முகலாய பேரரசி மற்றும் ஷாஜகானின் மனைவி From Wikipedia, the free encyclopedia
மும்தாஜ் மகால் (Mumtaz Mahal, செப்டம்பர் 1, 1593 – சூன் 17, 1631) ) தாஜ்மகாலை உருவாக்கிய முகலாயப் பேரரசு மன்னனான ஷாஜகானின் மனைவி ஆவார். இவரது இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், 1593 இல் இந்தியாவில் ஆக்ராவில் பிறந்தவர். இவரது தந்தை பார்சி இனத்தவரான அப்துல் அசன் அசாஃப் கான் ஜகாங்கீர் மன்னரின் மனைவியான நூர் ஜகானின் சகோதரர் ஆவார்.[1]
மும்தாசு மகால் Mumtaz Mahal | |||||
---|---|---|---|---|---|
இந்தியாவின் மகாராணி | |||||
![]() | |||||
பேரரசி | |||||
முன்னையவர் | நூர்சகான் | ||||
பாத்சா பேகம் | |||||
பதவிக்காலம் | 30 சனவரி 1628 – 17 சூன் 1631 | ||||
முன்னையவர் | நூர்சகான் | ||||
பின்னையவர் | சகனாரா பேகம் | ||||
பிறப்பு | செப்டம்பர் 1, 1593 ஆக்ரா, முகலாயப் பேரரசு | ||||
இறப்பு | சூன் 17, 1631 37) புர்ஹான்பூர், முகலாயப் பேரரசு | (அகவை||||
புதைத்த இடம் | |||||
துணைவர் | ஷாஜகான் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | ஊர் உன்னிசா பேகம் (1613–1619) சகனாரா பேகம் (1614–1681) தாரா சிக்கோ (1615–1659) சா சுச்சா (1616–1661) ரொசனாரா பேகம் (1617–1661) ஔரங்கசீப் (1618–1707) அகமது பாக்சு (1619–1622) சுரயாபானு பேகம் (1621–1628) பெயரிடப்படாத மகன் (1622) முராத் பாக்சு (1624–1661) லாத்ஃபுல்லா (1626–1628) தவ்லாத் அப்சல் (1628–1629) உசுனாரா பேகம் (1630) கவ்காரா பேகம் (1631–1707) | ||||
| |||||
மரபு | திமுரித் (திருமணம் மூலம்) | ||||
தந்தை | அப்துல் அசன் அசாப் கான் | ||||
தாய் | புளொந்திரெஜி பேகம் | ||||
மதம் | சியா இசுலாம் |
மும்தாஜ் தனது 19வது வயதில் 1612, மே 10 இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். குர்ராம் பின்னர் முகாலாயப் பேரரசின் மன்னனாகி ஷா ஜகான் என்ற பெயரைப் பெற்றார். மும்தாஜ் சாஜகானின் மூன்றாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தார். இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்ஹான்பூரில் தனது 14வது மகப்பேறின் போது மரணமானார்.[2] இவரது நினைவாக சாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மகால் நினைவு மண்டபத்தில் மும்தாசின் உடல் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.