இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
ரியா சென் (பிறப்பு ரியா தேவ் வர்மா; 24 சனவரி 1981)[1] என்பவர் ஒரு இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். [2] இவர் முதன்மையாக இந்தி, பெங்காலி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
ரியா சென் | |
---|---|
2017 இல் ரியா சென் | |
பிறப்பு | ரியா தேவ் வர்மா 24 சனவரி 1981 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1991–தற்போது |
வாழ்க்கைத் துணை | சிவம் திவாரி (தி. 2017) |
உறவினர்கள் | ராய்மா சென் (சகோதரி) சுசித்ரா சென் (பாட்டி) |
சென் அரச பின்னணியில் இருந்து வந்தவர்; இவரது தந்தை பரத் தேவ் வர்மா திரிபுராவின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கூச் பெகர் இளவரசியான இலா தேவியின் மகனும் ஜெய்ப்பூரின் மகாராணி காயத்திரி தேவியின் மருமகனுமாவார். சென்னின் தாய் மூன் மூன் சென் மற்றும் பாட்டி சுசித்ரா சென் புகழ்பெற்ற மூத்த நடிகைகளாவர். இவர் தனது ஐந்து வயதில் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். முதல் முறையாக திரையில் தனது தாயின் மகளாகவே நடித்தார்.[3] பின்னர் 1991 இல் விஷ்கன்யா படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். என். சந்திரா இயக்கிய 2001 ஆம் ஆண்டு குறைந்த செலவில் தயாரிக்கபட்ட இந்தி நகைச்சுவை திரைப்படமான ஸ்டைல் இவரது திரைப்பட வாழ்க்கையில் முதல் வணிக வெற்றிப் படமாக ஆனது. தயாரிப்பாளர் பிரிதிஷ் நந்தியின் இசைத் திரைப்படமான, ஹிங்லிசில் ஜான்கார் பீட்ஸ் (2003) மற்றும் மலையாள திகில் திரைப்படமான ஆனந்தபத்ரம் (2005) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க சில படங்கள் ஆகும். நௌகாடுபி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஸ்டார் கைடு விருதை வென்றார்.
1998 இல் தனது பதினேழு வயதில் ஃபால்குனி பதக்கின் இசை காணொளியான யாத் பியா கி ஆனே லகியில் நடித்தபோது சென் முதன்முதலில் ஒரு வடிவழகியாக அங்கீகரிக்கப்பட்டார்.[4] அப்போதிருந்து, இவர் இசைக் காணொளிகள், தொலைக்காட்சி விளம்பரங்கள், பேஷன் ஷோக்கள், இதழ் அட்டைப்படங்களில் தோன்றினார். எயிட்சு நோய் குறித்த கட்டுக்கதைகளுக்கு எதிரான நோக்கத்துடன் விழிப்புணர்வு இசை காணொளியில் சென் தோன்றினார். குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கான நிதி திரட்டவும் இவர் உதவினார்..
ரியா தன் ஐந்து வயதில் திரைப்படத்தில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினார். [3] பின்னர் 1991 ஆம் ஆண்டில் இவர் விஷ்கன்யா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினார். அதில் இளம் வயது பூஜா பேடியாக நடித்தார். 19 வயதில், தேசிய திரைப்பட விருது பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின் தமிழ்த் திரைப்படமான, தாஜ்மகால் (2000) படத்தில் நடித்தார். அப்படத்தை மணிரத்னம் எழுதினார், ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்தார் என்றாலும் அது வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இவர் பாலிவுட் திரைப்படதான லவ் யூ ஹமேஷா அறிமுகமாக இருந்தார். அதில் அக்சய் கண்ணாவுடன் ஜோடியாக நடிக்க இருந்தார். இருப்பினும், படம் நிறுத்தபட்டது. இறுதியாக என். சந்திராஸ் ஸ்டைல் படத்தின் வழியாக 2001 பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் குறைந்த செலவில் எடுக்கபட்ட நகைச்சுவைப் படமாகும். அது இயக்குநருக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலான முயற்சியில் கிடைத்த முதல் வணிக வெற்றியாகும். ரியா புதுமுகங்களுடன் பெண் முன்னணி நடிகைகளான, ஷர்மன் ஜோஷி, சாஹில் கான், ஷில்பி முத்கல் ஆகியோருடன் நடித்திருந்தார். இந்த படம் இந்தியாவில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களின் வணிக வெற்றியின் போக்குக்கு முன்னோடியாக இருந்தது.
