From Wikipedia, the free encyclopedia
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெற்றது. சார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலும் இதனுடன் இணைந்து நடைபெற்றது.அதன் முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2015, சனவரி 1 அன்று முடிவடைகிறது. இத்தேர்தலில் 7,225,559 மக்கள் 87 சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்வர். 87இல் 7 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்ட வாக்காளர்கள் 91% ஆகும். 10,015 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் யாருக்கும் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்ற விருப்பத் தேர்வும் இருந்தது. தேர்தல் முடிவு டிசம்பர் 23 அன்று வாக்குபதிவு எண்ணிக்கையன்றே அறிவிக்கப்பட்டது. மூன்று தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் தாள் (காகிதம்) மூலம் வாக்கு செலுத்தும் வசதியும் இருக்கும்.[1][2] உமர் அப்துல்லா பீர்வாக், சோனாவார் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டனர் [3] 2008இல் உமர் அப்துல்லா கான்டர்பால் தொகுதியில் வென்றார்.[4]
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அனைத்து 87 இடங்களும் சட்டமன்றம் அதிகபட்சமாக 44 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 73,16,946 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 65.91% (4.75%) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது .அவை பின்வருமாறு:
இம்மாநிலத்தின் 87 தொகுதிகளுக்கும் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் லே மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், கார்கில் மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், கிஷ்ட்வார் மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், தோடா மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், ரம்பன் மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், கண்டேர்பல் மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், பண்டிபோரா மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கும் என மொத்தம் 15 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் ரியாசி மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கும், உதம்பூர் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கும், பூன்ஞ் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கும், குப்வாரா மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளுக்கும், குல்கம் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கும் என மொத்தம் 18 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டத்தில் பாரமுல்லா மாவட்டத்தின் ஏழு தொகுதிகளுக்கும், புடகம் மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளுக்கும், புல்வாமா மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கும் என மொத்தம் 16 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டத்தில் ஸ்ரீநகர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளுக்கும், அனந்தநாக் மாவட்டத்தின் ஆறு தொகுதிகளுக்கும், சோபியான் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளுக்கும், சம்பா மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளுக்கும் என மொத்தம் 18 தொகுதிகளுக்கும், ஐந்தாம் கட்டத்தில் சம்மு மாவட்டத்தின் பதினொன்று தொகுதிகளுக்கும், கதுவா மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளுக்கும், ரஜௌரி மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கும் என மொத்தம் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
2008-இல் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அப்துல்லா குடும்பத்தாரின் கோட்டை என கருதப்படும் காடர்பால் தொகுதியில் போட்டியிடாமல் இம்முறை சோனவார், பீர்வாக் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சோனவாரில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரிடம் 4,783 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். பீர்வாக் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 910 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து வென்றார்.[14] காடர்பால் தொகுதியை ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் இசுவாக் அகமது சேக் 597 வாக்குகள் வேறுபாட்டில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார்.[15]
