கைபர் பக்துன்வா மாகாணம் (Khyber Pakhtunkhwa) இதன் பழைய பெயர் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகும். பாகிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த இச்சிறிய மாகாணத்தின்[3] தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள் பகுதிகள் உள்ளது. இதன் தலைநகரம் பெசாவர் நகரம் ஆகும். இம்மாகாணததில் 38 மாவட்டங்கள் உள்ளது.
கைபர் பக்துன்வா
خیبر پښتونخوا خیبر پختونخواہ | |
---|---|
மாகாணம் | |
மேல்-இடமிருந்து வலம்: பாப்-இ-கைபர், மொகஹப்பத் கான் மசூதி, கலாம் சமவெளி, சுவாட் பள்ளத்தாக்கு மற்றும் சைபுல் முலுக் ஏரி | |
அடைபெயர்(கள்): வடமேற்கு எல்லைப்புற மாகாணம் | |
ஆள்கூறுகள் (பெசாவர்): 34.00°N 71.32°E | |
நாடு | பாக்கித்தான் |
நிறுவப்பட்டது. | 14 ஆகஸ்டு 1947 re-established 1 சூலை 1970 |
தலைநகரம் | பெசாவர் |
பெரிய நகரம் | பெசாவர் |
அரசு | |
• வகை | மாகாணம் |
• நிர்வாகம் | கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றம் |
• ஆளுநர் | இக்பால் ஜாக்ரா |
• முதலமைச்சர் | தோஸ்த் முகமது கான் |
• தலைமைச் செயலாளர் | நவீத் காம்ரன் பலூச் |
• சட்டமன்றம் | ஓரவை முறைமை (124 உறுப்பினர்கள்) |
• உயர்நீதி மன்றம் | பெசாவர் உயர்நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 101,741 km2 (39,282 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 3,55,25,047 |
• அடர்த்தி | 350/km2 (900/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
இடக் குறியீடு | 9291 |
ஐஎசுஓ 3166 குறியீடு | PK-KP |
Main Language(s) | பாஷ்தூ (ஆட்சி மொழி) ஹிந்த்கோ கோவார் பஞ்சாபி பாரசீகம் உருது (தேசிய மொழி)[2] |
சட்டமன்றத் தொகுதிகள் | 124 |
மாவட்டங்கள் | 38 |
மாகாணச் சட்டமன்றம் | 986 |
இணையதளம் | www |
1901 முதல் 1955 முடிய வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என்றும், பின்னர் வடமேற்கு மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 1 சூலை 1970 முதல் கைபர் பக்துன்வா மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. இம்மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் பன்னாட்டு எல்லைப் பகுதியில் உள்ளது.
இம்மாகாணத்தின் எல்லைகள், மேற்கிலும், வடக்கிலும் ஆப்கானித்தான், தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கபப்டும் பழங்குடிகள் பகுதிகள், தென்கிழக்கில் பஞ்சாப், தேசியத் தலைநகரம் இசுலாமாபாத், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள், தென்மேற்கில் பலுசிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் மக்கள்தொகையில் 11.9%ம், பொருளாதாரத்தில் 10.5%ம், கைபர் பக்துன்வா பங்களிக்கிறது. கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் பஷ்தூ மொழி பேசும் பழங்குடி பஷ்தூன் மக்கள் ஆவர்.
புவியியல்
முன்னர் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள இந்து குஷ் மலை தெற்காசியாவின் நுழைவாயிலாக இருந்தது.[4] கிழக்கில் கைபர் கணவாய் பகுதியில் ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்த ஆப்டாபாத் நகரத்திலிருந்து, அல் காயிதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், அமெரிக்கப்படைகளால் சுட்டுக்கொல்லப்ப்பட்டதால், உலக அளவில் இந்நகரம் பேசப்பட்டது.
புவியியல் படி, கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கில் பனிபடர்ந்த இந்துகுஷ் மற்றும் தெற்கில் வெப்பமும் மற்றும் குளிரும் நிறைந்த பெசாவர் என இரண்டு புவியியல் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இம்மாகாணத்தின் சுவாத் சமவெளியில் சுவத், குனார், காபூல், சித்ரால் போன்ற ஆறுகள் பாய்கிறது.
இம்மாகாணாத்தின் வடக்கில் பசுமை நிறைந்த புல் சமவெளிகளும், பனிபடர்ந்த கொடுமுடிகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.[5] காபூல் ஆறு மற்றும் சுவத் ஆறுகள் கைபர் பக்துன்வா மாகாணத்தை வளப்படுத்துகிறது.
