Remove ads
From Wikipedia, the free encyclopedia
யசீதி (Yazidi, Yezidi, Êzidî, Yazdani, அரபு மொழி: ایزدیان Ayziyan, ஆர்மீனியம்: Եզդիներ Ezdiner, உருசியம்: Езиды Ezidy) என்பவர்கள் குர்தி மொழி பேசுகின்ற ஓர் இனச்சமயக் குழுவினர் ஆவர். இவர்கள் சியா, சூபி இசுலாமியச் சமயங்களின் கூறுகளை உள்ளக நாட்டுப்புற மரபுகளுடன் கலந்த சமரச சமயத்தை பின்பற்றுகின்றனர்.[13] இந்த மரபுகள் கிழக்கத்திய உள்ளுணர்வார்ந்த, கிறித்தவ, மெசபொட்டோமியச் சமயக் கூறுகளையும் தொன்மையான ஞானக் கொள்கை, மானி சமயம் மற்றும் சரத்துஸ்திர சமயக் கொள்கைகளையும் உள்ளடக்கியவை.[14][15][16]
பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை | |
---|---|
1,500,000[1][2][3] | |
பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள் | |
ஈராக் | 850,000[4] |
செருமனி | 200,000[1][5] |
சிரியா | 50,000[6][7] |
உருசியா | 70,000[8] |
ஆர்மீனியா | 60,000[9] |
சியார்சியா | 20,000 (திபிலீசியில் 18,000)[10] |
சுவீடன் | 7,000[5] |
துருக்கி | 500 (ஏதிலிகளைத் தவிர்த்து.)[11] |
டென்மார்க் | 500[12] |
சமயங்கள் | |
ஈரானியச் சமயங்கள் | |
புனித நூல்கள் | |
யசீதி வெளிப்படுத்தலின் நூல் (Kitêba Cilwe) யசீதி கருப்பு நூல் (Mishefa Reş) | |
மொழிகள் | |
அரபு மொழி மற்றும் குர்தி மொழி (இலத்தீன எழுத்துருக்களில்) |
யசீதி மதப்பிரிவினர் ஈராக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிறுபான்மை மதப்பிரிவினர். இம்மதப்பிரிவினர் உலகில் மொத்தம் 7 இலட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் வட ஈராக்கின் சிஞ்சார் மலைப்பகுதியிலும் அதைச்சுற்றியுள்ள நகரங்களிலும் வாழ்கின்றனர். இனரீதியாக இவர்கள் குர்துக்கள். இவர்கள் பெரும்பாலும் தொன்மைய அசிரியாவின் பகுதியாகவிருந்த வடக்கு ஈராக்கின் நினேவெ மாநிலத்தில் வாழ்கின்றனர். ஐரோப்பாவிற்கு, குறிப்பாக ஜெர்மனிக்கு இவர்கள் குடி பெயர்ந்ததை அடுத்து ஆர்மீனியா, சியார்சியா மற்றும் சிரியா நாடுகளில் இவர்களது மக்கள்தொகை 1990களிலிருந்து வெகுவாக குறைந்துள்ளது.[17]
யசீதிகள் உலகைப் படைத்தவர் கடவுள் என நம்புகின்றனர். தாம் படைத்த உலகைக் காக்கும் பொருட்டு ஏழு "புனித வாசிகள்" அல்லது தேவதூதர்களை உருவாக்கினார்; இவர்களது "தலைவராக" மெலக் டாசு என்ற "மயில் தேவதையை" ஏற்படுத்தினார். இந்த மயில் தேவதையே ஒருவருக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாவார். இந்தப் புராணக் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் கடவுளையே எதிர்த்து கடவுளின் அருளிலிருந்து விலகி பின்னர் கண்ணீர் விட்டு மன்னிப்புக் கேட்டு நரகத்தின் சிறைகளிலிருந்து மீண்டு கடவுளுடன் இணைந்தார். இக்கதை ஒரே கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்து கடவுளின் கட்டளையை மீறி ஆதாம், ஏவாளை வழிபட்ட சூபி நம்பிக்கைகளின் இப்லிசுடன் தொடர்புடையது.[18] சூபிய இப்லிசுடனான இத்தொடர்பால் மற்ற ஒரே கடவுள் சமயங்கள் மயில் தேவதையை தங்கள் சமய சாத்தானுடன் அடையாளப்படுத்தி[14][19] யசீதிகளை "சாத்தானை வழிபடுவோர்" என பல நூற்றாண்டுகளாக ஒடுக்கி வருகின்றனர். இத்தகைய ஒடுக்குதல் தற்கால ஈராக் எல்லையில் முன்னர் சதாம் உசேனாலும் பின்னர் அடிப்படைவாத சுன்னி இசுலாம் புரட்சியாளர்களாலும் இன்னமும் தொடர்கின்றது.[20]
