From Wikipedia, the free encyclopedia
இரானிமசு போசு (Hieronymus Bosch (UK: /hɪəˌrɒnɪməs ˈbɒʃ/,[1][2] US: /hɪəˌroʊnɪməs ˈbɒʃ, - ˈbɔːʃ, - ˈbɔːs/,[2][3][4] இடச்சு: [ɦijeːˈroːnimʏz ˈbɔs] (ⓘ);[lower-alpha 1] எனப் பொதுவாக அழைக்கப்பட்ட ஜெரோனிமசு வான் ஆக்கென் (Jheronimus van Aken[5] [jeːˈroːnimʏs fɑn ˈaːkə(n)];[lower-alpha 2] அண். 1450 – 9 ஆகத்து 1516) என்பவர் இடச்சு/நெதர்லாந்திய ஓவியர் ஆவார். ஆரம்பக்கால இடச்சு ஓவியர்களில் இவர் குறிப்பிடத்தக்கவராக இருந்தார். இவரது ஓவியங்கள் பொதுவாக கருவாலி மரப்பட்டைகளில் எண்ணெய் ஓவியங்களாகவும், குறிப்பாக மதக் கருத்துகளைப் பிரதிபலிப்பவையாக இருந்தன.[6] அவரது வாழ்நாளில் அவரது படைப்புகள் நெதர்லாந்து, ஆஸ்திரியா, எசுப்பானியா ஆகிய நாடுகளில் சேகரிக்கப்பட்டு பரவலாக நகலெடுக்கப்பட்டன, குறிப்பாக அவரது நரகத்தைப் பற்றிய கொடூரமான மற்றும் கனவான சித்தரிப்புகள் இவற்றில் உள்ளடங்குகின்றன.
இரானிமசு போசு | |
---|---|
தாய்மொழியில் பெயர் | இரானிமசு போசு |
பிறப்பு | இகோனிமசு வன் ஆக்கம் அண். 1450 செர்த்தோஹெம்போசு, பிரபன்ட்டின் இடச்சி, பர்கந்தியன் நெதர்லாந்து (இன்றைய நெதர்லாந்து) |
இறப்பு | புதைக்கப்பட்ட நாள் செர்த்தோஹெம்போசு, பிரபன்ட்டின் இடச்சி, பர்கந்தியன் நெதர்லாந்து | 9 ஆகத்து 1516 (அகவை 65–66)
தேசியம் | இடச்சு |
அறியப்படுவது | ஓவியர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.