From Wikipedia, the free encyclopedia
மாகாத்மா காந்தி என்ற ஆவணப்படம் 1940 ம் ஆண்டு தமிழ் மொழியில் ஏ. கே. செட்டியார் என்பவரால் வெளியிடப்பட்டது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் ஆவணப்படம் எனக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தி பற்றி வெளிவந்த முதல் ஆவணப் படங்களிலும் இதுவும் ஒன்றாகும்.
ஏ. கே. செட்டியாரே இந்தப் படம் தொடர்பாக செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். முதலில் 1937 ஆம் ஆண்டில் எஸ். எஸ். சமரியா என்ற கப்பலில் தென்னாபிரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் தனியார்களிடம் இருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான மகாத்மா காந்தி படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டார். ஆனால் இவ் ஆவணப் படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை[1]. இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 23, 1948 இல் தமிழிலும் தெலுங்கிலும் திரையிடப்பட்டன.[2]. இத்திரைப்படத்தின் பிரதிகள் (படிகள்) எதுவுமே இப்போது இல்லை.
செட்டியார் பின்னர் இத்திரைப்படத்தை 1953 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் தயாரித்து அங்கு வெளியிட்டார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத்திரைப்படத்தின் படியொன்று முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது[1].
"Mahatma Gandhi: Twentieth Century Prophet" என்ற இந்த 55 நிமிட திரைப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன[1].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.