்கு வடிவங்கள் கூறப்பட்டுள்ளன.[1]

சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.[2]

மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
எண்பெயர்விளக்கம்
1இலிங்க மூர்த்தி
2இலிங்கோத்பவ மூர்த்திஇலிங்கமாக தோன்றிய வடிவம்
3முகலிங்க மூர்த்திஇலிங்கத்தில் சிவமுகம் உள்ள வடிவம்
4சதாசிவ மூர்த்திஐந்து முகத்துடன் உள்ள வடிவம்
5மகா சதாசிவ மூர்த்திஇருபத்தியைந்து முகத்துடன் உள்ள வடிவம்
6உமாமகேஸ்வர மூர்த்திஉமையுடன் பொருந்திய வடிவம்
7சுகாசன மூர்த்திநல்லிருக்கை நாதர்
8உமேச மூர்த்திஉமையுடன் நின்றருளும் வடிவம்
9சோமாஸ்கந்த மூர்த்திஉமை மற்றும் கந்தன் உடனாகிய வடிவம்
10சந்திரசேகர மூர்த்திபிறை சூடியுள்ள வடிவம்
11இடபாரூட மூர்த்திவிடையேறி - காளையின் மீது அமர்ந்திருக்கும் வடிவம்
12இடபாந்திக மூர்த்திஅறவெள் விடைக்கு அருளிய வடிவம்
13புஜங்கலளித மூர்த்திபாம்புகளைக் காத்து அருளிய வடிவம்
14புஜங்கத்ராச மூர்த்திபாம்புகளை அடக்கிய வடிவம்
15சந்த்யான்ருத்த மூர்த்திமாலைநேர நடன வடிவம்
16சதாநிருத்த மூர்த்திஎஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம்
17சண்டதாண்டவ மூர்த்திகாளி காண ஆடிய நடன வடிவம்
18கங்காதர மூர்த்திகங்கையணிந்த வடிவம்
19கங்காவிசர்ஜன மூர்த்திமுடியிலிருந்து கங்கையை விடுவிடுக்கும் வடிவம்
20திரிபுராந்தக மூர்த்திமுப்புரமெரி செய்த வடிவம் - முப்புரமெரித்த வடிவம்
21கல்யாணசுந்தர மூர்த்திமணவழகர் வடிவம்
22அர்த்தநாரீஸ்வர மூர்த்திஉமைபங்கன் - உமையை இடப்பாகமாகக் கொண்ட வடிவம்
23கஜயுக்த மூர்த்திகாயாசுரனை கொன்ற வடிவம்
24ஜ்வாரபக்ன மூர்த்திசுரம் நீக்கும் வடிவம்
25சார்த்தூலஹர மூர்த்திபுலியினை அழித்த வடிவம்
26பாசுபத மூர்த்திஅருச்சுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம்
27கங்காள மூர்த்திவாமனைக் கொன்று முதுகெலும்பினைக் கொண்ட வடிவம்
28கேசவார்த்த மூர்த்திமாலொரு பாகர் வடிவம்
29பிச்சாடன மூர்த்திபலிகொள் செல்வர் வடிவம்
30சரப மூர்த்திசரப வடிவம்
31சண்டேச அனுக்கிரக மூர்த்திசண்டேசருக்கு அருளிய வடிவம்
32தட்சிணாமூர்த்திதென்முகக் கடவுள்
33யோக தட்சிணாமூர்த்திதவநிலைத் தென்முகக் கடவுள்
34வீணா தட்சிணாமூர்த்திவீணையேந்திய தென்முகக் கடவுள்
35காலந்தக மூர்த்திகாலனைக் கொன்ற வடிவம்
36காமதகன மூர்த்திகாமனை எரித்த வடிவம்
37இலகுளேஸ்வர மூர்த்திபுவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம்
38பைரவ மூர்த்தி
39ஆபத்தோத்தரண மூர்த்திமுனிவர்களின் இடர் களைந்த வடிவம்
40வடுக மூர்த்திமுண்டாசுரனைக் கொன்ற வடிவம்
41சேத்திரபால மூர்த்திஊழிக்காலத்தில் உலகைக் காத்த வடிவம்
42வீரபத்ர மூர்த்தி
43அகோர மூர்த்திசச்தந்துவைக் கொன்ற வடிவம்
44தட்சயஞ்யஷத மூர்த்திதக்கன் வேள்வியைத் தகர்த்த வடிவம்
45கிராத மூர்த்திவேட்டுருவர்
46குரு மூர்த்தி
47அசுவாருட மூர்த்திகுதிரையேறு செல்வர்
48கஜாந்திக மூர்த்திஐராவதத்திற்கு அருளிய வடிவம்
49சலந்தரவத மூர்த்திசலந்தரனைக் கொன்ற வடிவம்
50ஏகபாதத்ரி மூர்த்திஒற்றைத் திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்
51திரிபாதத்ரி மூர்த்திமூன்று திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்
52ஏகபாத மூர்த்திஒற்றைத் திருவடியுடைய வடிவம்
53கௌரிவரப்ரத மூர்த்திஉமைக்குப் பொன்னிறம் அளித்த வடிவம்
54சக்கரதான மூர்த்திதிருமாலுக்குச் சக்கரம் அளித்த வடிவம்
55கௌரிலீலாசமன்வித மூர்த்திஉமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம்
56விசாபகரண மூர்த்திநீலகண்டர்
57கருடன் அருகிருந்த மூர்த்திகருடனுக்கு அருளிய வடிவம்
58பிரம்ம சிரச்சேத மூர்த்திபிரம்மாவின் தலையைக் கொய்த வடிவம் ( அயனின் ஆணவச் சிரமறுத்த வடிவம்)
59கூர்ம சம்ஹார மூர்த்திகூர்ம வடிவத் திருமாலை அடக்கிய வடிவம்
60மச்ச சம்ஹார மூர்த்திமச்ச வடிவத் திருமாலை அடக்கிய வடிவம்
61வராக சம்ஹார மூர்த்திவராக வடிவத் திருமாலை அடக்கிய வடிவம்
62பிரார்த்தனா மூர்த்திஉமையின் ஊடலைத் தணித்த வடிவம்
63இரத்த பிட்சா பிரதான மூர்த்திதேவர்களின் செருக்கினை அடக்கிய வடிவம்
64சிஷ்ய பாவ மூர்த்திமுருகனிடம் பிரணவப் பொருளைக் கேட்க மாணவனாக மாறிய வடிவம்
மூடு