இவரது அடுத்த வெற்றிப் படமாக ஜான்கார் பீட்ஸ் அமைந்தது. அது புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர். டி. பர்மனின் இசையை மையமாக கொண்ட ஒரு நகைச்சுவைப் படமாகும். இதில் ஷயான் முன்ஷியா, ஜூஹி சாவ்லா, ராகுல் போஸ், ரின்கே கண்ணா, சஞ்சய் சூரி ஆகியோருடன் ஒரு சிறிய, கவர்ச்சியான பாத்திரத்தில் நடித்தார்.[5] இது வெளியானவுடன் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது, இது தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது நகரங்களில் வெளியிடப்பட்டு குறிவைக்கப்பட்ட பார்வையாளர்களிடையே வணிக ரீதியான வெற்றி பெற்றது.[6][7] இது இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த ஹிங்லிசில் தயாரிக்கப்பட்ட படங்களில் முதலாவதாகும்.[8][9]
இவரது பிந்தைய படங்களான ஹாரி பவேஜாவின் கயாமத் மற்றும் சுபாஷ் காய் அப்னா சப்னா மனி மனி ஆகியவையும் வணிக ரீதியில் வெற்றிகளை ஈட்டின. அவை 150 நாட்கள் ஓடின. இந்த படங்களின் தொடர்ச்சியாக நடித்த நான்கு படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த பல படங்களில் குத்தாட்டப் பாடல்கள் மற்றும் கௌரவத் தோற்றங்களில் இடம்பெற்றபோதிலும்,[10][11][12] சில குறைந்த பட்ஜெட் படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்தார். தில் வில் பியார் வியார் (2002), கயமத் (2003), பிளான் (2004) ஆகிய படங்களில் இவர் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், மூன்றிலும் இவரது குத்தாட்டப் பாடல்கள் கவனத்தை ஈர்த்தன.[13][14] இது தவிர, இவர் இயக்குநர்-தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாவின் விருப்பத்தின்படி ஜேம்ஸ் (2005) படத்தில் மற்றொரு குத்தாட்டப் பாடலில் நடித்தார். அவர் சமீரா ரெட்டி, இஷா கோப்பிகர், கொய்னா மித்ரா போன்ற பெயர்பெற்ற நடிகை-வடிவழகிகளை ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க வைத்த வரலாறு உள்ளது.[15] மேலும், இவர் நடித்த சஜித் கானின் ஹே பேபி (2007) என்ற படத்தில் இடம்பெற்ற நடனத்தில் பல முக்கிய பாலிவுட் நடிகைகள் இடம்பெற்றனர்.
ரியா இந்தி திரைப்படங்கள் தவிர பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்பட வாழ்க்கை பாரதிராஜா இயக்கி, மனோஜ் நடித்த தாஜ்மகால், மற்றும் பிரசாந்த்துக்கு ஜோடியாக குட்லக், போன்ற தமிழ் படங்களுடன் விறுவிறுப்பாகத் தொடங்கியது. இரண்டு படங்களும் வணிக ரீதியாக தோல்வியடைந்தன. இவர் என். மகாராஜனின் அரசாட்சி. படத்தில் குத்தாட்டப் படாலுக்கு ஆடினார்.[சான்று தேவை][மேற்கோள் தேவை]
ஃபால்குனி பதக்கின் யாத் பியா கி ஆனே லகி (மாற்று தலைப்பு: சூடி ஜோ கன்காயி), ஆஷா போஸ்லேவின் ஜும்கா கிரா ரீ, ஜக்ஜீத் சிங் மற்றும் போஸ்லேவின் ஜப் சாம்னே தம் மற்றும் கஹின் கஹின் சே, லதா மங்கேஷ்கர், போன்ஸ்லே, சிங்கின் தில் கஹின் ஹோஷ் கஹின், சோனு நிகமின் ஜீனா ஹை தேரே லியே, ஷானின் சுதா மாரோ உள்ளிட்ட பிரபல பாடகர்களின் பாடல்களுக்கான பல இசை காணொளிகளில் ரியா தோன்றியபோது பிரபலமான வடிவழகியானார். இவர் தனது பதினாறு வயதில் தனது முதல் இசை காணொளியான யாத் பியா கி ஆனே லகியை படமாக்கினார். அது இவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இசை காணொளிகளுக்கான நடிகையாக முதன்மையாக அடையாளம் காணப்படுவதற்கு வழிவகுத்தது. ரியா ஃபெமினா, எலான்,[16] மேன்ஸ் வேல்ட்,[17] கிளாட்ராக்ஸ், சாவி மற்றும் இந்திய பதிப்புகளான எல்லே, மாக்சிம் மற்றும் காஸ்மோபாலிட்டன்,[18] போன்ற பத்திரிகைகளின் அட்டைப் படங்களில் தோன்றியுள்ளார். மேலும் லாக்மே பேஷன் வீக் (2005-07), வில்ஸ் பேஷன் வீக் (2006-2007) போன்ற முக்கிய பேஷன் ஷோக்களின் வளைவில் தோன்றியுள்ளார். இவர் தன் அக்காள் ராய்மா சென்னுடன் பேஷன் ஷோக்களில் பங்கேற்றுள்ளார். வடிவழகி தொழிலைத் தவிர, விளம்பர உலகிலும் ரியா கால் பதித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில், தீபிகா படுகோணுக்கு பதிலாக லிம்காவின் விளம்பரத் தூதுவராக மாறியபோது, இவரது வடிவழகி வாழ்க்கையின் உயர் நிலை ஏற்பட்டது.[19] கோல்கேட், டாபர் வாடடிகா, ரிலையன்ஸ், காட்பரி டெயிரி மில்க் சாக்லேட், நிர்மா ஆகியவை அவரது மற்ற குறிப்பிடத்தக்க பணிகளில் அடங்கும்.
