Remove ads
ஆன்மீக அறிவியல் From Wikipedia, the free encyclopedia
விண்டோஸ் 98 வரைகலை இயங்குதளமானது ஜூன் 25, 1998 அன்றுமைக்ரோசாப்டினால் வெளியிடப்படது.
ஓர் மாதிரி விண்டோஸ் 98 டெக்ஸ்டாப் | |
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
---|---|
அண்மை வெளியீடு | 4.10.2222A / ஏப்ரல் 23 1999 |
உரிமம் | மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம் |
இணையத்தளம் | www.microsoft.com/windows98 |
இவ் இயங்குதளம் விண்டோஸ் 95 இன் மேம்படுத்தப் பட்ட ஓர் பதிப்பாகும். இவ்வியங்தளத்தில் புதியதாக USB அறிமுகம் செய்யப் பட்டது. FAT32 கோப்புமுறையை ஆதரித்தால் வன்வட்டின் (ஹாட்டிஸ்க் - Harddisk) பிரிவு (Partition) ஒன்றில் 2 GB இடப்பிரச்சினை இருக்கவிலையெனினும் அதிகூடிய பிரிவுன் அளவானது 32 GB ஆகும். இண்டநெட் எக்ஸ்புளேளர் உலாவியானது இவ்வியங்குதளத்திலும் கூட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியானது ஆக்டிவ் டெஸ்டாப் (en:Active Desktop) என்றழைக்கப் படுகின்றது.
ஏப்ரல் 1998 இல் கொம்டெக்ஸ்ஸில் (en:Comdex) இவ்வியங்குதளத்தின் இணைத்தவுடன் இயங்கும் (Plug and Play) வசதி இதில் ஓர் முக்கிய அம்சமென பில்கேட்ஸ் குறிப்பிட்டுக்கூறினார். எனினும் அவரின் உதவியாளர் ஸ்கானரை (Scanner) இணைத்து அதற்குரிய மென்பொருளை நிறுவமுயன்றபோது அவ்வியங்குதளம் நிலைகுலைந்தது (crashed). அப்போது பில்கேட்ஸ் இதற்காகத்தான் இன்னமும் மக்களிடம் விண்டொஸ் 98 ஐ வழங்கவில்லை என்றார்
விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பானது 5 மே 1999 இல் வெளியிடப்பட்டது. இதில் மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 4 இற்குப் பதிலாக இதிலும் வேகமான இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 இணைக்கப்பட்டது. அத்துடன் இணைய இணைப்பைப் பகிரும் வசதிகளூடாக ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகள் வலையமைப்பில் ஒரே இணைய இணைப்பைப் பாவிக்கக்கூடியாத உள்ளது.
முதன் முதலாக விண்டோஸ் 98 புதிய வன்வட்டில் நிறுவுவதாக இருந்தால் fdisk கட்டளை மூலம் வன்வட்டைப் பிரிக்கவேண்டும். பின்னர் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஆக்டிவ் பாட்டிஷன் (Active Partition) ஆக்கிவிட்டு நிறுவலை மேற்கொள்ளலாம்.
வன்வட்டினை Format பண்ண format /q/u/s c: என்னும் கட்டளையை வழங்கலாம். இதில் q என்பது விரைவாக என்பதைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான quick ஐக் குறிப்பிடுகின்றது. இது முதற்தடவையாக போமட் பண்ணினால் ஆதரிக்காது. U என்பது நிபந்தனைகள் அற்ற என்பதைக் குறிக்கும் ஆங்கில பதமான Unconditional என்பதன் தமிழாக்கம் ஆகும். S என்பது சிஸ்டம் என்பதைக் குறிப்பிடுகின்றது எந்தக் வட்டின் பகுதியில் இருந்து கணினி ஆரம்பிக்கவேண்டுமோ அந்த டிரைவைப் போமட் பண்ணுவதற்கு மாத்திரமே /s என்ற சுவிச்சைப் பாவிக்கவும்.
விண்டோஸ் 98 இறுவட்டில் கீழுள்ளழவாறு MSBATCH.INF கோப்பினை உருவாக்கினால் நிறுவலின் போது கேட்கும் தொடரில்லக்கம் போன்றவற்றை வழங்கலாம். கீழே மைக்ரோசாப்டின் பதிப்புரிமைகாரணாமாக் ஓர் போலியான தொடரிக்கம் தரப்பட்டுள்ளது.
[BatchSetup] Version=3.0 (32-bit) SaveDate=01/29/00
[Version] Signature = "$CHICAGO$"
[Setup]
ProductKey="This-is-a-fake-key"
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ |
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர் |
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0 |
வரவிருப்பவை: 2008 மற்றும் 7 |
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.