பரந்த நோக்கில் வளிப் பதனம் (air condition) என்பது, குளிரூட்டல், வெப்பமூட்டல், காற்றோட்டம் கூட்டல், தொற்று நீக்கல் போன்ற , உடல் வசதிக்காக வளியின் நிலைமையை கட்டுப்படுத்துகின்ற அல்லது மேம்படுத்துகின்ற பலவற்றைக் குறிப்பிடலாம்[1]. எனினும் பொது வழக்கில், வளிப் பதனம் என்பது, கட்டிடங்களுக்குள் உள்ள வளியின் குளிரூட்டலையும், ஈரப்பதம் குறைத்தலையுமே (dehumidification) குறிக்கிறது.
வளிப் பதனம், வளிப் பதனப் பொறிகள் மூலம் செய்யப்படுகின்றன. வளிப் பதனப் பொறி, குளிரூட்டற் சுற்று முறையைப் பயன்படுத்தி வளியிலுள்ள வெப்பத்தை உறிஞ்சி வளியின் வெப்பநிலையைக் குறைக்கிறது. தற்கால வளிப் பதனப் பொறிகள், உடல்வசதிக் குளிரூட்டலுக்காகக் கட்டிடங்களிலும், போக்குவரத்து ஊர்திகளிலுமே பெரிதும் பயன்படுகின்றன.
வரலாறு
இயந்திரங்களைப் பயன்படுத்தி வளிப் பதனம் செய்வது ஒரு அண்மைக்காலப் புத்தாக்கம் ஆகும். ஆனால், கட்டிடங்களைக் குளிரூட்டுவது என்பது நீண்ட கால வரலாறு உடையது. பண்டைக்கால எகிப்தியர்கள் நீர்காவியில் இருந்து நீரைச் சில வீடுகளின் சுவர்களைச் சுற்றிச் செலுத்துவதன் மூலம் குளிரூட்டியது தெரிய வந்துள்ளது. மத்தியகாலப் பாரசீகத்தில், நீர்த் தொட்டிகளையும், காற்றுக் கோபுரங்களையும் பயன்படுத்திக் குளிரூட்டியுள்ளனர்.
1820 ஆம் ஆண்டில், பிரித்தானிய அறிவியலாளரான மைக்கேல் பாரடே, அமுக்கத்தின் மூலம் அமோனியாவை நீர்மமாக்கி, அதனை மீண்டும் சடுதியாகக் குறைந்த அமுக்கத்தில் ஆவியாக விடுவதன்மூலம் குளிரூட்ட முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். 1942 ஆம் ஆண்டில், புளோரிடாவைச் சேர்ந்த மருத்துவரான ஜான் கோரீ (John Gorrie) என்பவர், இந்த முறை மூலம், பனிக்கட்டிகளை உண்டாக்கியதுடன், தனது நோயாளிகளின் அறைகளைக் குளிரூட்டவும் இதனைப் பயன்படுத்தினார்.[2] இவர் தனது பனிக்கட்டி உருவாக்கும் பொறியைக் கட்டிடங்களில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்த எண்ணி இருந்ததுடன், மையப்படுத்திய வளிப் பதன முறைமை ஒன்றின் மூலம் முழு நகரங்களையுமே குளிர்மைப் படுத்த முடியும் என்ற தொலை நோக்கையும் கொண்டிருந்தார்.[3]
குறிப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.