இந்திய அளவிலான விடுதலைப் போராட்டம், 1857 From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் விடுதலைக்கான எழுச்சிகளில் வரலாற்று முதன்மையில் இன்றியமையாதன: இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்திற்கு முன்னரே 1757 ல் மாமன்னர் அழகுமுத்துக்கோன் நடத்திய இந்த போரே முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு பிறகு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.அதில் முதன்மையானவர் மாமன்னர் அழகுமுத்துக்கோனார் .1757 ல் இவர் செய்த போரே முதல் இந்திய மற்றும் தமிழக விடுதலை போர் ஆகும்.
அழகு முத்துக்கோன் கோனார்(1728-1757) திருநெல்வேலி மாவட்டம் கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னருக்கு சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் அழகு முத்துக்கோன் (1728-1757) கான் சாஹிப் (மருதநாயகம்)என்கிற வெள்ளையனின் கைக்கூலியான தமிழின துரோகியிடம் பணிய மருத்து அவனது பீரங்கி குண்டுகளுக்கு இறையாகியவர் வீரபெரும்பாட்டன் அழகுமுத்துகோன்.[சான்று தேவை]
சூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில், வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியாகும். திப்பு சுல்தான் 1799 இல் இறந்த பின்னர் ஆங்கிலேயர்கள் திப்புசுல்தானின் குடும்பத்தாரை வேலூர்க் கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அங்கே, சீராடை பற்றிய புதிய சட்டத்தை எதிர்த்தவர்களை, ஆங்கிலேயர் தண்டித்ததை அடுத்து ஒரு திட்டமிட்ட எழுச்சி நடந்தது. இதில் அங்கிருந்த 350 ஐரோப்பியரில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதுவே முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சி எனப்படுகின்றது. இதன் 200 ஆவது ஆண்டு நினைவாக இந்திய அஞ்சலகம் ஒரு நினைவு அஞ்சல் தலையை சூலை 10, 2006 இல் வெளியிட்டது.
சனவரி-மே, 1857 இல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என கூறப்படுகின்றது. இதனை மேற்குலகு நாடுகளில் பலவும் "இந்திய சிப்பாய் கலகம்" எனக் கூறினும், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். பலரும் 1806 இல் நிகழ்ந்ததை அண்மைக்காலம் வரையிலும் சிறப்பாகக் குறிப்பிடவில்லை.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.