From Wikipedia, the free encyclopedia
வில்லியம் கோப்பல்லாவ (William Gopallawa, சிங்களம்: විලියම් ගොපල්ලව; 17 செப்டம்பர் 1896 – 31 சனவரி 1981) இலங்கையின் கடைசி மகாதேசாதிபதியாக (ஆளுநர்) 1962 முதல் 1972 வரை பதவியில் இருந்தவரும், இலங்கை மேலாட்சியாக இருந்து குடியரசாக மாறியபோது 1972 முதல் 1978 வரை முதலாவதும் கடைசியுமான நிறைவேற்றதிகாரம் அற்ற சனாதிபதியாகப் பதவியில் இருந்தவரும் ஆவார்.
வில்லியம் கோபல்லாவ William Gopallawa | |
---|---|
විලියම් ගොපල්ලව | |
1961 இல் கோபல்லாவ | |
இலங்கையின் 1-ஆவது குடியரசுத் தலைவர் | |
பதவியில் 22 மே 1972 – 4 பெப்ரவரி 1978 | |
பிரதமர் | |
முன்னையவர் | பதவி உருவாக்கம் (2-ஆம் எலிசபெத் இலங்கையின் அரசியாக) |
பின்னவர் | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா |
4-ஆவது மகாதேசாதிபதி | |
பதவியில் 2 மார்ச் 1962 – 22 மே 1972 | |
ஆட்சியாளர் | இரண்டாம் எலிசபெத் |
பிரதமர் | |
முன்னையவர் | சேர் ஒலிவர் குணதிலக்க |
பின்னவர் | பதவி ஒழிக்கப்பட்டது (கோபல்லாவ குடியரசுத் தலைவரானார்) |
கூட்டுசேரா இயக்கத்தின் 5-ஆவது செயலாளர் நாயகம் | |
பதவியில் 16 ஆகத்து 1976 – 4 பெப்ரவரி 1978 | |
பின்னவர் | ஜே. ஆர். ஜெயவர்தனா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மாத்தளை, இலங்கை | 17 செப்டம்பர் 1896
இறப்பு | 31 சனவரி 1981 84) கொழும்பு, இலங்கை | (அகவை
அரசியல் கட்சி | சுயேச்சை |
துணைவர்(கள்) | சீலாவதி ரம்புக்வெல்ல (தி. 1928; இற. 1977) |
பிள்ளைகள் | 5 |
முன்னாள் கல்லூரி |
|
கோபல்லாவ இலங்கை சுதந்திரக் கட்சிவின் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் இரு தடவைகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் டட்லி சேனாநாயக்க அரசில் ஒரு தடவையும் மகாதேசாதிபதியாக இருந்துள்ளார். இவர் 1958–1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961–1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார்.
இவரது மகன், மொண்டி கோப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுபட்டவராவார்.
வில்லியம் கோபல்லாவ இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளையில் அலுவிகாரை என்ற கிராமத்தில் துல்லேவ மகா வளவில் பிறந்தவர். இவரது தாயார் டிக்கிரி குமாரிகாமி துல்லேவ மூலமாக 1815 ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தில் சிங்களவர் சார்பாகக் கையொப்பமிட்ட துல்லேவ திசாவையின் உறவினர் ஆவார். தந்தை டிக்கிரி பண்டார கோபல்லாவ இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது இறந்துவிட்டார்.[1][2] தனது தொடக்கக் கல்வியை துல்லேவ கிராமப் பள்ளியிலும், கண்டி புனித யோவான் கல்லூரியிலும் பயின்றார். தனது இடைநிலைக் கல்வியை கண்டி தர்மராஜா கல்லூரியிலும் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் பயின்றார்.[1] 1917 இல் கேம்பிரிட்ச் முதுநிலை சான்றிதழ் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், மாத்தளைக்குத் திரும்பி, பௌத்த ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தார், அங்கு மாணவர்களின் நலனுக்காக நூலகம், சாரணப்படைகளை அமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.
1920 இல், கோபல்லாவ கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1924 இல் சட்டவறிஞர் ஆனார். கண்டியிலும் மாத்தளையிலும் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர், 1939 இல் கண்டி மாநகர ஆணையாளர் ஆனார். பின்னர் கொழும்பு மாநகர சபையின் ஆணியாளராகப் பணியாற்றினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.