1450கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
1450கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1450ஆம் ஆண்டு துவங்கி 1459-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1420கள் 1430கள் 1440கள் - 1450கள் - 1460கள் 1470கள் 1480கள் |
ஆண்டுகள்: | 1450 1451 1452 1453 1454 1455 1456 1457 1458 1459 |
1450
- பெப்ரவரி 26 – பிரான்சிசுக்கோ சிபோர்சா மிலனைக் கைப்பற்றி, அதன் இளவரசனானான். இதன் மூலம் இவனது வம்சம் அடுத்த நூறாண்டுகளுக்கு மிலன் நகரை ஆட்சி செய்தது.
- மே 8 – இங்கிலாந்தின் ஆறாம் என்றிக்கு எதிராக கென்ட் நகரத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- சூலை 6 – கன் பிரான்சிடம் வீழந்தது.
- ஆகத்து 12 – நார்மாண்டியின் கடைசி ஆங்கிலேயப் பகுதியான செர்போர்க் பிரான்சிடம் வீழ்ந்தது.
- அக்டோபர் 5 – யூதர்கள் கீழ் பவேரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- நவம்பர் 3 – பார்செலோனா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- முன்-கொலம்பியக்கால இன்கா நகரமான மச்சு பிச்சு கடல்மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டது.[1]
- குட்டன்பேர்க் தனது முதலாவது அச்சியந்திரத்தை செருமனியின் மாயின்சு நகரில் நிறுவினார்.[2]
- யாழ்ப்பாணத்தில் செண்பகப் பெருமாள் ஆட்சி ஆரம்பமானது.
பிறப்புகள்
1450
- இப்ராகிம் லௌதி, தில்லி சுல்தானகத்தின் 31வது சுல்தான் மற்றும் லௌதி வம்சத்தின் 3வது சுல்தான் (இ. 1526)
- இரண்டாம் நரசிம்ம ராயன், விஜயநகரப் பேரரசின் சாளுவ மரபின் முதல் அரசனான சாளுவ நரசிம்ம தேவ ராயனின் இரண்டாவது மகன் (இ. 1505)
- இரானிமசு போசு, இடச்சு/நெதர்லாந்திய ஓவியர் (இ. 1516)
- சிக்கந்தர் லௌதி, லௌதி வம்சத்தின் 2வது சுல்தான் (இ. 1517)
- திம்ம பூபாலன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1491)
- பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா, இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தை கவனித்த முதல் ஆளுநர் (இ. 1510)
- பிரௌத ராயன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1401)
- ரவிதாசர், வட இந்திய துறவி (இ. 1520)
- வீரநரசிம்ம ராயன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1509)
- ஜான் கபோட், இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1498)
1451
- ஏப்ரல் 22 – முதலாம் இசபெல்லா, காசுடைலின் அரசி (இ. 1504)
- கொலம்பசு, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1506)
- மே 9 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1512)
1452
- ஏப்ரல் 15 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், கண்டுபிடிப்பாளர் (இ. 1519)
- அக்டோபர் 2 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு மன்னர் (இ. 1485)
1453
- அபோன்சோ டி அல்புகெர்க்கே, போர்த்துகல் நாட்டின் அரசியலாளர்; பெரும்படைத் தலைவர் (இ. 1515)
1454
- மார்ச் 9 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1512)
1456
- உமர் ஷேக் மிர்ஸா II, பெர்கானா பள்ளத்தாக்கின் ஆட்சியாளராக இருந்தவர் (இ. 1494)
இறப்புகள்
1450
- செப்டம்பர் 2 - அகமது இப்னு அரபுசா, நடுக்காலத்தில் வாழ்ந்த ஒரு அரபு எழுத்தாளர் மற்றும் பயணி (பி. 1389)
- மே 18 - அப்துல் லத்தீப் மிர்சா, பால்கின் ஆளுநர் (பி. 1420)
1453
- அக்பர்சின், வடக்கு யுவான் அரசமரபின் அரியணைக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் (பி. 1423)
- டக்கோலா, இத்தாலிய அரசு நிர்வாகி, கலைஞர், பொறியியலாளர் (பி. 1382)
1457
1459
- முதலாம் சாமராச உடையார், மைசூர் மன்னர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.