சிவ வடிவங்களில் ஒன்றான
கங்காள மூர்த்தி

மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்:வாமனனைக் கொன்ற வடிவம்
இடம்:கைலாயம்
வாகனம்:நந்தி தேவர்

கங்காள மூர்த்தி, அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். இவ்வடிவத்தினை கங்காளர் எனவும் வழங்குகின்றார்கள். கங்காளம் என்ற சொல்லுக்கு எலும்பு என்று பொருள்படும். மகாபலி எனும் அரக்கர் குல மன்னனை வாமன அவதாரம் எடுத்து விஷ்ணு கொன்றார். அதன் பின் கர்வம் கொண்டு மனிதர்களையும், தேவர்களையும், முனிவர்களையும் துன்புருத்த தொடங்கினார். அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் துயர் தீர்க்க சிவபெருமான் வச்சிரதண்டம் எடுத்து வாமனன் மார்பில் அடித்து கொன்றார். அத்துடன் வாமனன் தோலை உரித்து ஆடையாக தரித்துக் கொண்டு, அவனுடைய முதுகெலும்பினை பிடுங்கி தண்டாக கையில் தரித்துக் கொண்டார். இத்திருக்கோலம் கங்காள மூர்த்தி என்று வழங்கப்படுகிறது.

வடிவக் காரணம்

சிவபெருமானில் கோயிலில் உள்ள விளக்கொன்றின் திரியை ஒரு எலி தன்னுடைய வாலால் உயர்த்த, அந்த புண்ணியத்தின் பலனாக மகாபலி (மாவிலி) மன்னனாக எலி பிறந்தது. அந்த மன்னருக்கு மூன்று உலகங்களையும் ஆளும் பொறுப்பினைச் சிவபெருமான் தந்தான். அரக்கர் குலத்தில் மகாபலி பிறந்தமையின் காரணமாக, திருமால் வாமன அவதாரம் எடுத்துச் சென்றார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். வந்திருப்பது திருமால் எனத் தெரிந்த அரக்கர் குரு சுக்கிராச்சாரியார் அதனைத் தடுத்தார். ஆனால் தானம் கேட்டுவந்தவருக்கு இல்லையென்று சொல்ல மனமில்லாத மன்னன் மகாபலிக்குத் தானம் தந்தார். சிறிய உருவமாக இருந்த வாமனன் மிகப்பெரியதாக வளர்ந்து ஓரடியில் பூமியையும், மற்றொரு அடியில் விண்ணையும் அளந்தார். மீதமிருக்கும் அடிக்கு என்ன செய்ய என்று கேட்க, மகாபலி தன்னுடைய தலையில் அடியை வைக்குமாறு கேட்க, வாமனன் மகாபலியைத் தலையில் அழுத்திப் பூமிக்குள் தள்ளினார்.

மகாபலியை அழித்த பின்பு மிகுந்த ஆணவம் கொண்ட திருமால், தேவர்களையும், முனிவர்களையும் பல உயிர்களையும் துன்புருத்தினார். அதனால் சிவபெருமான் வாமனனிடம் ஆணவத்தினை விடுமாறு கூறினார். ஆனால் அதனை ஏற்காத வாமனனைச் சிவபெருமான் கொன்றார். வாமனனின் தோலை உரித்துத் தன் உடலில் போர்த்திக் கொண்டும், முதுகெழும்பினை ஆயுதமாகக் கையிலும் எடுத்துக் கொண்டார்.

வாமனன் இறந்துபோக திருமால் வைகுண்டம் சென்றார். மகாபலி மன்னன் சிவபெருமானுடன் கலந்தார்.


கங்காளர் வடிவமும், பிச்சாண்டவர் வடிவமும் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும், அவை வெவ்வேறான வடிவங்களாகும்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்

    Wikiwand in your browser!

    Seamless Wikipedia browsing. On steroids.

    Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

    Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.