1981 முதல் 1989 வரை இருந்த அமெரிக்க அதிபர் மற்றும் நடிகர் From Wikipedia, the free encyclopedia
ரானல்ட் வில்சன் ரேகன் (அல்லது ரொனால்ட் ரீகன்) (பிப்ரவரி 6, 1911 - ஜூன் 5, 2004) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவர் (பிரசிடெண்ட்) ஆவார். இவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது இவருக்கு அகவை (வயது) 69 ஆகும். இவரே அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவர்களிலேயே அகவையில் மிகவும் மூத்தவர். அரசியலில் நுழையும் முன்னர் இவர் ஹாலிவுட்டில் நடிகராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகராகவும் இருந்தார். இவர் அரசியலில் ரிப்பப்லிக்கன் கட்சியைச் சேர்ந்தவர். பொதுவுடைமைக் கொள்கைகளையும் சோசலிசக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவர்.
ரானல்ட் வில்சன் ரேகன் Ronald Wilson Reagan | |
---|---|
40வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20 1981 – ஜனவரி 20 1989 | |
துணை அதிபர் | ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் |
முன்னையவர் | ஜிம்மி கார்டர் |
பின்னவர் | ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் |
33வது கலிபோர்னியாவின் ஆளுனர் | |
பதவியில் ஜனவரி 3 1967 – ஜனவரி 7 1975 | |
Lieutenant | ராபர்ட் ஃபின்ச் (1967–1969) எட் ரைனெக்கி (1969–1974) ஜான் ஹார்மர் (1974–1975) |
முன்னையவர் | பாட் ப்ரௌன் |
பின்னவர் | ஜெரி ப்ரௌன் ஜூனியர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டாம்பீக்கோ, இலினொய் | பெப்ரவரி 6, 1911
இறப்பு | சூன் 5, 2004 93) லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா | (அகவை
தேசியம் | அமெரிக்கர் |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி (1962 பின்னர்) |
பிற அரசியல் தொடர்புகள் | மக்களாட்சிக் கட்சி (1962 முன்னர்) |
துணைவர்(கள்) | (1) ஜேன் வைமன் (திருமணம் 1940, மண முறிவு 1948) (2) நான்சி ரேகன் (திருமனம் 1952) |
முன்னாள் கல்லூரி | யுரீக்கா கல்லூரி |
வேலை | நடிகர் |
கையெழுத்து | |
இவர் இலினாய்சின் டம்பிக்கோ நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜாக் ரேகன், நெல்லே ரேகன் ஆவர். இவரது தந்தை விற்பனையாளராகப் பணியாற்றியவர். இளவயதில், இலினாய்சின் பல நகரங்களிலும், பேரூராட்சிகளிலும் வாழ்ந்தார். இவர் இனவேறுபாட்டை வெறுத்தார். டிக்சன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கே கதைகூறுதல், நடித்தல், விளையாட்டு ஆகியவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆறு ஆண்டு காலம் உயிர்காப்பாளாராக இருந்தார்.[1] யுரேகா கல்லூரியில் படித்தார். பொருளாதாரம், சமூகவியலில் மேற்படிப்பை படித்தார். கல்லூரியின் கால்பந்தாட்ட குழுவில் இணைந்தார். கல்லூரி அரசியலில், விளையாட்டில் , நாடகத்தில் என பல்வேறு துறைகளில் பங்கு கொண்டார்.
யுரேகாவில் கல்வி கற்ற பின்னர், ஐயோவா மாகாணத்திற்கு நகர்ந்தார். வானொலி நிலையங்களில் வேலை கிடைத்தது. ஐயோவா பல்கலைக்கழகத்தின் வானொலிச் சேவையிலும் பணிபுரிந்தார். வானொலிகளில் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
கலிபோர்னியாவுக்குச் சென்று, வார்னர் புரோஸ் நிறுவனத்தில் ஏழாண்டுகள் வேலைக்குச் சேர்ந்தார்.[2] இவரது நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1939 ஆண்டிஏகுள் 19 திரைப்படங்களில் நடித்திருந்தார். இவற்றில் டார்க் விக்டரி குறிப்பிடத்தக்க திரைப்படம்.. சாண்டா ஃபே டிரையல் என்ற திரைப்படத்தில் கிப்பர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த பெயராலேயே நீண்ட காலம் அழைக்கப்பட்டார். 1941இல் நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கத் திரைப்படத்துறையில் முன்னணி நாயகர்களுள் ஒருவர் எனத் தெரிய வந்தது. கிங்ஸ் ரோ என்ற வெற்றித் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அமெரிக்க இராணுவத்திற்கு அழைக்கப்பட்டார். எனவே, திரைத்துறையில் நட்சத்திர நாயகனாக வாய்ப்பிருக்கவில்லை, தி வாய்ஸ் ஆஃப் தி டர்ட்டில், ஜான் லவ்ஸ் மேரி, தி ஹாஸ்டி ஹார்ட், பெட்டைம் ஃபார் போன்சோ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார்.
