ஷ்

From Wikipedia, the free encyclopedia

ஷ் () என்பது கிரந்த எழுத்து முறையின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் மொழியில் ஆரம்பத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதுவதற்கு இவ்வெழுத்துப் பயன்படுத்தப்பட்டு, இன்று பிறமொழிச் சொற்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.[1]

விரைவான உண்மைகள் ஷ் ...
ஷ்
தமிழில் பயன்படுத்தப்படும்
கிரந்த எழுத்துகள்
மூடு

ஷகர உயிர்மெய்கள்

ஷகர மெய், 12 உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள வரிசைப் பட்டியல் காட்டுகின்றது.

மேலதிகத் தகவல்கள் சேர்க்கை, உயிர்மெய்கள் ...
சேர்க்கைஉயிர்மெய்கள்
வரிவடிவம்பெயர்
ஷ் + அஷானா
ஷ் + ஆஷாஷாவன்னா
ஷ் + இஷிஷீனா
ஷ் + ஈஷீஷீயன்னா
ஷ் + உஷுஷூனா
ஷ் + ஊஷூஷூவன்னா
ஷ் + எஷெஷேனா
ஷ் + ஏஷேஷேயன்னா
ஷ் + ஐஷைஷையன்னா
ஷ் + ஒஷொஷோனா
ஷ் + ஓஷோஷோவன்னா
ஷ் + ஔஷௌஷௌவன்னா
மூடு

[2]

பயன்பாடு

மணிப்பிரவாள நடையில் எழுதும்போதும் பிற மொழிச் சொற்களை எழுதும்போதும் ஷகர உயிர்மெய்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டுகளாக, ஷங்கர், ஷாங்காய், ஷில்லாங், ஷீலா, ஷுட், ஷூ, ஷெல்ட், ஷேக்ஸ்பியர், ஷைலக், ஷொப்பிங், ஷோனா, ஷௌட், காஷ்மீர் முதலிய சொற்களைக் குறிப்பிடலாம்.

கிரந்தக் கலப்பற்ற தமிழ்

ஷகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் தனித்தமிழ் நடையில் எழுதும்போது ஷகரத்தை டகரமாக எழுதுவது பெருவழக்கு.

ஆனால், மொழிக்கு முதலில் ஷகர உயிர்மெய் வரும்போது தனித்தமிழ் நடையில் அதனைச் சகர உயிர்மெய்யாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஷங்கர்-சங்கர், ஷாங்காய்-சாங்காய்).

சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் ஷகர உயிர்மெய் வந்தால் அதனை டகரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: விஷயம்-விடயம், புஷ்பம்-புட்பம்). சில இடங்களில் அதனைச் சகரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: பொக்கிஷம்-பொக்கிசம், போஷாக்கு-போசாக்கு).[3]

சொல்லின் ஆரம்பத்தில் ஷ் வந்தால் அதனைச் சி என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: ஷ்ரேயா-சிரேயா). சொல்லின் இடையில் ஷ் வந்தால் அதன் பின் வரும் எழுத்தின் மெய் எழுத்தை எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டு: சஷ்டி-சட்டி). சொல்லொன்றின் இறுதியில் ஷ் வருமாயிருந்தால் அதனைச் சு என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: பங்களாதேஷ்-பங்களாதேசு).

விதிவிலக்காக பாஷா என்னும் சொல் பாழை எனத் திரிவதுண்டு.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.