ஷேன் வாட்சன்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

ஷேன் வாட்சன்

ஷேன் ராபர்ட் வாட்சன் (Shane Robert Watson, பிறப்பு: 17 ஜூன், 1981), ஒரு முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் வீரரும் அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார். வலது கை மட்டையாளரான இவர் வலது கை மித விரைவு வீச்சாளர் ஆவார், 2002 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமான இவர் 2016 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.[2] அப்போது அவர் பன்னாட்டு இருபது20 போட்டியின் மட்டையாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.[3][4][5] ஆத்திரேலியாவின் பொற்காலமாகக் கருதப்படும் 2000 களில் ஓய்வுபெற்ற கடைசித் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[6][7][8]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
ஷேன் வாட்சன்
Thumb
2014இல் ஷேன் வாட்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஷேன் ராபர்ட் வாட்சன்
பிறப்பு17 சூன் 1981 (1981-06-17) (அகவை 43)
இப்ஸ்விச், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
பட்டப்பெயர்வாட்டோ
உயரம்1.80[1] m (5 அடி 11 அங்)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை விரைவு-நடுத்தரம்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 391)2 ஜனவரி 2005 எ. பாகிஸ்தான்
கடைசித் தேர்வு8 ஜூலை 2015 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 148)24 மார்ச் 2002 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப5 செப்டம்பர் 2015 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்33
இ20ப அறிமுகம் (தொப்பி 19)24 பிப்ரவரி 2006 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப27 மார்ச் 2016 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2000/01–2003/04தாஸ்மானியா
2004–2005ஹாம்ப்ஷயர்
2004/5–2008/09குயின்ஸ்லாந்து
2008–2015ராஜஸ்தான் ராயல்ஸ்
2010/11–2015/16நியூ சவுத் வேல்ஸ்
2012/13சிட்னி சிக்சர்ஸ்
2012/13பிரிஸ்பேன் ஹீட்
2015/16–2018/19சிட்னி தண்டர்
2016–2017இஸ்லாமாபாத் யுனைடட்
2016–2017ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2016–2017சென்ட் லூசியா ஸ்டார்ஸ்
2018–2020குவெட்டா கிளாடியேட்டர்ஸ்
2018–2020சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 59 190 58 137
ஓட்டங்கள் 3,731 5,757 1,462 9,451
மட்டையாட்ட சராசரி 35.19 40.54 29.24 42.57
100கள்/50கள் 4/24 9/33 1/10 20/54
அதியுயர் ஓட்டம் 176 185* 124* 203*
வீசிய பந்துகள் 5,495 6,466 930 12,164
வீழ்த்தல்கள் 75 168 48 210
பந்துவீச்சு சராசரி 33.68 31.79 24.72 29.97
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 0 0 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 1
சிறந்த பந்துவீச்சு 6/33 4/36 4/15 7/69
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
45/– 64/– 20/– 109/–
மூலம்: ESPNcricinfo, 17 ஜனவரி 2019
மூடு

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 மற்றும் இருபது20 போட்டிகளில் வாட்சன் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். போர்ப்ஸ் இதழின்படி 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகள் வரை அதிகம் சம்பாதித்த இந்தியரல்லாத துடுப்பாட்ட வீரர் ஆவார்.[9][10][11]

இந்தியன் பிரீமியர் லீக்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் துவக்க ஆண்டான 2008 ஆம் ஆண்டில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இவரை 125,000 அமெரிக்க டாலர் மதிப்பில் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. இந்தத் தொடரில் இவர் மட்டையாளராகவும், பந்து வீச்சாளராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்தார். 14 போட்டிகளில் விளையாடிய இவர் இதில் நான்குமுறை ஐம்பது ஓட்டங்களை எடுத்துள்ளார். நான்கு முறை ஆட்டநாயகன் விருதினையும் பெற்றுள்ளார்.மேலும் 17 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். தொடர்நாயகன் விருதினையும் பெற்றுள்ளார்.[12] இந்தத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் மாத்தியூ எய்டனுக்கு இடம் கிடைத்தது. அந்தச் சமயம் அவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். இவருக்கு காயம் ஏற்பட்டதனால் ஆத்திரேலிய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. பின் அந்தத் தொடரில் துவக்கவீரராக களம் இறங்கினார்.[13]

ஆத்திரேலிய தேசிய அணிக்காக விளையாடியதாலும், காயம் ஏற்பட்டதாலும் இவரால் இரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் பருவகாலத்தில் பங்கேற்க இயலவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. பின் 2011 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மீண்டும் அதே அணிக்காக விளையாடினார். ஷேன் வார்னையும் அந்த அணி தக்கவைத்தது.[14]

ஏப்ரல் 22, 2013 ஆம் ஆண்டில் மு. அ. சிதம்பரம் அரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான் போட்டியில் தனது முதல் இருபது20 போட்டியில் நூறு (துடுப்பாட்டம்) அடித்தார். இந்தப் போட்டியில் 61 பந்துகளில் 101 ஓட்டங்கள் அடித்தார். இதில் 6 நான்குகளும், 6 ஆறுகளும் அடங்கும். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இவர் தொடர்நாயகன் விருதினை வென்றார்.

2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் அணி நிர்வாகத்தின் கொள்கையின் படி மீண்டும் ஏலம் நடத்தப்பட்டது. மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[11][15][16][17] அந்த பருவகாலத்தில் அதிக பட்ச விலைக்கு இவரை ஏலத்தில் எடுத்தனர். மேலும் அந்தப் பருவத்தின் தலைவராகவும்நியமிக்கப்பட்டார்.[18]

ஏப்ரல் 20, 2018 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடினார். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நூறு அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.