தேர்தல் நிகழ்வு | முதல் கட்டம் | இரண்டாம் கட்டம் | மூன்றாம் கட்டம் | நான்காம் கட்டம் | ஐந்தாம் கட்டம் |
---|---|---|---|---|---|
வேட்புமனு அளிக்கும் நாள் | அக்டோபர் 29 | நவம்பர் 07 | நவம்பர் 14 | நவம்பர் 19 | நவம்பர் 26 |
வேட்புமனு அளிக்க இறுதி நாள் | நவம்பர் 05 | நவம்பர் 14 | நவம்பர் 21 | நவம்பர் 26 | டிசம்பர் 03 |
வேட்புமனுக்கள் ஆராய்தல் | நவம்பர் 07 | நவம்பர் 15 | நவம்பர் 22 | நவம்பர் 27 | டிசம்பர் 04 |
வேட்புமனுக்களை விலக்கிக்கொள்ள இறுதி நாள் | நவம்பர் 10 | நவம்பர் 17 | நவம்பர் 24 | நவம்பர் 29 | டிசம்பர் 06 |
வாக்குபதிவு நாள் | நவம்பர் 25 | டிசம்பர் 02 | டிசம்பர் 09 | டிசம்பர் 14 | டிசம்பர் 20 |
வாக்குகளை எண்ணும் நாள் | டிசம்பர் 23 | டிசம்பர் 23 | டிசம்பர் 23 | டிசம்பர் 23 | டிசம்பர் 23 |
கட்சி | கொடி | பெற்றுள்ள இடங்கள் | முன்னர் பெற்ற இடங்கள் | +/–▼ | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசிய மாநாட்டு கட்சி | 15 | 28 | -13▼ | ||||||||
மக்களின் சனநாயக கட்சி | 28 | 21 | +7 | ||||||||
இந்திய தேசிய காங்கிரசு | 12 | 17 | -5 ▼ | ||||||||
பாரதிய ஜனதா கட்சி | 25 | 11 | +14 | ||||||||
சம்மு காசுமீர் தேசிய சிறுத்தைகள் கட்சி | 0 | 3 | -3▼ | ||||||||
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 1 | 1 | 0 | ||||||||
மக்களின் சனநாயக முன்னனி | 0 | 1 | -1 ▼ | ||||||||
சம்மு காசுமீர் மக்களின் சனநாயக முன்னனி | 1 | 0 | +1 | ||||||||
சம்மு காசுமீர் மக்களின கூட்டமைப்பு | 2 | 0 | +2 | ||||||||
சம்மு காசுமீர் மக்களின் சனநாயக தேசிய கட்சி | 0 | 1 | -1 ▼ | ||||||||
சுயேட்சைகள் | 3 | 4 | -1 ▼ | ||||||||
மொத்தம்l (வாக்களித்தவர்கள் 60.5%) | 87 | 87 | |||||||||
மூலம்: Electoral Commission of India [தொடர்பிழந்த இணைப்பு] |
பாசக சம்மு பகுதியில் மட்டுமே வென்றது. மக்களின் சனநாயக கட்சி காசுமீர் பகுதியில் 25 இடங்களிலும், சம்மு பகுதியில் மூன்று இடங்களிலும் வென்றது. தேசிய மாநாட்டு கட்சி காசுமீர் பகுதியில் 12 இடங்களிலும், சம்மு பகுதியில் மூன்று இடங்களிலும் வென்றது. காங்கிரசு லடாக் பகுதியில் மூன்று இடங்களிலும், காசுமீர் பகுதியில் நான்கு இடங்களிலும், சம்மு பகுதியில் ஐந்து இடங்களிலும் வென்றது. காங்கிரசே மாநிலத்தின் மூன்று பகுதிகளிலும் வென்ற அரசியல் கட்சியாகும்.[16]
3 விழுக்காட்டுக்கு மேல் பெற்ற கட்சிகளின் விபரம்.
கட்சி | வாக்குகள் % | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பாசக | 23% | 11,07,194 |
மக்களின் சனநாயக கட்சி | 22.7 % | 10,92,203 |
தேசிய மாநாட்டு கட்சி | 20.8 % | 10,00,693 |
இந்திய தேசிய காங்கிரசு | 18 % | 8,67,883 |
கட்சி சாராதவர்கள் (சுயேச்சை) | 6.8 % | 3,29,881 |
மக்களின் சனநாயக கட்சி, பாசக என்று எக்கட்சியும் ஆட்சியமைக்க முன்வராததால் வெள்ளிக்கிழமை அன்று சம்மு காசுமீர் ஆளுநர் என். என். வோரா குடியரசு தலைவர் ஆட்சியை பரிந்துரைத்தார். குடியரசு தலைவரும் அதை ஏற்றுக்கொண்டதால் சம்மு காசுமீர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை அன்று குடியரசு தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது. விதிமுறைப்படி அடுத்த ஆட்சி 2015, சனவரி 19 அன்று பதவியேற்க வேண்டும்.
15 உறுப்பினர்களை உடைய தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா மக்களின் சனநாயக கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக கூறியும்[17] அக்கட்சி ஆட்சியமைக்காததால் குடியரசு தலைவர் ஆட்சிக்கு அக்கட்சியே காரணம் என்று குற்றம் சாட்டினார்.[18]
மசக தலைவர் முப்தி முகமது சையது பிப்ரவரி 28, 2015 அன்று முதல்வராக பதவியேற்றார்[19]. மசகவானது பாசகவுடன் கூட்டணி வைத்து அரசமைத்துள்ளது.[20] பாசகவும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது.
முப்தி முகமது சையது அனந்நாக் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் இலால் அகமது சாவை 6,028 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.