From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் பெப்ரவரி 21, 2013 அன்று மாலை இந்திய நேரப்படி 19:00 மணியளவில் இரண்டு குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தன. கூட்டம் மிகுந்த சுற்றுப்புறப் பகுதியான தில்சுக்நகரில்[6] 100 மீட்டர்களுக்குள்ளேயே இரண்டு குண்டுகளும் வெடித்துள்ளன.[7][8] முதல் குண்டுவெடிப்பு கோனரக் திரையரங்கின் எதிரிலிருந்த ஆனந்த் டிபன் சென்டர் என்ற உணவகத்தின் வெளியே சாலையோரத்தில் வெடித்தது. இரு நிமிடங்கள் கழித்து இரண்டாவது குண்டு வெங்கடாத்திரி திரையரங்கின் அண்மையில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வெடித்துள்ளது.[9][10] முன்னதாக 2012இல் புனேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களையொட்டி தில்லி சிறப்புக் காவல் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்திய முஜாஹிதீன் என நம்பப்படும் கைதிகள் தாங்கள் ஐதராபாத்தின் கூட்டமானப் பகுதிகளை இந்நோக்கில் ஆய்வு செய்ததாக கூறியுள்ளனர்.[11]
2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள் | |
---|---|
இரண்டாம் குண்டு வெடித்த இடம் | |
இடம் | தில்சுக்நகர், ஐதராபாத்து, இந்தியா |
நாள் | பெப்ரவரி 21, 2013 18:58 இலிருந்து 19:01க்குள் (இ.சீ.நே (UTC+5.30)) |
தாக்குதல் வகை | தொடர் குண்டுவெடிப்பு |
ஆயுதம் | கைவினை வெடி குண்டுகள்[1] |
இறப்பு(கள்) | 17[2] |
காயமடைந்தோர் | 119[3] |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | இந்திய முஜாஹிதீன்[4][5] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.