இந்தியாவின் ஒடிசாவில் உள்ள சிங்கோயில் இருந்து வந்த இனக்குழு From Wikipedia, the free encyclopedia
செனோய் அல்லது செனோய் மக்கள் (ஆங்கிலம்: Senoi; Senoi People; Sengoi; Sng'oi); மலாய்: Orang Senoi) என்பவர்கள் மலேசியப் பழங்குடியினரின் முப்பெரும் பிரிவுகளில் ஒரு பிரிவினர் ஆகும். இவர்கள் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியான பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் வாழ்கின்றனர்.[3]
தெற்கு பேராக்கில் செனோய் மக்கள், 1906. | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
மலேசியா | |
தீபகற்ப மலேசியா | [1] |
மொழி(கள்) | |
செனோய மொழிகள் செமாய் மொழி தெமியார் மொழி; தெற்கு அசிலியான் மொழிகள்; செமாக் பெரி மொழி, மா மெரி மொழி, செமலாய் மொழி, தெமோக் மொழி, செக் ஓங் மொழி, ஜகுட் மொழி, மலாய் மொழி, ஆங்கிலம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஒராங் அஸ்லி செமாங் மக்கள் லானோ மக்கள், ஜெகாய் மக்கள், பாத்தேக் மக்கள், மலாய மூதாதையர் செமலாய் மக்கள், தெமோக் மக்கள்[2] |
மலேசியப் பழங்குடியினர் மக்களில், அதிக எண்ணிக்கையிலான இவர்கள் மற்றும் மலாய் தீபகற்பம் முழுவதும் பரவலாகக் காணப் படுகின்றனர். ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தின் அசுலியான் மொழிகளில் உள்ள மொழிகளில், பல மொழிகளை செனோய் மக்கள் பேசுகிறார்கள்.
மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 பழங்குடி இனக்குழுவினர் உள்ளனர். மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[4][5]
மலேசியப் பழங்குடியினரின் மூன்று இனக் குழுப் பிரிவுகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய மலாயா காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்டது. மொழி, தோற்றம், உடல் பண்புகள்; மற்றும் அவர்களின் பாரம்பரிய பொருளாதாரக் கட்டமைப்பு போன்றவற்றில் மூன்று இனக் குழுக்களும் வேறுபடுகின்றன.
தீபகற்ப மலேசியாவில் மாநில வாரியாக செனோய் மக்களின் பரம்பல் (மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை, 1996 மக்கள் தொகை கணக்கெடுப்பு):-[6][7])
பேராக் | கிளாந்தான் | திராங்கானு | பகாங் | சிலாங்கூர் | நெகிரி செம்பிலான் | மலாக்கா | ஜொகூர் | மொத்தம் | |
---|---|---|---|---|---|---|---|---|---|
செமாய் மக்கள் | 16,299 | 91 | 9,040 | 619 | 26,049 | ||||
தெமியார் மக்கள் | 8,779 | 5,994 | 116 | 227 | 6 | 15,122 | |||
ஜாகுட் மக்கள் | 3,150 | 38 | 5 | 3,193 | |||||
செக் ஓங் மக்கள் | 4 | 381 | 12 | 6 | 403 | ||||
மா மெரி மக்கள் | 2,162 | 12 | 7 | 4 | 2,185 | ||||
செமாக் பெரி மக்கள் | 451 | 2,037 | 2,488 | ||||||
செமலாய் மக்கள் | 2,491 | 135 | 1,460 | 6 | 11 | 4,103 | |||
மொத்தம் | 25,082 | 6,085 | 451 | 17,215 | 3,193 | 1,483 | 13 | 21 | 53,543 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.