2004 ஆம் ஆண்டில், முன்னணி இந்திய ஒளிப்படக் கலைஞர் டபூ ரத்னானியின் வருடாந்திர நாட்காட்டியில் இவர் ஓரளவு நிர்வாணமாக காட்சியளித்தார், இது இந்திய கவர்ச்சி துறையில், முக்கிய நிகழ்வாகும். தபூவின் கூற்றுப்படி, "நாள்காட்டி வெளியான பிறகு, இவருடைய தாயார் அதைப் பார்த்தார். அது மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக அவர் நினைத்தார், ரியா அதைச் செய்திருக்கக்கூடாது என்றார். ஆனால் அந்த ஒளிப்படத்திற்கு அபாரமான வரவேற்பு கிடைத்தது. அதனால் ரியா மிகவும் மகிழ்ச்சியடைந்தார், தன் அடுத்த விளம்பரப் பரப்புரைக்கு, தான் இதில் செய்ததைப் போலவே தன்னை ஒளிரச் செய்யும்படி கேட்டார்."[20] இது ரத்னானியுடன் தனது வருடாந்திர நாட்காட்டியில் இடம்பெற மூன்று ஆண்டு ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது.[21] தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக (2003-2007) நாட்காட்டியில் இடம்பெற்ற ஒரே பெண் முகம் இவர் மட்டுமே.[22][23]
ரியா 1981, சனவரி, 24 அன்று மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவில் பிறந்தார். இவர் முன்னாள் நடிகை மூன் மூன் சென்னின் மகளும், பெங்காலி திரையுலகின் ஒரு ஜாம்பவனான சுசித்ரா சென்னின் பேத்தி ஆவார்.[24] மும்பையை வாழிடமாக கொள்வதற்கு முன்பு இவர் தன் பெற்றோர் மற்றும் சகோதரியும், நடிகையுமான ராய்மா சென்னுடன் கொல்கத்தாவில் வசித்து வந்தார். இவரது தந்தை பரத் தேவ் வர்மா திரிபுரா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.[25] அவரது தந்தைவழி பாட்டி இலா தேவி, கூச் பெகரின், இளவரசியாவார். அவருடைய தங்கை காயத்திரி தேவி ஜெய்ப்பூரின் மாகாராணி ஆவார்.[26] அவரது தந்தைவழி கொள்ளுப்பாட்டி இந்திரா, வடோதராவின் மகாராஜா . மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட்டின் ஒரே மகளாவார்.[27] ரியாவின் தாய்வழி தாத்தா ஆதிநாத் சென் கொல்கத்தாவின் முக்கிய தொழிலதிபர் ஆவார், அவருடைய தந்தை தினாநாத் சென் - முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அசோக் குமார் சென்னின் உறவினர் - திவான் அல்லது திரிபுரா மகாராஜாவின் அமைச்சராக இருந்தார்.[28] சகோதரிகள் தங்கள் தாயின் கடைசி பெயரை தங்கள் திரைப் பெயருடன் சேர்த்துள்ளனர். இருப்பினும் இவர்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தேவ் வர்மா என்ற குடும்பப்பெயரே உள்ளது.
