லோஜிங்
மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
லோஜிங் அல்லது லோஜிங் தன்னாட்சி துணை மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Kecil Lojing; ஆங்கிலம்: Lojing Autonomous Sub-District அல்லது Lojing Highlands) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; குவா மூசாங் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப்புறம்; மற்றும் தன்னாட்சி பெற்ற ஒரு துணை மாவட்டம் ஆகும்.
லோஜிங்
தன்னாட்சி துணை மாவட்டம் Autonomous Sub-District | |
---|---|
Lojing | |
கிளாந்தான் | |
ஆள்கூறுகள்: 4°38′N 101°28′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | குவா மூசாங் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,817 km2 (702 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 10,700 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 18350[1] |
தொலைபேசி எண்கள் | +6-09 |
பதிவெண்கள் | D |
பகாங் மாநிலத்தில் புகழ்பெற்ற கேமரன் மலைக்கு அருகில்; மலேசியாவின் இரண்டாவது கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 272 கி.மீ. தொலைவில், ஒரு மலைப்பாங்கான பீடபூமியில் அமைந்துள்ளது. இது ஓர் அமைதியான மலைப்பிரதேசமாக அறியப்படுகிறது.
வேளாண் தொழில் இந்தப் பகுதியின் முக்கிய தொழிலாக உள்ளது. கிளாந்தான் மக்கள்; கேமரன் மலையைச் சேர்ந்தவர்கள்; இங்கு வந்து பணிபுரிகிறார்கள். பல ஆண்டுகளாக, இங்குள்ள லோஜிங் மலைப்பகுதியில் பணிபுரிய நூற்றுக்கணக்கான கிளாந்தான் மக்கள் கேமரன் மலையில் இருந்து தினமும் 20 கி.மீ.க்கு மேல் பயணம் செய்கின்றனர். கிளாந்தான் மக்களுக்காக ஒரு சிறப்பு குடியிருப்பு பகுதியை அமைக்க கிளாந்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.[2]
2010-இல் லோஜிங் தன்னாட்சி பெற்ற துணை மாவட்டமாக மாற்றப்பட்டது. இருப்பினும் நகராட்சி பணிகள் குவா மூசாங் மாவட்டத்தின் பொறுப்பில் உள்ளன. அதன் பின்னர், பல மாநில மற்றும் கூட்டாட்சி நிறுவனங்கள், இங்கு அவற்றின் கிளைகளைத் திறந்தன.
லோஜிங் துணை மாவட்டம், ஏழு உள்ளூராட்சிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
லோஜிங் மலைப் பகுதி தித்திவாங்சா மலைத்தொடரின் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. லோஜிங் உயர்நிலம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிறைந்துள்ளது. இந்த இடம் பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்றது.[3]
இதன் அழகிய மலைகள் மற்றும் காடுகள் நன்கு பாதுகாக்கப்படுகின்றன அந்த வகையில் அவை லோஜிங் உயர்நிலத்தை, ஒரு பிரபலமான சுற்றுச்சூழல் சுற்றுலா ஈர்ப்புத் தளமாக மாற்றுகின்றன.[4] லோஜிங் உயர்நிலத்தின் காடுகளில் பல வகையான உயர்தர வெப்பமண்டலக் காட்டு மரங்கள் உள்ளன.[5]
லோஜிங் மலைப்பகுதியில் யோங் பெலார் மலை உள்ளது. இந்த மலை கிளாந்தான் மாநிலத்தில் மிக உயரமான மலை; மற்றும் தீபகற்ப மலேசியாவில் மூன்றாவது உயரமான மலை ஆகும். யோங் பெலார் மலை 2,181 மீட்டர் உயரம் கொண்டது.
லோஜிங் பகுதி மக்கள் தொகையைப் பொருத்த வரையில், மலேசியப் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கை கொண்டவர்களாக உள்ளனர். பெரும்பாலோர் தெமியாங்; செனோய் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் எண்ணிக்கை 3,000 என அறியப்படுகிறது.[6]