விக்கிரம் சாராபாய்
இந்திய இயற்பிலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய இயற்பிலாளர் From Wikipedia, the free encyclopedia
விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971)[4] என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார்.[5] 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.[6]
விக்கிரம் அம்பாலால் சாராபாய் | |
---|---|
முனைவர். விக்கிரம் சாராபாய் | |
பிறப்பு | [1][2] அகமதாபாத், இந்தியா | 12 ஆகத்து 1919
இறப்பு | 30 திசம்பர் 1971 52) கேரளா, இந்தியா | (அகவை
தேசியம் | இந்தியர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் |
ஆய்வு நெறியாளர் | சர். ச.வெ.இராமன் |
அறியப்படுவது | இந்திய விண்வெளித் திட்டம் |
விருதுகள் | பத்ம பூசன் (1966) பத்ம விபூசண் (இறந்த பிறகு அளிக்கப்பட்டது) (1972)[3] |
1919 ஆம் ஆண்டு ஆகத்து 12 அன்று ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும், இயற்பியலிலும் இருந்தது.
இங்கிலாந்தில் பி. எச். டி ஆராய்ச்சியை முடித்துத் திரும்பிய சாராபாய், ஆமதாபாதில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory) 11 நவம்பர் 1947 இல் நிறுவினார்.[7] 1955 இல் காசுமீரம் குலுமார்கில் அதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கோடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவினார்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.
விண்வெளித்திட்டங்கள் தவிர, பஞ்சாலைத் தொழில், மேலாண்மைப்பயிற்று நிலையம் ஆகியவற்றையும் தொடங்கினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.