வரலாறு
மகாபாரதம் கூறும் காந்தார நாடு இம்மாகாணத்தில் இருந்தது. தற்போது காந்தாரம் ஆப்கானிஸ்தான் பகுதியாக உள்ளது. இம்மாகாணத்தின் சுவாத் சமவெளியில் வேதகால நாகரீகம் தொடங்கியது. பின்னர் கிரேக்க செலூக்கியப் பேரரசு காலத்தில் இம்மாகாணத்தில் பௌத்த சமயம் செழிப்புடன் விளங்கியது.
இம்மாகாணத்தின் கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் வழியாக வந்த சிதியர்கள், சகர்கள், பார்த்தியர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர்கள், துருக்கியர்கள், வட இந்தியாவை முற்றுகையிட்டு கைப்பற்றினர்.
இம்மாகாணம் மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மற்றும் குசானப் பேரரசின் ஒரு மாகாணமாக விளங்கியது. பௌத்தம் இங்கு பிரபலமாக விளங்கிய காலத்தில் கனிஷ்கரின் தூபி, புத்கார தூபி போன்ற எண்ணற்ற தூபிகளும், விகாரைகளையும் கொண்டிருந்தது. மேலும் இப்பகுதி தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசின் பகுதியாக விளங்கியது. இறுதியில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாகாணம் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இம்மாகாணம் பாகிஸ்தானின் ஒரு மாகாணம் ஆயிற்று.
நிர்வாகம்
கைபர் பக்துன்வா மாகாணம் எட்டு கோட்டங்களும், 38 மாவட்டங்களும் கொண்டது.
அரசியல்
இம்மாகாணம் கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 145 தொகுதிகளும்,[6] பாகிஸ்தான் தேசிய சபைக்கு 46 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
சுற்றுலா தலஙகள்
பாகிஸ்தானின் 28 தேசியப் பூங்காக்களில் 18 தேசியப் பூங்காக்கள் இம்மாகாணத்தில் உள்ளது. அவைகளில் சிறப்பானவைகள்:
- சித்ரால் தேசியப் பூங்கா
- பிரோகில் சமவெளி தேசியப் பூங்கா
- சுவாட் பள்ளத்தாக்கு
மக்கள் தொகையியல்
2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 35,525,047 ஆகும்.[7] பெரிய இனக்குழு பஷ்தூன் பழங்குடி மக்கள் ஆவார்.[8] 1.5 மில்லியன் ஆப்கானிய அகதிகள் இம்மாகாணத்தில் உள்ளனர்.[9]
பஷ்தூன் இனத்தவருக்கு அடுத்து தாஜிக் மக்கள், ஹசாரா மக்கள் உள்ளனர்.[10] இம்மாகாணத்தின் மொத்த மக்கள்தொகையில் 52% ஆண்களும் மற்றும் 48% பெண்களும் உள்ளனர்.
மொழிகள்
உருது மொழி தேசிய மொழியாக இருப்பினும், பஷ்தூன் மொழி, சராய்கி மொழி, கோவர் மொழி மற்றும் கோகிஸ்தானி மொழிகள் இப்பகுதியில் பேசப்படுகிறது.[3][11]
சமயங்கள்
சன்னி இசுலாம் இம்மாகாணத்தில் அதிகம் பயிலப்படுகிறது. சித்ரால் மாவட்டத்தில் மட்டும் சியா இசுலாம் சிறிதளவு பயிலப்படுகிறது. சித்ரால் மாவடடத்தின் தெற்கில் வாழும் கலாஷ் மக்கள் பண்டைய கிரேக்க சமயத்தை பின்பற்றுகின்றனர். மிகச்சிறு அளவினர் இந்து மற்றும் சீக்கிய சமய மக்கள் உள்ளனர்.[12][13]
அரசியல்
இம்மாகாணத்தில் 124 உறுப்பினர்கள் கொண்ட ஓரவை சட்டமன்றம் இயங்குகிறது. மேலும் பாகிஸ்தான் தேசிய சபைக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.
பொருளாதாரம்
இம்மாகாணத்தின் வருவாய் காடுகள் பயிர்த்தொழில் மற்றும் சுற்றுலா மூலம் ஈட்டப்படுகிறது. இம்மாகாணத்தில் உள்ள கும்கர் மக்னீசிய சுரங்கம் மூலம் பெருமளவு வருவாய் ஈட்டப்படுகிறது.
பெயர் மாற்றம்
பஷ்தூன் மொழியில் பக்துன்வா எனபதற்கு பஷ்தூன்களின் நிலம் எனப்பொருள்படும். இம்மாகாணத்திற்கு கைபர் பக்துன்வா எனப் பெயர் சூட்ட வேண்டும் என பாகிஸ்தான் தேசிய அவாமி கட்சி போராடியதன் விளைவாக, 15 ஏப்ரல் 2010 அன்று வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கு கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயரிடப்பட்டது.[14]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.