விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்
From Wikipedia, the free encyclopedia
விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) அல்லது பீட்டா (PETA, /ˈpiːtɑː/); அல்லது PeTA) ஐக்கிய அமெரிக்க நாட்டில் வர்ஜீனியா மாநிலத்து நோர்போக் நகரில் விலங்கு வதைகளைத் தடுக்குமாறு உருவான தன்னார்வல அமைப்பாகும்; இதன் பன்னாட்டுத் தலைவராக இங்க்ரிட் நியூகர்க் உள்ளார். இலாபநோக்கற்ற இவ்வமைப்பில் 300 ஊழியர்களும், 3 மில்லியன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர்; உலகளவில் இத்துணை அளவிலான உரிமைக் குழு இதுவே ஆகும். இதன் முழக்கம் "விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும் சோதனைகள் நடத்தவும் மகிழ்ச்சி தரவும் எவ்விதத்திலும் துன்புறுத்தப்படவும் உண்டானவை இல்லை" ஆகும்.[3]
![]() | |
உருவாக்கம் | மார்ச்சு 1980 |
---|---|
நிறுவனர் | இங்க்ரிட் நியூகர்க், அலெக்ஸ் பச்சேகோ |
வகை | ஐ.அ நாட்டின் 501(c)(3) பிரிவின்படியான தன்னார்வல அமைப்பு |
நோக்கம் | விலங்குரிமை |
தலைமையகம் |
|
உறுப்பினர் | 3,000,000 (including supporters)[1] |
வருவாய் | 2014ஆம் ஆண்டில் $43 மில்லியன்[2] |
ஊழியர்கள் | 300 |
முழக்கம் | "விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும் சோதனைகள் நடத்தவும் மகிழ்ச்சி தரவும் எவ்விதத்திலும் துன்புறத்தப்படவும் உண்டானவை இல்லை." |
வலைத்தளம் | peta.org |
மார்ச்சு 1980இல் நியூகர்க், அலெக்ஸ் பச்சேகோ ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1981 கோடைகாலத்தில் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது; மேரிலாந்தின் சில்வர் ஸ்பிரிங்கில் நடத்தைசார் ஆய்வுக் கழகத்தில் 17 மகாக்கெ குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனைகளைக் குறித்த சில்வர் ஸ்பிரிங் குரங்குகள் வழக்கு என்ற வழக்கினால் பெரிதும் அறியப்பட்டது. இந்த வழக்கு பத்தாண்டுகள் தொடர்ந்து நடந்தது; ஐக்கிய இராச்சியத்தில் காவல்துறையால் விலங்குகள் ஆய்வகம் ஒன்று சோதனையிடப்பட்ட ஒரே நிகழ்வாகவும் அமைந்தது; 1985இல் விலங்குகள் நல்வாழ்வு சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின்னர் பீட்டா உலகளவில் அறியப்பட்ட அமைப்பாக மாறியது.[4] இன்று இது நான்கு முதன்மையான பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடுகின்றது—தொழிற்சாலைப் பண்ணையம், விலங்கின மென்மயிர் பண்ணையம், விலங்குகள் சோதனை, மற்றும் மனமகிழ்ச்சிக்காக விலங்குகள் பயன்பாடு. தவிரவும் இந்த அமைப்பு மாமிசம், மீன் உண்ணுதல், நோய்ப்பூச்சிகளைக் கொல்லுதல், நாய்களைச் சங்கிலியிட்டு பின்புறம் வைத்தல், சேவல் சண்டை, நாய்ச் சண்டை, ஆட்டுச் சண்டை, காளைச் சண்டை போன்றவற்றை எதிர்த்தும் போராடுகின்றது.[5]

விலங்குகள் உரிமை இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்த அமைப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நியூகிர்க்கும் பாச்சேகோவும் ஐக்கிய அமெரிக்காவில் விலங்குரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய போதிலும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை எனச் சிலர் கருதுகின்றனர். இவர்கள், இது விலங்குகள் நல்வாழ்வு குழுவாகச் செயல்படுகின்றதே தவிர விலங்குரிமை குழுவாகச் செயல்படவில்லை எனக் குறை கூறுகின்றனர்.[6] இதற்கு 2001இல் பதிலிறுத்த நியூகிர்க் பீட்டா விலங்குரிமை என்ற இலக்கை முன்வைத்து பரிசு-தண்டனை என்ற விதத்திலே இடைக்காலத்தில் நகர்வதாகக் குறிப்பிட்டார்.[7] பீட்டாவின் விலங்கு மென்மயிர் ஆடை எதிர்ப்பு போராட்டங்களில் மிகக் குறைந்த ஆடைகளில் பெண் போராளிகள் பங்கேற்பதற்குப் பெண்ணியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தவிரவும் ஊடகப் பார்வைக்காக நடத்தப்படும் பரபரப்பு நிகழ்வுகளால் உண்மையான விலங்குரிமைகள் முக்கியமற்றதாக ஆக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. நியூகிர்க் மறுமொழிகையில், பீட்டா வெற்றிபெற "ஊடக நெறி பிறழ்ந்தவர்களாக" இருப்பது அவசியம் என்றார். "இது எங்கள் கடமை. நாங்கள் அமைதியாக இருந்து அலைகளை உருவாக்காவிட்டால் பயனில்லை" என்றார்.[8]
பீட்டாவின் முதன்மை வலைத்தளம் முதிர் அகவையர்களுக்காகவும் காய்கனி மட்டுமே உண்போருக்குமானது. தாவர உணவு முறை, கண்டிப்பான தாவர உணவுமுறை அல்லது அவற்றிற்கு முயலும் விடலைப் பருவத்தினருக்கு PETA2 என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்சான்றுகள்
மேலும் அறிய
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.