சூரிய கிரகணம் From Wikipedia, the free encyclopedia
2009 சூலை 22 சூரிய கிரகணம் (solar eclipse of July 22, 2009) 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட முழுமையான சூரிய கிரகணம் ஆகும். இந்நிகழ்வு சில இடங்களில் 6 நிமிடங்கள் 39 நொடிகள் வரை நீட்டித்திருந்தது[1]. இந்நிகழ்வைக் காண்பதற்காக கிழக்கு சீனா, நேபாளம், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு பெருந்தொகையான உல்லாசப்பயணிகளும் வானியல் நோக்கர்களும் சென்றிருந்தனர்[1][2][3].
சூலை 22, 2009-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
Totality from Kurigram District, Bangladesh | |
மறைப்பின் வகை | |
இயல்பு | முழு மறைப்பு |
காம்மா | 0.0698 |
அளவு | 1.0799 |
அதியுயர் மறைப்பு | |
காலம் | 399 வி (6 நி 39 வி) |
ஆள் கூறுகள் | 24.2°N 144.1°E |
பட்டையின் அதியுயர் அகலம் | 258 km (160 mi) |
நேரங்கள் (UTC) | |
(P1) பகுதி கிரகணம் துவக்கம் | 23:58:18 |
(U1) முழு கிரகணம் துவக்கம் | 0:51:16 |
பெரும் மறைப்பு | 2:36:25 |
(U4) முழு மறைப்பு முடிவு | 4:19:26 |
(P4) பகுதி கிரகணம் முடிவு | 5:12:25 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 136 (37 of 71) |
அட்டவணை # (SE5000) | 9528 |
இந்த கிரகணம் 1991 ஆம் ஆண்டு ஜூலை 11 இல் நிகழ்ந்த பெரும் சூரிய கிரகணத்தைப் போல சாரோசு தொடரின் ஒரு பகுதியாகும். இத்தொடரின் அடுத்த நிகழ்வு 2032 இல் நிகழும்[4].
இந்நிகழ்வானது ஒரே மாதத்தில் நிகழ்ந்த மூன்று கிரகணங்களில் இரண்டாவதாகும். 2009 இல் ஜூலை 7 ஆம் நாளில் சந்திர கிரகணமும் ஆகஸ்ட் 6 ஆம் நாளில் இன்னுமொரு சந்திர கிரகணமும் நிகழ்ந்தன.
வடக்கு மாலை தீவுகள், வடக்கு இந்தியா, கிழக்கு நேபாளம், வடக்கு வங்காள தேசம், பூட்டான், வடக்கு பிலிப்பீன்ஸ், மியான்மாரின் வடக்கு முனை, மத்திய சீனா, பசிபிக் பெருங்கடல் (ரியூகியூ தீவுகள், மார்ஷல் தீவுகள், கிரிபட்டி உட்பட) ஆகிய இடங்களில் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடிந்தது.
முழுமையான கிரகணம் இந்தியாவின் சூரத், உஜ்ஜைன், இந்தூர், போபால், வாரணாசி, அலகாபாத், கயா, பாட்னா, ஜல்பைகுரி, குவஹாத்தி, இடாநகர் ஆகிய நகரங்களில் காணக்கூடியதாக இருந்தது[5]. பீகாரின் டரெகானா நகரிலேயே மிக அழகான சூரிய கிரகணம் தென்படும் என எதிர்வு கூறப்பட்டது[6][7]. தரெக்னாவில் ஏராளமான விண்வெளி ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும், முக்கியப் பிரமுகர்களும் சூரிய கிரகணத்தைக் காண பெருமளவில் கூடியிருந்தார்கள்[8].
இலங்கையில் சூரிய கிரகணத்தை நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் அவதானிக்க முடிந்தது. கொழும்பு, யாழ்ப்பாணம், காலி உட்பட பல இடங்களில் இச்சூரிய கிரகணம் பகுதியாகத் தென்பட்டது. யாழ். குடா நாட்டில் காலை 5.58 மணி முதல் காலை 7.15 மணி வரையும் கொழும்பில் காலை 6.03 மணி முதல் 7.12 மணி வரையும் காலியில் காலை 6.03 மணி முதல் காலை 7.11 மணி வரையும் தென்பட்டது[9]
சாரோசு தொடர் 136 என்பது 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் 71 கதிரவ மறைப்புகளின் நிகழ்வுகளாகும். சாரோசு தொடர் 1360 சூன் 14 இல் பகுதி மறைப்பாக ஆரம்பமானது. 1504 செப்டம்பர் 8 இல் முதலாவது வலயக் கதிரவ மறைப்பு நிகழ்ந்தது. இது ஒரு கலப்பு நிகழ்வாக 1612 நவம்பர் 22 முதல் 1703 சனவரி 17 வரை நிகழ்ந்து, முழுமையான கதிரவ மறைப்பாக 1721 சனவரி 27 இல் ஆரம்பித்தது. முழுமையான மறைப்பு 2496 மே 13 வரை தொடரும் இத்தொடர் 2622 சூலை 30 இல் பகுதி மறைப்பாக 71-ஆவது நிகழ்வாக முடிவடையும். இதன்மூலம் 1360 இல் ஆரம்பித்த இத்தொடர் 1262 ஆண்டுகளின் பின்னர் 2496 ஆம் ஆண்டில் நிறைவடையும். இத்தொடரின் மிக நீண்ட முழு மறைப்பு 1955 சூன் 20 இல் நிகழ்ந்தது. மொத்தம் 7 நிமிடங்கள், 7.74 செக்கன்கள் இது நீடித்தது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து கதிரவ மறைப்புகளும் நிலாவின் சந்திரனின் இறங்கு கணுவில் நிகழ்கின்றன.[10]
1865 இற்கும் 2117 இற்கும் இடையில் இடம்பெற்ற நிகழ்வுகள் (இல. 29 முதல் 43 வரை) | ||
---|---|---|
29 | 30 | 31 |
ஏப். 25, 1865 |
மே 6, 1883 |
மே 18, 1901 |
32 | 33 | 34 |
மே 29, 1919 |
சூன் 8, 1937 |
சூன் 20, 1955 |
35 | 36 | 37 |
சூன் 30, 1973 |
சூலை 11, 1991 |
சூலை 22, 2009 |
38 | 39 | 40 |
ஆக. 2, 2027 |
ஆக. 12, 2045 |
ஆக. 24, 2063 |
41 | 42 | 43 |
செப் 3, 2081 |
செப் 14, 2099 |
செப் 26, 2117 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.