வேவு வானூர்தி
From Wikipedia, the free encyclopedia
வேவு வானூர்தி அல்லது உளவு வானூர்தி என்பது பட புலனாய்வு சேகரிப்பு (ஒளிப்படம் எடுத்தல் உட்பட), சிமிக்கை புலனாய்வு, குறிப்புப்பாதை மற்றும் அளவிடல் புலனாய்வு உள்ளிட்டவற்றை சேகரிப்பதுடன் வான் வேவு பார்த்தல் நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு படைத்துறை வானூர்தி ஆகும். நவீன தொழில்நுட்பம் சில வானூர்திகளையும் ஆளில்லாத வானூர்திகளையும் பொது நுண்ணறிவு சேகரிப்புக்கு கூடுதலாக நிகழ்நேர கண்காணிப்பை மேற்கொள்ள உதவுகிறது.

கதிரலைக் கும்பா போன்ற சாதனங்களின் வளர்ச்சிக்கு முன்னர், படைத்துறையினர் எதிரிகளின் நடமாட்டத்தை காட்சி மூலம் கண்காணிக்கவும் அவதானிக்கவும் உளவு வானூர்திகளை நம்பியிருந்தனர். ஓர் எடுத்துக்காட்டு, இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளால் பயன்படுத்தப்பட்ட பிபிவை கட்டலினா கடல் அவதானிப்பு பறக்கும் படகு வானூர்தி: ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் கட்டலினாக்களின் பறப்பின் மூலம் மிட்வே தீவை நோக்கி வரும் சப்பானிய கடற்படையின் ஒரு கப்பற் படைத் தொகுதியைக் கண்டுகொண்டது. இதனால் மிட்வே சமர் தொடங்கியது.[1]
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.