வகைப்பாடு

இந்த அறுபத்து நான்கு சிவவடிவங்களும் போக வடிவங்கள், யோக வடிவங்கள், கோப வடிவங்கள் (வேக வடிவங்கள்) என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.[3]

போக வடிவம்

  • உமாமகேஸ்வரர்
  • சந்திரசேகரர்
  • ரிஷபாரூடர்
  • மாதொருபாகர்

யோக வடிவம்

  • தட்சிணாமூர்த்தி
  • ஞான தட்சிணாமூர்த்தி
  • யோக தட்சிணாமூர்த்தி
  • வீணா தட்சிணாமூர்த்தி
  • சுகாசனர்

கோப வடிவம்

  • கங்காளர்
  • வீரபத்திரர்
  • திரிபுராந்தக மூர்த்தி
  • கஜயுக்த மூர்த்தி
  • காலந்தக மூர்த்தி

பிற சிவ வடிவங்கள்

64 சிவ வடிவங்கள் தவிர்த்து எண்ணற்ற சிவவடிவங்களை புராணங்கள் கூறுகின்றன. சைவ சமயக் கலைக் களஞ்சியம் கஜாரி, கஜமுக அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, ஹரிவிரிஞ்சதாரணர், ஏகதசருத்திரர், முயலகவத மூர்த்தி, சர்வ சம்ஹாரர், யக்ஞேசுவரர், உக்கிரர் ஆகியவற்றை பட்டியலிடுகிறது.

காண்க

வெளி இணைப்புக்கள்

ஆதாரம்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.