From Wikipedia, the free encyclopedia
கேடயச் சுரப்பி அல்லது தைராய்டுச் சுரப்பி (Thyroid gland) என்பது உடலில் உள்ள மிகப்பெரிய அகச்சுரப்பிகளுள் ஒன்று. இது மனிதன் உள்ளிட்ட அனைத்து முதுகெலும்பிகளிலும் காணப்படும் முக்கியச் சுரப்பி ஆகும்.
கேடயச் சுரப்பி | |
---|---|
அகச்சுரப்பித் தொகுதி | |
கேடயச் சுரப்பியும், இணைக் கேடயச் சுரப்பியும். | |
இலத்தீன் | glandula thyroidea |
கிரேயின் | |
தொகுதி | endocinal jubachina system |
தமனி | superior thyroid artery, inferior thyroid artery, thyreoidea ima |
சிரை | superior thyroid vein, middle thyroid vein, inferior thyroid vein |
நரம்பு | middle cervical ganglion, inferior cervical ganglion |
முன்னோடி | 4th Branchial pouch |
ம.பா.தலைப்பு | Thyroid+Gland |
Dorlands/Elsevier | g_06/12392768 |
கேடயச்சுரப்பியின் உயிரணுக்கள் ஆரம்பகால அயோடைடு செறிவாக்கும் செரிமானமண்டலச் உயிரணுக்களிலிருந்து பரிணமித்திருக்கின்றன. ஆதிகால உயிரினம் கடலில் வாழ்ந்ததால் அவைகளுக்கு அயோடைடைச் செறிவுபடுத்தி வைக்கும் உயிரணுக்கள் தேவைப்பட்டிருக்கின்றது.இந்த அயோடைடு ஆக்சிசனேற்ற எதிர்ப்பியாகச் செயல்பட்டிருக்கிறது. பின்னாளில் உயிர்கள் கடல்நீரை விட்டு நன்னீருக்கு வந்தபோது அவற்றுக்கு அயோடைடு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரிசெய்யத் தங்கள் ஆதிகால அயோடைடு செறிவாக்கும் செல்களைப் பயன்படுத்தின. அடுத்ததாக தைராக்சின் இயக்குநீரை வெப்பஉருவாக்குதலுக்கும் பயன்படுத்த துவங்கின.
இச்சுரப்பி இரண்டு கதுப்புகளைக் கொண்டது. இக்கதுப்புகள் மூச்சுக்குழலின் மேல் பகுதியில் இரு பக்கங்களிலும் உள்ளன. இக்கதுப்புகள் குறுகிய இஸ்துமஸ்(isthmus) எனும் தைராய்டு திசுவினால் இணைக்கப்படுகின்றது. இது கேடயக் குருத்தெலும்புக்கு கீழே மோதிரவுருக் குருத்தெலும்பின் மட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எடை 20 கிராம்
இவ்வுறுப்பு அதிகளவு இரத்தத் தந்துகிகளைக் (குருதி நுண்குழாய்களைக்) கொண்டுள்ளதால் வெட்டுத் தோற்றத்தில் அருகில் உள்ள பிற இழையங்களை விட மிகச் சிவப்பாய் காணப்படும். இதனுள் பல கோள வடிவ நுண்குமிழ் (Follicle) அமைப்புக்கள் உண்டு. இவற்றின் சுவரில் கூம்பு வடிவ உயிரணுக்களுண்டு. நுண்குமிழ்களின் நடுவில் ஓர் இடைவெளி உண்டு. அவ்விடம் தைரோகுளோபுலின் எனும் (Thyroglobulin) புரோட்டீனால் நிரம்பியிருக்கும். இப்பகுதி அதிக அளவில் தைராயிடு இயக்குநீரைத் தேக்கிவைக்கக் கூடியது.
தைராக்சின் (T3), நான்கு அயோடோ தைரோனைன் (T4) மற்றும் கால்சிடோனின் ஆகிய இயக்குநீர்கள் கேடயச் சுரப்பியால் சுரக்கப்படுகின்றன. தைராக்சின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவதுடன், உடலின் பிற தொகுதிகளின் வளர்ச்சியையும், செயற்பாட்டு வீதத்தையும் பாதிக்கின்றது. (T3), (T4) ஆகிய இரு வளரூக்கிகளிலும் அயடீன் முக்கிய கூறாக உள்ளது. கால்சிடோனின் உடலில் கால்சியச் சமநிலையைப் பேண உதவுகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.