சில்பா ஷெட்டி குந்த்ரா (Shilpa Shetty Kundra)(பிறப்பு அஸ்வினி ஷெட்டி[1][2] ஜூன் 8,1975)[3][4] ஓர் இந்திய நடிகையும் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையுமாவார். இவர் பாஸிகர் (1993) என்ற இந்தி அதிரடித் திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். இது சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. மெயின் கிலாடி து அனாரி (1994) மற்றும் ஜான்வார் (1999) போன்ற அதிரடி திரைப்படங்களிலும் தோன்றி ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார்.[5]

விரைவான உண்மைகள் சில்பா ஷெட்டிShilpa Shetty, பிறப்பு ...
சில்பா ஷெட்டி
Shilpa Shetty
Thumb
2023 இல் சில்பா
பிறப்புஅஸ்வினி ஷெட்டி
8 சூன் 1975 (1975-06-08) (அகவை 49)
மங்களூர், கருநாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்சில்பா ஷெட்டி குந்த்ரா
பணி
  • நடிகை
  • தொலைக்காட்சி ஆளுமை
செயற்பாட்டுக்
காலம்
1993–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இராஜ் குந்த்ரா (தி. 2009)
பிள்ளைகள்2
உறவினர்கள்சமித்தா ஷெட்டி (சகோதரி)
மூடு

ஆரம்பகால வாழ்க்கை.

கர்நாடகாவின் மங்களூரில் துளு பேசும் பண்ட் குடும்பத்தில் சில்பா ஷெட்டி பிறந்தார்.[6][7][8]

இவர் சுரேந்திரா மற்றும் சுனந்தா ஷெட்டியின் மூத்த மகள் ஆவார். இவரது பெற்றோர் மருந்துத் துறையில் பயன்படுத்தப்படும் மூடிகள் தயாரிப்பவர்களாக இருக்கின்றனர்.[9] ஷில்பாவின் தாய் மொழி துளு ஆகும். எனினும் இவர் ஆங்கிலம், கன்னடம், மராத்தி, இந்தி, தமிழ், குஜராத்தி, தெலுங்கு, உருது மற்றும் அடிப்படை பிரெஞ்சு போன்ற மொழிகளும் பேசுவார். இவரது மூத்த சகோதரி ஷமிதா ஷெட்டியும் ஒரு நடிகையாவார்.

செம்பூரில் உள்ள செயின்ட் அந்தோனி பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், மாதுங்காவிலுள்ள போடார் கல்லூரியிலும் ஷெட்டி கல்வி பயின்றார்.[10] பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரான இவர் தனது பள்ளியில் கைப்பந்து அணியின் தலைவராகவும் இருந்தார்.[11]

Thumb
2007, பன்னாட்டு இந்திய திரைப்பட விருது வழங்கும் நிகழச்சியில் சில்பா,

திரை வாழ்க்கை

தட்கன் (2000) என்ற காதல் நாடகத் திரைப்படம் ஷெட்டியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியன் (2001) மற்றும் ரிஷ்தே (2002) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான இரண்டாவது பிலிம்பேர் பரிந்துரையைப் பெற்றார். 2004 ஆம் ஆண்டு வெளியான பிர் மிலேங்கே என்ற படத்தில் எயிட்சு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்ததற்காக ஷெட்டி பாராட்டுக்களைப் பெற்றார். இது சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது.

2006 ஆம் ஆண்டில், ஜலக் திக்லா ஜா என்ற நடன உண்மைநிலை நிகழ்ச்சியின் நடுவராக தொலைக்காட்சியில் நுழைந்தார். 2007 ஆம் ஆண்டில் சில்பா, பிரித்தானிய செலிபிரிட்டி பிக் பிரதர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதில் இவருடன் பங்கு பெற்ற ஜேட் கூடி, ஜோ ஓ'மேயரா, டேனியல் லியோட் ஆகியோரால் சர்வதேச இனவெறி சர்ச்சையில் சிக்கிய பிறகு சில்பா நிகழ்ச்சியின் இறுதியில் 63% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[12]. அச்சம்பவம் இவரை 2007 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் மீண்டும் நிலைநிறுத்தியது. அந்த ஆண்டு இவர் நடித்த லைஃப் இன் எ... மெட்ரோ, ஆப்னே ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றி பெற்றன. லைஃப் இன் எ... மெட்ரோவில் இவரது நடிப்பு சிறப்பாக விமர்சிக்கப்பட்டது.[13] தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் நிகழ்ச்சியின் இந்திய பதிப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது பருவத்தை தொகுத்து வழங்கினார். ஷெட்டி பின்னர் ஜாரா நாட்ச்கே திகா (2010), நாச் பாலியே (ஐடி2) மற்றும் சூப்பர் டான்சர் (ஐடி3) உள்ளிட்ட பல நடன மற்றும் இசைப்-போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக தோன்றினார். மேலும் இவர் இந்தியன் ஐடல் (ஐடி1) நிகழ்ச்சியில் தோன்றினார். இவர் 2021 ஆம் ஆண்டில் நகைச்சுவைத் திரைப்படமான ஹங்கமா 2 மூலம் மீண்டும் நடிபிற்குத் திரும்பினார். அதன் பின்னர் இன்டியன் போலிஸ் போர்ஸ் (2024) என்ற அதிரடித் தொடரில் நடித்தார்.

பிற பணிகள்

தனது திரை வேலைகளைத் தவிர, ஷெட்டி பல்வேறு பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான பிரபல ஒப்புதலாளராக உள்ளார். மேலும் பெண்ணியம், சைவ உணவு மற்றும் விலங்கு உரிமைகள் போன்ற தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் குரல் கொடுத்து வருகிறார்.[14][15][16][17] சர்க்கஸ்களில் காட்டு விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஷெட்டி 2006 முதல் பீட்டாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் ஒரு உடற்பயிற்சி ஆர்வலரும் ஆவார். மேலும் 2015 ஆம் ஆண்டில் தனது சொந்த யோகா இசைத் தொகுப்பை அறிமுகப்படுத்தினார். இந்திய அரசால் தொடங்கப்பட்ட ‘பிட் இந்தியா இயக்க’ம் போன்ற பல உடற்பயிற்சி பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார். ஸ்வச் பாரத் மிஷன் தூய்மை பிரச்சாரத்தில் இவர் செய்த பணிக்காக ஷெட்டிக்கு சாம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச் விருது வழங்கப்பட்டது. 2009 முதல் 2015 வரை, இவர் இந்தியன் பிரீமியர் லீக் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பகுதி உரிமையாளராக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

பிப்ரவரி 2009 இல், சில்பா ஷெட்டி இந்தியன் பிரீமியர் லீக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக இருந்த ராஜ் குந்த்ரா என்பவரை நவம்பர் 22,2009 அன்று திருமணம் செய்து கொண்டார்.[18][19] இவர்களுக்கு 21 மே 2012 அன்று ஒரு மகன் பிறந்தார்.[20] பின்னர் இரண்டாவதாக பெண் குழதை, 15 பிப்ரவரி 2020 அன்று பதிலித்தாய் மூலம் பிறந்தது.[21][22]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.