கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்த்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
அடங்க மறு (Adanga Maru), கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தில் செயம் இரவி, ராசி கன்னா, சம்பத் இராச் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்[1]. இப்படம் சாம் சி. எசின்[2] இசையில், சத்தியன் சூரியன்ன் ஒளிப்பதிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017இல் தொடங்கியது.
அடங்க மறு | |
---|---|
இயக்கம் | கார்த்திக் தங்கவேல் |
தயாரிப்பு | சுசாதா விசயகுமார் |
கதை | கார்த்திக் தங்கவேல் |
இசை | சாம் சி. எஸ். |
நடிப்பு | செயம் இரவி ராசி கன்னா சம்பத் இராச் |
ஒளிப்பதிவு | சத்தியன் சூரியன் |
படத்தொகுப்பு | அந்தோணி.எல். ரூபென் |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 15 கோடி |
பணியில் இருக்கும் போது செய்ய முடியாததை ஒரு முன்னாள் காவல் அலுவராக ஒருவர் செய்து முடிப்பதுதான் அடிப்படைக்கதை[4].கொலை வழக்கொன்றில் அதிகாரம் படைத்த குற்றவாளிகளை சுபாசு கைது செய்ததால், அவரின் குடும்பம் பலியாகிறது. பணி, குடும்பம் என எல்லாவற்றையும் இழந்த அவரிடம் மிஞ்சியிருப்பது கோபம் மட்டும்தான். தன் அறிவாலும் நுட்பங்களாலும் தன் எதிரிகளை அழிக்கின்றார்[5].
இத்திரைப்படம் கார்த்திக் தங்கவேலுவின் இயக்கத்தில்[6] , கெவின் குமார் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்ற உள்ளது குறித்து திசம்பர் 2017இல் செயம் இரவி குமுக ஊடகங்களில் அறிவித்தார். திசம்பர் 2017இல் தொடங்கிய இப்படத்தின் பணிகள் மே 2018இல் நிறைவடைந்தன.
இப்படத்தின் பாடல், பின்னணி இசைப்பணிகளை சாம் சி. எஸ். மேற்கொண்டுள்ளார்.[7] ஆகத்து 2018இல் சோனி நிறுவனம் இப்படத்தின் பாடல்களை வெளியிட்டது.
Untitled | ||||
---|---|---|---|---|
காலவரிசை | ||||
|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஆங்கு வாங்கு" | சாம் சி.எசு, முகேசு, எம்.எல்.ஆர் கார்த்திகேயன் | 4:26 | |
2. | "சாயாளி" | சத்தியபிரகாசு, சின்மயி | 5:15 | |
3. | "பச்சை துரோகங்கள்" | அரிச்சந்திரன் | 3:46 | |
4. | "கார் இருள்" | சிவம் | 3:07 | |
மொத்த நீளம்: |
17:34 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.