இவர்கள் மாலிக் டவ்வூஸ் என்ற மயில் தேவதையை வழிபடுவதால் மற்ற மதத்தினர் சகித்துக் கொள்ள மறுக்கின்றனர். மயில் தேவதையை குத்துவிளக்கில் பொறித்து வைத்துக்கொள்வது இவர்களது வழக்கம். மொத்தம் ஏழு தேவதைகள் என்றும் அதில் தலையாயது இந்த மாலிக் டவ்வுஸ் என்றும் பிற தேவதைகள் அனைத்தும் அதற்கும் கீழே என்பது அவர்களின் நம்பிக்கை. கிருத்தவர்களுக்கு இருப்பதைப் போல ஞானஸ்தானம் உண்டு. இஸ்லாமியர்களைப் போலவும் யூதர்களைப் போலவும் விருத்தசேதனம் உண்டு. ஜெராஸ்டிரியர்களைப் போல தீ வழிபாடும் உண்டு. ஆனால் இவர்கள் ஆபிரகாமை ஏற்றுக் கொள்ளாதவர்கள். 11 ஆம் நூற்றாண்டில் உமையத் ஷேக் என்பவர்தான் இம்மதத்தை உருவாக்கினார், அல்லது நிறுவனமயமாக்கினார். இந்த மதம் யூத மதம், இஸ்லாமிய மதம், கிருத்தவ மதம், ஜெராஸ்டிர மதம் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு அம்சத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது.
ஆகத்து 2014இல் ஈராக்கையும் அண்டைய நாடுகளையும் இசுலாமியமில்லா தாக்கங்களிலிருந்து "தூய்மைப்படுத்துமுகமாக" யசீதிகளை இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்[21].
சாத்தானைக் கடவுள் சபித்து, சொர்க்கத்திலிருந்து விரட்டியதாக தொன்மக் கதைகள் இஸ்லாம், கிருத்துவம், போன்ற மதங்களில் உண்டு. யசீதி மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியைப் படைத்தார். அதன் பிறகு, பூமியைப் பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர். ஏழு பேரில் ஒருவரான மாலிக் டவ்வுஸ் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம். தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. “தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது. அதனால் யசீதிகள் கடவுளால் மன்னிக்கப்பட்டதுதான் தங்களது தேவதை மாலிக் டவ்வுஸ் என நம்புகின்றனர். இதனாலேயே இவர்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்று இவர்கள்மீது மற்றவர்கள்[மேற்கோள் தேவை] முத்திரை குத்திவிட்டார்கள்.
18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஆட்டோமன் பேரரசின் போது யசீதிகளுக்கு எதிராக 72 முறை படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 2007இல் கூட அவர்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் கார்களில் குண்டுவைத்து 800க்கும் மேற்பட்ட யஜீதுகள் கொல்லப்பட்டனர்.
தற்போது ஐ. எஸ். இயக்கத்தினரால் இவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தப்பியோடியவர்கள் தவிர சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை ஐ. எஸ். அமைப்பினரால் கொல்வதற்காக சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
மற்றவர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாலும்கூட இந்த மக்கள் தங்கள் மதநம்பிக்கையை விட மறுக்கின்றனர். வேறு மதத்திற்கு மாறவும் மறுக்கின்றனர். இவர்கள் மதத்திற்கு மற்றவர்கள் மதம் மாறுவதையும் விரும்புவதில்லை, ஆதரிப்பதுமில்லை. இந்த இனத்தவர்கள் பிறருடன் திருமண உறவும் கொள்வதில்லை. எனவே இவர்கள் அழிக்கப்பட்டால் இந்த இனம் கிளைப்பதற்கோ வளர்வதற்கோ வாய்பே இல்லை.[22],
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.