ஹூப்ளி (Hubli) அல்லது ஹூப்பள்ளி, (தமிழ்: பூப்பள்ளி), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்கில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகரம் ஆகும். இது இரட்டை நகரங்களான ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சிப் பகுதியின் ஒரு அங்கமாகும். ஹூப்பள்ளி என்ற பெயர் கன்னட மொழியில் பூக்கும் கொடி என்ற பொருளைத் தருவதாகும். இதன் இரட்டை நகரான தார்வாடுடன் இணைந்த "ஹூப்ளி-தார்வாட்", கர்நாடகத்தில் பெங்களூருவிற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரும் நகரப்பகுதியாகும். தார்வாட் நிர்வாகத் தலைநகராக விளங்குகையில் தார்வாட்டுக்கு தென்கிழக்கே 22 கி.மீ. தொலைவில் உள்ள ஹூப்ளி வணிக மையமாகவும் வட கர்நாடகத்தின் தொழில் முனையமாகவும் விளங்குகிறது. இதன் பின்புல நிலப்பகுதியில் பருத்தியும் நிலக்கடலையும் கூடுதலாக வேளாண்மை செய்யப்படுகின்றன. இந்திய இரயில்வேயின் முக்கிய சந்திப்பாக விளங்கும் ஹூப்ளியில் தென்மேற்கு இரயில்வே மண்டலம் மற்றும் ஹூப்ளி கோட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் ஹூப்ளி, நாடு ...
ஹூப்ளி
மாநகரம்
Hubballi
Thumb
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து இடமாக: சந்திரமௌலீசுவரர் கோவில், கே.எஸ்.சி.ஏ. விளையாட்டரங்கம், ஹுப்ளி-தார்வாட் விரைவுச் சாலை, இராணி சென்னம்மா சதுக்கம், இன்போசிஸ் வளாகம், ஹூப்ளி நகரக் காட்சி
அடைபெயர்(கள்): சின்ன மும்பை, ஹுப்ளி-தார்வாட்[1]
Thumb
ஹூப்ளி
ஹூப்ளி
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் தார்வாட் மாவட்டதில் ஹூப்ளி நகர்த்தின் அமைவிடம்
Thumb
ஹூப்ளி
ஹூப்ளி
ஹூப்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°21′0.78″N 75°08′15.45″E
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்தார்வாட்
அரசு
  மேயர்சுதிர் சராப்
ஏற்றம்
671 m (2,201 ft)
மக்கள்தொகை
 (2011)
  மாநகரம்9,43,857 ஹூப்ளி-தார்வாட்
  பெருநகர்
9,43,788 (ஹூப்ளி-தார்வாட் பெருநகரப் பகுதி)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்கள்
580 001 - 580 064 (தார்வாட் மேற்கு உட்பட) [2]
இடக் குறியீடுதொலைபேசி குறியீடு எண் +91-0836
வாகனப் பதிவுKA 25 (நவநகர் RTO)
KA 63 (காப்பூர் RTO)
அலுவல் மொழிகன்னடம்
இணையதளம்http://www.hdmc.mrc.gov.in
மூடு

மாநிலத்தலைநகர் பெங்களூருவிலிருந்து வடமேற்கே 425 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 4-இல் அமைந்துள்ளது. ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி நகர நிர்வாகத்தை பேணுகிறது. ஹூப்ளி நகரம் 'சிறிய மும்பை' என அழைக்கப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 9,43,788 ஆகும். அதில் 474,518 ஆண்கள் மற்றும் 469,270 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,06,031 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு உடையோர் 7,27,103 ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 92,744 மற்றும் 17232 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 6,36,527 (67.44 %), இசுலாமியர் 2,56,228 (27.15 %), கிறித்தவர்கள் 26,307 (2.79 %), பௌத்தர்கள் 658 (0.07 %), சமணர்கள் 15,236 (1.61 %), சீக்கியர்கள் 1,337 (0.14 %) மற்றும் பிறர் 0. 79% ஆகவுள்ளனர்.[3][4]இங்கு கன்னடம் முதன்மை மொழியாக விளங்குகிறது. மராத்தியும், கொங்கணியும், உருதும் அடுத்தநிலையில் பேசப்படுகின்றன.

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்பநிலை வரைபடம் ஹூப்ளி ...
தட்பவெப்பநிலை வரைபடம்
ஹூப்ளி
பெமாமேஜூஜூ்செடி
 
 
0.0
 
29
15
 
 
0.0
 
32
16
 
 
10
 
35
19
 
 
40
 
36
21
 
 
60
 
35
21
 
 
150
 
28
21
 
 
210
 
26
21
 
 
200
 
26
20
 
 
110
 
28
20
 
 
60
 
29
19
 
 
30
 
29
17
 
 
0.0
 
28
15
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: YR
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0
 
85
58
 
 
0
 
89
60
 
 
0.4
 
94
65
 
 
1.6
 
97
69
 
 
2.4
 
94
70
 
 
5.9
 
83
70
 
 
8.3
 
79
70
 
 
7.9
 
78
68
 
 
4.3
 
82
67
 
 
2.4
 
85
66
 
 
1.2
 
84
62
 
 
0
 
83
60
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)
மூடு

ஹூப்ளி-தார்வாட் அயனமண்டல ஈரப்பதமிக்க மற்றும் உலர்ந்த காலநிலை கொண்டுள்ளது. பெப்ரவரியின் பிற்காலத்திலிருந்து சூன் முற்பகுதிவரையான வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்து உலர்ந்த காலநிலையும் தொடரும் பருவக்காற்று காலத்தில் மிகுந்த ஈரப்பதத்துடன் கூடிய மிதமான வெப்ப காலநிலையும் நிலவுகிறது. அக்டோபர் கடைசி முதல் பெப்ரவரி முற்பகுதிவரை இளங்கூதிர் காலத்தில் மழை ஏதுமின்றி மிதமான வெப்ப காலநிலை நிலவுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவே மிகச்சிறந்த காலமாகும்.

ஹூப்ளி சராசரி கடல்மட்டத்திலிருந்து 626.97 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டு சராசரி மழையளவு 838 மிமீ.[5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.