2017 ஆகத்தில், சென் தனது காதலன் சிவம் திவாரியை பெங்காலி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.[29][30]
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் | மேற்கோள்கள் |
---|---|---|---|---|---|
1991 | விஷ்கன்யா | இளம் நிஷி | இந்தி | குழந்தை நட்சத்திரமாக | |
1994 | கஜமுக்தா | வங்காள மொழி | குழந்தை நட்சத்திரமாக | ||
1999 | தாஜ்மகால் | மச்சக்கன்னி | தமிழ் | ||
2000 | குட்லக் | பிரியா | |||
மோனே போற தோமாக் | ரியா | வங்காள மொழி | வங்கதேச படம் | ||
2001 | ஸ்டைல் | ஷீனா | இந்தி | ||
2002 | தில் வில் பியார் வியார் | கவுரவின் தோழி | இந்தி | கௌரவத் தோற்றம் | |
2003 | சாஜீஸ் | ||||
கயாமத் : சிட்டி அன்டர் த்ரட் | ஷீத்தல் | ||||
ஜான்கார் பீட்ஸ் | பிரீத்தி | படத்தின் மொழி இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த ஹிங்கிலிசு | |||
2004 | தில் னே ஜிஸே அப்னா கஹா | காமினி | குணச்சித்திர தோற்றம் | ||
ப்ளான் | ஷாலினி | குத்தாட்டப் பாடல் | |||
அரசாட்சி | இருபது வயசு | தமிழ் | குத்தாட்டப் பாடல் | ||
2005 | ஆனந்தபத்ரம் | பாமா | மலையாளம் | மலையாளத்தில் அறிமுகம் | |
ஷாதி நம்பர் 1 | மாதுரி | இந்தி | |||
தும்... ஹோ நா! | ரீமா | ||||
ஜேம்ஸ் | – | குத்தாட்டப் பாடல் | |||
சில்சிலே | அனுஷ்கா | ||||
இட் வாஸ் ரெய்னிங் தேட் நைட் | சாவித்ரி பானர்ஜி | ஆங்கிலம் | |||
2006 | அப்னா அப்னா மணி மணி | ஷிவானி | இந்தி | ||
ரோக்தா | – | நிறைவடையவில்லை | |||
தில் கஹின் ஹோஷ் கஹின்[சான்று தேவை] | - | காணொளி தொகுப்பு | |||
லவ் யூ ஹமேஷா | மேக்னா | ரியா தேவ் வர்மா நடித்தது என 1999 ஆம் ஆண்டிலேயே வெளிவரத் திட்டமிடப்பட்டிருந்த படம் | |||
2007 | ஹே பேபி | – | குத்தாட்டப் பாடல் | ||
2008 | நேனு மீகு தெலுசா....? | மது | தெலுங்கு | தெலுங்கில் அறிமுகம் | |
ஹீரோஸ் | சிவானி | இந்தி | |||
2009 | சோர் லகா கே... ஹையா! | சம்கி | |||
லவ் கிச்டி | தீப்தி மேத்தா | ||||
பேயிங் கெஸ்ட் | ஆவ்னி | ||||
2010 | பென்னி அண்ட் பாப்லூ | ரியா | |||
அபோஹோமன் | சந்திரிகா | வங்காள மொழி | |||
2011 | நௌகாதுபி | கமலா | இவரது சகோதரி ராய்மா சென்னுடன் நடித்த முதல் படம் | ||
தேரே மேரே பெரே | முஸ்கின் | இந்தி | |||
2012 | 3 பேச்சிலர்ஸ் | நிசா | கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது | ||
2013 | ஜிந்தகி 50-50 | நைனா | |||
ரப்பா மெயின் க்யா கரூன் | |||||
மை லவ் ஸ்டோரி | குத்தாட்டப் பாடல் | ஒடியா | |||
2014 | ஜாதீஸ்வர் | சுதேஷ்ணா | வங்காள மொழி | ||
கொல்கத்தா காலிங் | |||||
2015 | ரோக ஹோவர் சோஹோஜ் உபயே | ||||
பேமிலி ஆல்பம் | |||||
2016 | ஹீரோ 420 | ரியா | |||
டார்க் சாக்லைட் | இஷானி பானர்ஜி | ||||
2017 | லோன்லி கேள் | ராதிகா கபூர் | இந்தி | குறும்படம் | |
2022 | லவ் யூ ஹமேஷா | மேக்னா | இந்தி | ||
2023 | டெத் டெல் | இந்தி |
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மேடை | குறிப்புகள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|
2016 | அலிஷா | அவந்திகா | தொடரில் அறிமுகம் | ||
2017 | ராகினி எம். எம். எஸ்: ரிட்டர்ன்ஸ் | சிம்ரன் | ஆல்ட்பாலாஜி | ||
2019 | பாய்சன் | நடாஷா | ஜீ5 | [31] [32] | |
2019 | மிஸ்மேச் 2 | மிஷிகா | ஹோய்ச்சோய் ஒரிஜினல்ஸ் | [33] | |
2020 | பதி பட்னி அவுர் வோ | ரிம்ஜிம் | எம்எக்ஸ் பிளேயர் | ||
2023 | பெக்காபூ | சித்ரா இரானி | ஆல்ட்பாலாஜி | ||
2024 | கால் மீ பே | மிதாலி சவ்லா | பிரைம் வீடியோ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.