From Wikipedia, the free encyclopedia
தாரா சிக்கோ (Dara Shukoh, தாரா ஷிக்கோ, பாரசீக மொழி: دارا شكوه , மார்ச் 20, 1615 – ஆகத்து 30, 1659) முகலாயப் பேரரசன் ஷாஜகானுக்கும் மும்தாஜ் மகாலுக்கும் பிறந்த மூத்த மகனும், முடிக்குரிய இளவரசரும் ஆவார். பாரசீக மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவருடைய இளைய சகோதரர் அவுரங்கசீப் தோற்கடித்துக் கொலை செய்து ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றினார்.[1][2][3].
தாரா சிக்கோ Dara Shikoh | |
---|---|
முகலாய இளவரசன் | |
பிறப்பு | 20 மார்ச்சு 1615 |
இறப்பு | 30 ஆகத்து 1659 44) | (அகவை
மரபு | திமுரிட் |
அரசமரபு | திமுரிட் |
தந்தை | ஷாஜகான் |
தாய் | மும்தாஜ் மகால் |
மதம் | இசுலாம் |
1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையை கைப் பற்ற அவரின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஸாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்சீபின் மீது படையெடுத்தார்.
உடல் தேறிய ஷாஜஹானின் ஆதரவு இருந்தபோதிலும், ஆக்ராவிற்கு 13 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள அமோகர் போர்க் களத்தில் 1658 ஜூன் 8-ஆம் தேதி தாரா ஷிகோவை ஔரங்சீப் தோற்கடித்தார். தோல்விக்கு பிறகு ஆதரவு தேட முயன்ற தாரா ஷிகோ, சிலரின் வஞ்சக சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு ஔரங்கசீபிடம் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலை நகரில் அழுக்கேறிய யானையின் மீது கைதியாக இழுத்துச் செல்லப்பட்ட தாரா ஷிகோ, ஔரங்கசீபின் ஆட்களால் 1659 ஆகஸ்ட் 30-ஆம் தேதி கொல்லப்பட்டார். ஔரங்கசீப், இறந்துப் போன உடலிலிருந்து தலையை வெட்டி, அவரது தந்தையிடம் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தாரா ஷிகோ, மென்மையும், இறையுணர்வும் நிறைந்த சூஃபி அறிஞராக திகழ்ந்தார். அவர் இந்துக்கள், முஸ்லீம்களிடையே மத நல்லிணக்கத்தையும், கூடி வாழ்தலையும் வலியுறுத்தினார். தீவிர மத அடிப்படைவாதியான ஔரங்கசீபை தாரா ஷிகோ வெற்றிக் கொண்டிருந்தால், இந்தியா எவ்வளவு மாறுபாடு அடைந்திருக்குமென்று வரலாற்று ஆய்வாளர்கள் ஊகம் கூறுகின்றனர். தாரா ஷிகோ லாஹூர் நகரின் புகழ் பெற்ற காதிரி சுஃபி ஞானியான மையன் மிர் அவர்களின் மாணாக்கராவார். இதற்கு மையன் மிரின் சீடரான முல்லா ஷா பதக்ஷி உதவினார்.
தாரா ஷிகோ, இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண மிகுந்த முயற்சி மேற்கொண்டார். இந்த முயற்சியின் விளைவாக, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்கென்று, சமஸ்கிருத உபநிஷத்துகளை பாரசீகத்திற்கு மொழிப்பெயர்த்தார். அவரது மிகவுமறிந்த படைப்பான மஜ்ம-உல்-பஹ்ரெயின் (இரு பெருங்கடல்களின் சங்கமம்), சூஃபியிசத்திற்கும், இந்து மதத்தின் ஒரு தெய்வ கோட்பாட்டிற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண முயன்றுள்ளது.
தனது சகோதரன் ஔரங்கசீப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டத நுண் கலைகள், இசை, நாட்டியம் ஆகியவைகளின் புரவலராகத் தாரா ஷிகோ திகழ்ந்தார். 1630 –களில் துவங்கிஅவர் இறக்கும் வரை படைத்த எழுத்துக்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு தாரா ஷிகோவின் தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த தொகுப்பை அவரது மணைவி நதிரா பானுவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின், தாரா ஷிகோவின் தொகுப்பு முகலாய அரசு நுலகத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தாரா ஷிகோவின் படைப்புகளின் மீதான அவரது அடையாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எல்லா படைப்புகளும் அழிக்கப்படவில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.