மலட்டுத்தன்மை
From Wikipedia, the free encyclopedia
மலட்டுத்தன்மை (Infertility) என்பது ஒரு மனிதனால் , விலங்கினால் அல்லது தாவரத்தினால் இயற்கை வழியில் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருக்கட்டல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சில சமயம் கருத்தரிப்பின்போது, வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது[3]. இவற்றை மலட்டுத்தன்மை சிகிச்சை எனலாம்.
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும் தன்மை காணப்படும். மாதவிடாய் சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.
மலட்டுத்தன்மை | |
---|---|
சிறப்பு | சிறுநீரகம், பெண் நோயியல் |
நிகழும் வீதம் | 113 மில்லியன் (2015)[1] |

வரைவிலக்கணம்
"மக்கட் தொகையியலாளர்களின் வரைவிலக்கணப்படி மலட்டுத்தன்மை என்பது சனத்தொகையில் இனப்பெருக்கத்துக்குரிய வயதை அடைந்த பெண்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாதிருப்பதாகும். அதேவேளை தொற்று நோயியலாளர்களின் வரைவிலக்கணப்படி குழந்தை உருவாக்கத்திற்கான முயற்சியும் வாய்ப்பும் இருந்தும் கரு கொள்ளல் விகிதத்திற்கான வாய்ப்பின்மையை எதிர்கொள்ளுதல் ஆகும் [4] தற்போது பெண்கள் கரு கொள்ளல் விகிதம் அவர்களது 24 வயதில் உச்சமாகவும் அது 30 வயதில் குறைவதாகவும் 50 வயதுக்குப் பின் அரிதாக நடைபெறுவதாகவும் இருக்கும்,[5] முட்டை வெளியேறி 24 மணித்தியாலங்களில் பெண்கள் கருவளம் உள்ளவர்களாக இருப்பர்.[5] ஆண்களில் கருக்கொள்ளல் 25 வயதில் உச்சமாகவும் 40 வயதின் பின் குறைவதாகவும் இருக்கும்.[5]
உலக சுகாதார அமைப்பின் வரைவிலக்கணம்
உலக சுகாதார அமைப்பு மலட்டுத்தன்மை என்பதை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகின்றது:[6]
“ | மலட்டுத் தன்மை என்பது "தொடர்ச்சியான பாதுகாக்கப்படாத உடலுறவு நடைபெற்றும் 12 மாதங்களுக்கு மேலாக ( மாதவிடாய் நிறுத்தம், தாய்ப் பாலூட்டுதல் ஆகியன நடைபெறாத போது) குழந்தைப் பேறு கிடைக்காமை ஆகும். முதன்மை மலட்டுத்தன்மை என்பது ஒரு தம்பதியினருக்கும் ஒருபோதும் குழந்தைப்பேறு கிடைக்காமை ஆகும். இரண்டாம் நிலை மலட்டுத்தன்மை என்பது முந்தைய குழந்தைபேறை அடுத்து கருகொள்ளாமல் காணப்படுவதாகும். | ” |
முதன்மையான எதிர் இரண்டாம் நிலை மலட்டுத்தன்மை
முதன்மையான மலட்டுத் தன்மை என்பது பெண்ணொருவர் குழந்தை பெற விருப்புடையவராக தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேல் எந்தவொரு கருத்தடை சாதனமும் பயன்படுத்தாமல் இணைந்தும் உயிருடன் பிறப்பு ஒருபோதும் நடைபெறாமல் இருப்பதாகும்.[7]
இரண்டாம் நிலை மலட்டுத் தன்மை என்பது பெண்ணொருவர் குழந்தை பெற விருப்புடையவராக தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேல் எந்தவொரு கருத்தடை சாதனமும் பயன்படுத்தாமல் இணைந்தும் முந்திய குழந்தைப் பேறுக்குப் பின் கருக்கொள்ளல் நடைபெறாமல் இருப்பதாகும்.
தாக்கங்கள்
உளவியல் தாக்கம்
மலட்டுத் தன்மை காரணமாக ஒருவர் தனி ப்பட்ட முறையில் கவலைப்படுவதுடன் சமூக மதிப்பும் இல்லாது போகின்றது. ஆயினும் உயர் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி (IVFமுறை),குழந்தைப் பேரைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. மலட்டுத்தன்மை நம்மை அறியாமலேயே மன அழுத்தம்,கட்டுப்பாடின்மை, வயது முதிரும் போதான வளர்ச்சியின் போக்கு என்பன காரணமாக அமையும். .[8]
மலட்டுத் தன்மை பல்வேறு உளவியல் தாக்கங்களையும் தரவல்லது. வாழ்க்கைத்துணை குழந்தைப் பேற்றுக்கு காட்டும் அதீத ஆர்வம் பாலியல் எழுச்சியின்மைக்கு வழிகோலும்.[9] மன முறிவு, மருத்துவத் தீர்மானங்கள் பிரிவுகளை ஏற்படுத்தும். குழந்தைப் பேறின்மை என்பது புற்று நோய், இதயநோய்கள் போல மன அழுத்தத்தைத் தரக்கூடியது.[10]
காரணங்கள்
நிர்ப்பீடன மலட்டுத்தன்மை
விந்துக்கு எதிரான உடலெதிரிகள் காரணமாக 10-30% ஆனவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர்[11] ஆண் பெண் இருபாலானவர்களிலும் உருவாகும் இந்த பிறபொருளெதிரி விந்தின் மேற்பரப்பு உள்ள உடலெதிரியை பாதிப்பதால் அது பெண் கருப்பையின் பயணிக்க முடியாமை, இறப்புவீதம் என்பன கருத்தைத்தலைப் பாதிக்கும்.
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.