From Wikipedia, the free encyclopedia
அனைத்துலக முறை அலகுகள் (International System of Units) என்பன எடை, நீளம் போன்ற பல்வேறு பண்புகளை அளக்கப் பயன்படும் தரம் செய்யப்பட்ட அலகுகளாகும். இம்முறை அலகுகளைக் குறிக்க பயன்படும் SI என்னும் எழுத்துக்கள் பிரெஞ்சு மொழிப் பெயராகிய Système International d'Unités என்பதனைக் குறிக்கும். இவ்வலகுகள் உலகெங்கிலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஓரளவுக்குப் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல்-விற்றல் போன்றவைகளுக்கும் பயன்படுகின்றன.
இந்த SI முறை அலகுகள் மீட்டர்-கிலோ கிராம்-நொடி (MKS) அடிப்படையில் ஆன மெட்ரிக் முறையிலிருந்து 1960ல் உருவாக்கப்பட்டது. இந்த அனைத்துலக முறையில் பல புதிய அலகுகளும், அளவியல் வரையறைகளும் உண்டாக்கப்பட்டன. இது மாறாமல் நிற்கும் வடிவம் அல்ல, வளரும் அறிவியலின் நிலைகளுக்கேற்ப உயிர்ப்புடன் இயங்கும் ஓர் அலகு முறை.
மெட்ரிக் அளவுகள் 1790 பிரெஞ்சுப் புரட்சியின் போது கொண்டுவரப்பட்டது ஆகும். 1830 ஆம் ஆண்டில் காஸ் என்பவர் ஒத்திசைவு அமைப்பு என்பதனை உருவாக்கினார். அதற்கு அடிப்படைகளாக இருந்தவையாவன
அனைத்துலக முறை அலகுகள் பலவும் முன்னொட்டுகள் கொண்டவை. அலகுகள் இரு பிரிவாக உள்ளன. முதலில் அடிப்படையான ஏழு அலகுகள் உள்ளன. இவை தவிர SI அலகுகள் அல்லாதன சிலவும் SI அலகுகளுடன் சேர்த்துப் பயன்படுத்தக்கூடியவை உள்ளன, இவை வழிநிலை அளவுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வடிப்படை அலகுகளைக்கொண்டு பிற அலகுகள் வருவிக்கப்படுகின்றன. அடிப்படையான ஏழு அலகுகளில், ஆம்பியரும் கெல்வினும் அறிவியலாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதால் ஆங்கிலத்தில் குறிப்பிடும்பொழுது தலைப்பு அல்லது பெரிய (Captial) எழுத்துக்களில் குறிப்பிடப்படும். ஏனையவை ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றன. ஏழு அடிப்படை அளவுகளில் இருந்து 22 வழிநிலை அளவுகள் தருவிக்கப் படுகின்றன.[1]
SI அடிப்படை அலகுகள் | |||||
---|---|---|---|---|---|
அலகின் பெயர் | அலகின் தமிழ்ப்பெயர் | குறியீடு | தமிழில் குறியீடு | அளபுரு | தமிழில் அளபுரு |
Kilogram | கிலோகிராம் | kg | கிகி | Mass | பொருண்மை |
Second | நொடி | s | நொ | Time | நேரம் |
Metre | மீட்டர் | m | மீ | Length | நீளம் |
Ampere | ஆம்பியர் | A | ஆம்ப் | Electrical Current | மின்னோட்டம் |
Kelvin | கெல்வின் | K | கெ | Temparature | வெப்பநிலை |
Mole | மோல் | mol | மோல் | Amount of Substance | பொருளின் அளவு |
Candela | கேண்டெலா | cd | கேண்டெ | Luminous Intensity | ஒளிச்செறிவு |
அடிப்படை அனைத்துலக முறைகள் என்பது ஒரு கட்டிடத்தின் அடித்தளம் போன்றது. மற்ற அனைத்து அலகுகளும் இதிலிருந்து பெறப்பட்டவை ஆகும். மேக்ஸ்வெல் என்பவர் முதன்முதலாக ஒத்திசைவு அமைப்பினை விவரிக்கும் போது மூன்று அளவுகள் அடிப்படை அலகுகளாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
