From Wikipedia, the free encyclopedia
வறண்ட சருமம் (xeroderma, xerodermia, அல்லது xerosis cutis) என்பது வறண்ட அல்லது உலர்ந்த சருமம் (dry skin) என்று பொருள்படக்கூடிய கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது.[1] இது சருமத்தின் புறத்தொகுதி சம்பந்தப்பட்டது. இதனை சில எரிச்சல் நீக்கிகள் அல்லது சருமத்தினில் ஈரப்பதம் உருவாக்கும் சில மருந்துகள் கொண்டு சரிசெய்வர். இது பொதுவாக உச்சந்தலை, கால்களின் கீழ்ப்பகுதி, கைகள், விரல்கள், அடிவயிற்றுப் பகுதி மற்றும் தொடைகள் ஆகியவற்றில் ஏற்படக்கூடியது. இதன் அறிகுறிகளில் தோலின் வெளிப்புற சருமத்தொகுதி நீங்குவது முக்கியமானதாகும். அத்துடன் அரிப்பு மற்றும் சரும வெடிப்புக்கள் போன்றவையும் இதன் அறிகுறிகளில் அடங்கும்.[2] கடினமான திட்டுக்கள் போன்ற அமைப்பு மற்றும் செதில்கள் போன்ற வறட்சியான தோற்றத்தினை இவை ஏற்படுத்தும்.
Xerosis | |
---|---|
The surface of the knuckles of a hand with xeroderma | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல், தோல் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | E50.0-E50.3, H11.1, L85.3 |
ஐ.சி.டி.-9 | 264.0-264.3, 372.53, 706.8 |
நோய்களின் தரவுத்தளம் | 32733 |
மெரிசின்பிளசு | 000835 |
வறண்ட சருமத்தினால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பாதிக்கப்படுவர். இளம் வயதினருக்கு தற்காலிகமாக ஏற்படும் இந்த வறண்ட சருமம், வயதானவர்களுக்கு நிரந்தரமாக பாதிக்கப்படுவதும் உண்டு. மரபணுக்கள் காரணமாகவும் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. தைராய்டு பிரச்சினைகள், ஒவ்வாமைகள் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கும் வறண்ட சருமம் ஏற்படலாம். இதில் இளம்வயதினரை விட வயதானவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இது மிகவும் சாதாரணமாக பெரும்பாலானோர்க்கு ஏற்படும் ஒன்று. இது குளிர்காலத்தில் அதிகம் ஏற்படும். குளிர்காலத்தில், சுற்றுபுறத்தில் குளிர்ந்த காற்று இருக்கும், உடலின் உட்புறத்தில் சூடான காற்று இருக்கும். இவை ஏற்படுத்தும் வெப்பநிலை வேறுபாடுகள்தான் சரும தோலினைப் பாதித்து, உலர் சருமத்தினை ஏற்படுத்துகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் டி, சில நோய்கள் ஏற்படுத்தும் உடல் வேறுபாடுகள், வேனிற்கட்டிகள் அல்லது சில மருந்துகள் கூட இந்த விளைவினை ஏற்படுத்தலாம்.[3] சில துணி துவைக்கும் சோப்புப் பொடி அல்லது பாத்திரங்களை கழுவ பயன்படுத்தும் சோப்புப் பொடி போன்றவை கூட இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அது உடலின் பண்புகளைப் பொறுத்து மாறுபடும்.
உடலின் சருமம் ஈரப்பதம் மற்றும் எண்ணெய், மீள் தன்மைக்கான குணத்தினை இழக்கும்போது, தோலின் வெளிப்புற அடுக்கு இறுக்கம் மற்றும் கடினமானதாக மாறும். இவை உடலின் உட்புறக் காரணிகள். உடலுக்கு வெளிப்புறமுள்ள தூண்டுகாரணிகள் பின்வருமாறு:
காய்கறி எண்ணெய்/வெண்ணெய், பெட்ரோலிய எண்ணெய்/பாகு, திரவ மருந்துப் பொருட்கள் மற்றும் ஆட்டுக்கொழுப்புப் பொருள் போன்ற பல பொருட்கள் வறண்ட சருமத்தின் தடுப்பான்களாக பயன்படுத்தப்படுகின்றன.[4] முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய பொருட்களை தேவையான உடல்பாகங்களில் தடவிக்கொள்ளலாம். பின்னர் எளிமையாக உடல் பாகங்களைத் தட்டிக்கொடுத்து அவற்றின் வெளிப்புறத்தோல் வெளியேறாதபடி பார்த்துக்கொள்ளலாம்.[5]
தொடர்ச்சியாக சில நாட்களுக்கு வறண்ட சருமமாகத் தோன்றும் உடல்பகுதியில் எரிச்சல் நீக்கிகள் அல்லது திரவ மருந்துப் பொருட்களை செயல்படுத்துவதன் மூலம் வறண்ட சருமத்தினைக் விரைவாக குறைக்க இயலும். சில கனிம ஜெல்லி, கனிம எண்ணெய், காய்கறி எண்ணெய் அல்லது வெண்ணெய் போன்றவை சிறந்த சிகிச்சை முடிவுகளைக் கொடுக்கவல்லது. இவை சருமத்தினை வறண்ட நிலையிலிருந்து காக்கும். ஆட்டின் கம்பளியில் இருந்து எடுக்கப்படும் கொழுப்புப் பொருட்கள் கலவையினை பாதிக்கப்பட்ட இடத்தில் செயல்படுத்துவது முந்தைய காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த முறை சிகிச்சை வறண்ட சருமத்திற்கான சிகிச்சையில் மிகவும் முக்கியமானது, ஆற்றல்மிக்கது. சுத்தமான ஆட்டின் கொழுப்புப் பொருட்கள் சிறிது மொழுகுத் தன்மையுடன் இருப்பதனால் அவற்றினை பெரும்பாலான மக்கள் சாதாரணமாக பயன்படுத்த கூச்சப்படுகின்றனர். அதனால் முறைப்படுத்தப்பட்ட ஆட்டின் கொழுப்புப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை சுத்தமான ஆட்டின் கொழுப்பினைவிட மிருதுவானது, அதனால் அநேக மக்கள் இதனை எளிமையாகவும், கூச்சமில்லாமலும் பயன்படுத்துகின்றனர்.
சிலரின் உடல் சருமமானது வாசனை திரவியங்கள், அழகுப் பொருட்கள் அல்லது கொழுப்புப் பொருட்கள் கொண்ட திரவங்கள் போன்றவற்றிற்கு ஒவ்வாமை கொண்டவையாக இருக்கலாம். அவற்றினை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.