மாறுபக்க கொழுப்பு
From Wikipedia, the free encyclopedia
மாறுபக்க கொழுப்பு (Trans fat) என்று மாறுபக்க-மாற்றியனுள்ள கொழுப்பு அமிலங்களைக் கொண்ட நிறைவுறாக் கொழுப்பினை பொதுவாக அழைக்கின்றோம். இச்சொல்லானது கார்பன்-கார்பன் இரட்டைப்பிணைப்பு அமைவடிவத்தினைக் குறிப்பதால், மாறுபக்க கொழுப்புகள் நிறைவுறாக் கொழுப்பாகவோ அல்லது நிறைவுறாக் கொழுப்பாகவோ இருக்கும். ஆனால், கண்டிப்பாக நிறைவுற்ற கொழுப்பாக இருக்க முடியாது. மாறுபக்க கொழுப்புகள் இயற்கையில் மிக அரிதாகக் காணப்பட்டாலும், உணவுத் தயாரிப்புமுறையின்போது இவை உருவாகின்றன.
உணவிலுள்ள கொழுப்பு வகைகள் |
---|
|
இவற்றையும் காண்க |
மாறுபக்க கொழுப்புகளை உட்கொள்வது குறையடர்த்தி கொழுமியப்புரத (தீய கொலஸ்டிரால்) அளவுகளை அதிகரித்தும், நல்ல கொலஸ்டிரால் (உயரடர்த்தி கொழுமியப்புரத) அளவுகளைக் குறைத்தும்[1] இதயத்தமனி நோய்கான இடரினை அதிகரிக்கிறது[2][3]. உலகளவில், நலவாழ்வு அதிகாரிகள் மாறுபக்க கொழுப்பினைச் சிறிதளவே உட்கொள்ள வேண்டுமெனப் பரிந்துரைக்கிறார்கள். இயற்கையில் உள்ள எண்ணெய்களைக் காட்டிலும் பகுதியாக ஐட்ரசனேற்றப்பட்ட எண்ணெய்களிலுள்ள மாறுபக்க கொழுப்புகள் மிகவும் அதிகமான உடல்நல சீர்கேட்டினை விளைவிப்பவையாகும்[4].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.