அவையாவன,
அலகுகளின் பெயர்கள் | அலகுகளின் குறியீடுகள் | அளவுகளின் பெயர்கள் | விளக்கங்கள் (முழுமை பெறவில்லை) | பரிணாமத்தின் குறியீடுகள் |
---|---|---|---|---|
மீட்டர் | m | உயரம் |
|
L |
கிலோகிராம்[n 1] | kg | தொகுதி |
|
M |
நொடி | s | நேரம் |
|
T |
ஆம்பியர் | A | மின்னனு நேரம் | I | |
கெல்வின் | K | வெப்பமண்டல வெப்பநிலை | Θ | |
மோல் | mol | பொருளின் அளவு | N | |
கேண்டிலா | cd | ஒளிச்செறிவு நிலை | J | |
பெயர் | குறிகள் | அளவு | எஸ் ஐ அலகுகளின் மற்ற வழிமுறைகள் | அனைத்துலக அடிப்படை முறைகள் |
---|---|---|---|---|
ரேடியன் | rad | கோணம் | 1 | m/m |
ஸ்ட்ரேடியன் | sr | திடக் கோணம் | 1 | m2/m2 |
ஹெர்ட்ஸ் | Hz | அலை வரிசை | s−1 | |
நியூட்டன் | N | அழுத்தம் , எடை | kg⋅m⋅s−2 | |
பாஸ்கல் | Pa | அழுத்தம் | N/m2 | kg⋅m−1⋅s−2 |
ஜூல் | J | ஆற்றல், வேலை | N⋅m = Pa⋅m3 | kg⋅m2⋅s−2 |
வாட்டு | W | ஆற்றல், அலைவரிசை மாறுபாடு | J/s | kg⋅m2⋅s−3 |
கூலும் | C | மின்னேற்றம் | s⋅A | |
வோல்ட் | V | மின் அழுத்தம் | W/A = J/C | kg⋅m2⋅s−3⋅A−1 |
பாரடு | F | மின்தேக்கம் | C/V = C2/J | kg−1⋅m−2⋅s4⋅A2 |
ஓம் | Ω | மின்மறுப்பு | V/A = J⋅s/C2 | kg⋅m2⋅s−3⋅A−2 |
சைமன்ஸ் | S | மின்கடத்தும் திறன் | Ω−1 | kg−1⋅m−2⋅s3⋅A2 |
வெபர் | Wb | காந்தத் தடை | V⋅s | kg⋅m2⋅s−2⋅A−1 |
தெசுலா | T | காந்தத் தடை அடர்த்தி | Wb/m2 | kg⋅s−2⋅A−1 |
என்றி | H | மின்தூண்டல் | Wb/A | kg⋅m2⋅s−2⋅A−2 |
டிகிரி செல்சியசு | °C | வெப்ப நிலை | K | |
லூமன் | lm | ஒளிவுப் பாயம் | cd⋅sr | cd⋅sr |
லக்சு | lx | ஒளித்திட்டம் | lm/m2 | cd⋅sr⋅m−2 |
பெக்கரல் | Bq | வானொளி கதிர்வீச்சு | s−1 | |
கிரே | Gy | உறிஞ்சப்பட்ட அளவு | J/kg | m2⋅s−2 |
சீவர்ட் | Sv | J/kg | m2⋅s−2 | |
கட்டல் | kat | கேட்டலிக்டிக் | mol⋅s−1 | |
பெயர் | குறியீடு | அளவு |
---|---|---|
மீட்டர் | m | நீளம் |
கிலோகிராம் | kg | பொருண்மை/நிறை |
நொடி | s | காலம் |
ஆம்பியர் | A | மின்னோட்டம் |
கெல்வின் | K | வெப்பநிலை |
கேண்டெலா | cd | ஒளிச்செறிவு |
மோல் | mol | பொருளின் அளவு |
பெயர் | குறியீடு | அளவு |
---|---|---|
ஆரையன் | rad | தளக்கோணம் |
திண்ணாரையன் | sr | திண்மக்கோணம் |
ஆரையன் மற்றும் திண்ணாரையன் ஆகியவை 1995ஆம் ஆண்டு வரை துணை அளவுகளாக இருந்தன, அதன் பிறகு அவை வழிநிலை அளவுகளாக மாற்றப்பட்டுள்ளன.[7]
சில அடிப்படை அலகுகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் மதிப்புகளால் வழிநிலை அளவுகள் பெறப்படுகின்றன. இங்கு சில வழிநிலை அளவுகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.
