From Wikipedia, the free encyclopedia
இரியூக்கியூ தீவுகள் (Ryūkyū Islands (琉球列島 Ryūkyū-shotō?), அல்லது நான்செய் தீவுகள் (Nansei Islands (南西諸島 Nansei-shotō?, lit. "Southwest Islands"), கியூசூவிற்கும் சீனக் குடியரசுக்கும் இடையிலான சப்பானி தீவுகள்.[1] இங்குள்ள மக்கள் இரியூக்கியூ மக்கள் எனப்படுகின்றனர்.
14ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளில் இரியூக்கியூ இராச்சியம் (琉球王国 Ryūkyū-ōkoku?) ஆண்டு வந்தது.[2] திறை கட்டும் அரசாட்சியாக சீனப் பேரரசுடன் இருந்து வந்தது.[3]
17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த அரசாட்சி சப்பானுடன் திறை செலுத்தும் நாடாக இணைந்தது.[4] preserving as usual the independence of the kingdom and its rulers.[5]
இத்தீவுகள் கிழக்கு சீனக்கடலின் கீழ்கோடியில் அமைதிப் பெருங்கடலின் மேற்கு கோடியில் அமைந்துள்ளது.
இத்தீவுகள் இரு புவியியல் வலயங்களாக பிரிபட்டுள்ளன: அமாமி தீவை மையமாகக் கொண்ட வடக்கு இரியூக்கியூ தீவுகள், மற்றும் ஒக்கினவா தீவை மையமாக்க் கொண்ட தெற்கு இரியூக்கியூ தீவுகள் சில நேரங்களில் தெற்கு இரியூக்கியூ தீவுகள் ஒகினாவா தீவுகள் என்றும் சாக்கிசிமா தீவுகள் என்றும் மேலும் பிரிக்கப்படுகின்றன.
இத்தீவுகளில் மிகவும் பெரியது ஓக்கினாவா தீவு.[7]
இத்தீவு மக்களால் கராத்தே கண்டுபிடிக்கப்பட்டது; குறிப்பாக ஒக்கினாவா மாகாணத்தில்.
Seamless Wikipedia browsing. On steroids.