From Wikipedia, the free encyclopedia
மகர் மக்கள் (Magar) நேபாளத்தின் மூன்றாவது பெரிய இனக்குழுவினர் ஆவர். 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாள மக்கள்தொகையில் மகர் மக்கள் 7% ஆகவுள்ளனர். மேற்கு நேபாளத்தில் பாயும் கண்டகி ஆற்றின் மேற்கு கரைப்பகுதியில் அமைந்த லும்பினி மாநிலத்தில் உள்ள குல்மி மாவட்டம், அர்காகாஞ்சி மாவட்டம் மற்றும் பால்பா மாவட்டங்களே மகர் மக்களின் தாயகம் ஆகும்.[1] மகர் மக்கள் மகாயான பௌத்தம், போன் பௌத்தம், ஷாமன் மதம் மற்றும் ஆவியுலகக் கோட்பாடுகளை பின்பற்றுகின்றனர். இம்மக்களின் பெரும்பாலோர் மகர் மொழியும், கைகே மொழியும் பேசுகின்றனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
18,87,733 | |
மொழி(கள்) | |
மகர் மொழி மற்றும் கைகே மொழி | |
சமயங்கள் | |
மகாயான பௌத்தம், போன் பௌத்தம், ஷாமன் மதம், ஆவியுலகக் கோட்பாடு |
2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் வாழும் மகர் மக்கள்தொகை 1,887,733 (7.1%) ஆகும். மகர் மக்கள் லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் உள்ள கீழ்கண்ட மாவட்டங்களில் வாழ்கின்றனர்:[2]
மகர் மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை மற்றும் இராணுவச் சேவை ஆகும்.நேபாளம், இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சிய இராணுவத்தில் மகர் இன கூர்க்கா மக்கள் போர் வீரர்களாகப் பணிபுரிகின்றனர்.[3][4]
கோத் படுகொலைகள் வரை நேபாள இராச்சியத்தின் முக்கிய அரசவைப் பிரபுக்களாக மகர் இனத் தலைவர்கள் இருந்தனர். மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சியிலும், பின்னரும் நேபாள இராச்சிய அரசவையில் ஆறு அமைச்சர்களில் ஒருவராக மகர் இனத் தலைவர் இருந்தார்.[5]நேபாள இராணா வம்ச ஆட்சியின் போது மகர் இன மக்கள் அரசவையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.