பதினான்கு இராணுவப் படிப்புகளை படித்து, அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார்.[3] செகண்ட் லியூடனண்ட் என்ற பதவியை அடைந்தார். இவரது கிட்டப் பார்வையினால், குறைந்தகால சேவையை மேற்கொள்ளவே அனுமதிக்கப்பட்டார். பின்னர், சான் பிரான்சிஸ்கோவில் போக்குவரத்து துறையில் அதிகாரியாக பணியாற்றினார். சிறிதுகாலத்திற்குப் பின்னர், முதல்நிலை லியூடனண்ட் ஆக உயர்ந்தார். மேஜர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார். போர் முடியும் வரையில் அமெரிக்காவிலேயே இருந்தார்.
ஜேன் வைமன் என்ற நடிகையுடன் இணைந்து பிரதர் ரேட் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்தனர்.[4] இவரின் அரசியல் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் மனைவி மணமுறிவு கோரினார். மணமுறிவு பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் இவரே. நான்சி டேவிஸ் என்ற நடிகையை சந்தித்தார். குறுகிய கால பழக்கத்திலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இவருக்கு அல்சீமர் நோய் தாக்கியபோது, இவர் மனைவி இவரிடம் இருந்த அன்பை வெளிக்காட்டினார்.
1945 இல் அரசியல்வாதியானார். தொடக்கத்தில் இருந்தே அணு ஆயுதங்களுக்கு எதிராக முழக்கமிட்டார். தொடக்கத்தில் மக்கள் கட்சியில் இருந்தவர், 1962இல் குடியரசுக் கட்சிக்கு மாறினார். தனி மனித உரிமைகளை பறிக்கும் சட்டங்களை எதிர்த்தார்.
கலிபோர்னியா பகுதியில் வாழ்ந்த கட்சியினர் மத்தியில் இவரது கருத்துகள் பிரபலமாயின. கலிபோர்னியா ஆளுநராகும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அதன்படி எதிர்க்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இரு முறை ஆளுநர் பதவியில் நீடித்தார். இது அவருக்கு அரசியலை நன்கு புரியச் செய்தது. பின்னாளில் அதிபராகவும் உதவியது.
இவர் அதிபரான காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வந்தார். இராணுவத்தை விரிவாக்கினார். குளிர்காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதுவரையிலும் அதிபராக இருந்தவர்களில் அதிக வயதில் பதவியேற்றவர் இவரே. பனிப்போரிலும் முக்கிய பங்கு வகித்தார். அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதல் அமெரிக்க அதிபர் இவரே. ஈரானியப் போர், லிபியாவில் குண்டுவெடிப்பு, போதைமருந்துகளுக்கு எதிரான போர் ஆகியவற்றிலும் பங்குகொண்டார்.
இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் என்ற அமைப்பில் வாழ்நாள் சிறப்பு உறுப்பினராக ஏற்கபட்டார். அமெரிக்க அரசின் இராணுவத்தினால் வழங்கப்படும் தாயர் விருது பெற்றுள்ளார். பிரெசிடென்சியல் மெடல் ஆஃப் பிரீடம் எனப்படும் விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். வாசிங்டன் விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை கப்பலுக்கும், வான்படை விமானத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது.[5] இவரது வெண்கல உருவச் சிலை தேசிய சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் இறந்த பின்னர், இவரை போற்றும் வகையில் அரசு அஞ்சல் துறை சார்பாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் நூறு முக்கிய நபர்கள் என்ற பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. பிப்பிரவரி ஆறாம் நாளை இவரின் நினைவாக ரீகன் நாளாகக் கொண்டாடுகின்றனர் கலிபோர்னிய மக்கள். போலந்து நாட்டின் உயரிய பட்டமான “தி ஆர்டர் ஆஃப் ஒயிட் ஈகிள்” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.