இயற்பியல் பண்பு | சமன்பாடு | அலகு (தமிழில்) | அலகு (ஆங்கிலத்தில்) |
---|---|---|---|
பரப்பு | நீளம்xஅகலம் | மீ2 | m2 |
பருமன் | பரப்புxஉயரம் | மீ3 | m3 |
விரைவு | இடப்பெயர்ச்சி/காலம் | மீ நொ−1 | m s−1 |
முடுக்கம் | விரைவு/காலம் | மீ நொ−2 | m s−2 |
அடர்த்தி | நிறை/பருமன் | கிகி மீ−3 | kg m−3 |
உந்தம் | நிறைxவிரைவு | கிகி மீ நொ−1 | kg m s−1 |
விசை | நிறைxமுடுக்கம் | கிகி மீ நொ−1 (அல்லது) நியூட்டன் | kg m s−2 (or) N (or) newton |
மின்னூட்டம் | மின்னோட்டம்xகாலம் | ஆம்பியர் நொ | A s |
அனைத்துலக முறை அலகுகளின் (SI) தரம் செய்யப்பட்ட முன்னொட்டுகள்
முன்னொட்டு | அடிப்படை 10 | பதின்மம் | மேற்கொள்ளுதல் | ||||
---|---|---|---|---|---|---|---|
தமிழ் பெயர் | பெயர் | முன்னொட்டு எழுத்து | |||||
குவெட்டா | quetta | Q | 1030 | 1000000000000000000000000000000 | 2022 | ||
ரோனா | ronna | R | 1027 | 1000000000000000000000000000 | 2022 | ||
யோட்டா | yotta | Y | 1024 | 1000000000000000000000000 | 1991 | ||
சேட்டா | zetta | Z | 1021 | 1000000000000000000000 | 1991 | ||
எக்சா | exa | E | 1018 | 1000000000000000000 | 1975 | ||
பேட்டா | peta | P | 1015 | 1000000000000000 | 1975 | ||
டெரா | tera | T | 1012 | 1000000000000 | 1960 | ||
கிகா | giga | G | 109 | 1000000000 | 1960 | ||
மெகா | mega | M | 106 | 1000000 | 1873 | ||
கிலோ | kilo | k | 103 | 1000 | 1795 | ||
எக்டோ | hecto | h | 102 | 100 | 1795 | ||
டெக்கா | deca | da | 101 | 10 | 1795 | ||
100 | 1 | – | |||||
டெசி | deci | d | 10−1 | 0.1 | 1795 | ||
சென்ட்டி | centi | c | 10−2 | 0.01 | 1795 | ||
மில்லி | milli | m | 10−3 | 0.001 | 1795 | ||
மைக்ரோ | micro | μ | 10−6 | 0.000001 | 1873 | ||
நானோ | nano | n | 10−9 | 0.000000001 | 1960 | ||
பிக்கோ | pico | p | 10−12 | 0.000000000001 | 1960 | ||
ஃவெம்ட்டோ | femto | f | 10−15 | 0.000000000000001 | 1964 | ||
அட்டோ | atto | a | 10−18 | 0.000000000000000001 | 1964 | ||
செப்ட்டோ | zepto | z | 10−21 | 0.000000000000000000001 | 1991 | ||
யோக்டோ | yocto | y | 10−24 | 0.000000000000000000000001 | 1991 | ||
ரோண்டோ | ronto | r | 10−27 | 0.000000000000000000000000001 | 2022 | ||
க்வெக்டோ | quecto | q | 10−30 | 0.000000000000000000000000000001 | 2022 | ||
|
அலகுகளை ஆங்கிலத்தில் குறியீடுகளாகவோ முழுமையாகவோ பயன்படுத்தும் போது சில மரபுகளும் விதிகளும் பின்பற்றப்படுகின்றன.[8] அவை,
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.