Remove ads
From Wikipedia, the free encyclopedia
புகையிலை ஒரு வேளாண்மை உற்பத்திப் பொருள். இதனைப் புகைத்தலுக்கு அல்லது புகையிலை பிடித்தலுக்குப் பயன்படுத்துவதனால் இது புகையிலை என்னும் காரணப்பெயரைப் பெற்றது. இதனைப் புகைத்துப் பழக்கப்பட்டவர்கள் அப் பழக்கத்துக்கே அடிமையாகி விடுவர்[1]. புகையிலை, நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இது அமெரிக்காக் கண்டத்தில் பயன்பட்டு வந்துள்ளது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து இது ஒரு வணிகப் பண்டம் ஆனதுடன், பொழுதுபோக்குத் தேவைகளுக்கான ஒரு பொருளாகவும் பிரபலமானது. இதனால் இது, ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. இப்பகுதிகளில் பருத்தி அறிமுகப்படுத்தப்படும் வரை பணப்பயிராக இதன் முதன்மைத்துவம் நீடித்தது.
புகையிலை | |
---|---|
புகையிலைச் சீவல்கள், துண்டங்கள் | |
Botanical name | புகையிலை |
Source plant(s) | நிக்கோடினா |
Part(s) of plant | இலை |
Geographic origin | தென் அமெரிக்கா |
Active ingredients | நிகோடின், ஹார்மைன் |
Uses | மனக்கிளர்ச்சி மருந்துகள் |
Legal status |
சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த இது நிக்கொட்டீனா எனும் பேரினத்துள் அடங்கும் பல புகையிலை இனங்களும் இதில் உண்டு. இப்பேரினத்தின் பெயர் போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜீன் நிக்கொட் டீ வில்லமெயின் என்பவரைக் கௌரவிப்பதற்காக இடப்பட்டது[2]. இவர் 1560 ஆம் ஆண்டில் கத்தரீன் டி மெடிசியின் அரண்மனைக்கு ஒரு மருந்துப் பொருளாக அனுப்பி வைத்திருந்தார்.
இதனைப் பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய முக்கியமான உடல்நலக் கேடு குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும். புகைத்தல் காலப்போக்கில், வாய், தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் பெருமளவு புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது.
2008ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு புகையிலை இறப்பின் எளிய வழியாகச் சாடியது.[3]
இலைகள் புகைத்தலுக்குப் பயன்படுவதால் இது புகையிலை எனக் காரணப்பெயர் பெறுகிறது.
மேலும் இதனை நுகர உலர வைத்து பொடியாக்கிய புகையிலையை நன்கு துகள்களாக்கி இலையினுள் வைத்து சுருட்டுவதால் புகையிலைச் சுருட்டு எனவும் தமிழில் வழங்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் டொபாக்கோ(tobacco) எனப்படுவது டொபாகோ(tobaco) ஸ்பானிய மற்றும் போர்ச்சுக்கல் மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும். 9ஆம் நூற்றாண்டுகளில் அரபு மொழியிலிருந்து அறியப்பட்ட டுபாக் (طُباق ṭubāq) என்பது பலவகையான மருத்துவ மூலிகைகளைக் குறிப்பதாகும். இதிலிருந்தே பின்னர் 1410ஆம் ஆண்டு ஸ்பானிய, போர்ச்சுகீசிய, இலத்தீன் மொழிகளில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகள் உள்ளன.[4][5]
புகையிலை வரலாற்றின் படி தென்னமெரிக்க மக்களால் கண்டறியப்பட்டு அமெரிக்காவிற்கும், ஸ்பானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கும், பிறகு மற்ற நாடுகளுக்கும் பரவியதாக அறியப்படுகிறது.
ஐரோப்பியர்களின் வருகையால் அமெரிக்காவிலிருந்து புகையிலையின் பயன்பாடு வணிக ரீதியாக ஐரோப்பிய நாடுகளில் பரவ ஆரம்பித்தது.
புகையிலை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ஆஸ்டெரிட்ஸ் |
வரிசை: | சொலனேல் |
குடும்பம்: | சொலனேசி |
பேரினம்: | நிகொடியானா |
இனம்: | நி. டபேக்கம் |
இருசொற் பெயரீடு | |
நிக்கொட்டியானா டபேக்கம் லி. | |
புகையிலை ஆண்டுக்கொருமுறை சாகுபடி செய்யப்படும் பூண்டுத்தாவரம் பணப்பயிர் ஆகும். சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த நிக்கோடியானா பேரினத்தைக் கொண்ட இப்புகையிலையில் பல சிற்றினங்கள் உள்ளன.
நன்கு விளைந்த புகையிலைகள் அறுவடை செய்யப்பட்டு, அல்லது கிள்ளப்பட்டு பதனிடல் (அ) புகையிலைப் பதனீடு செய்யப்படுகிறது. இதனால் புகையிலையிலுள்ள ஈரத்தன்மை, பச்சையம் முதலியன முழுமையாக / பகுதியளவு நீக்கப்பட்டு சுவையும், நறுமணமுமூட்டப் படுகிறது.
புகையிலையின் வகைகளாவன,
உலக புகையிலை உற்பத்தியாளர்கள்
தர வரிசை, 2014[17] | ||||
---|---|---|---|---|
நாடுகள் | உற்பத்தி (டன்)கள் | குறிப்புகள் | ||
சீனா | 213400 | |||
பிரேசில் | 862,396 | |||
இந்தியா | 720,725 | |||
ஐக்கிய அமெரிக்கா | 397,535 | |||
இந்தோனேசியா | 196,300 | |||
பாக்கித்தான் | 129,878 | |||
மலாவி | 126,348 | |||
அர்கெந்தீனா | 119,434 | |||
சாம்பியா | 112,049 | |||
மொசாம்பிக் | 97,075 | |||
உலகம் | 5,755,140 | A | ||
No note = official figure, F = FAO Estimate, A = Aggregate (may include official, semiofficial or estimates). |
ஆண்டொன்றிற்கு , சுமார் 6.7 மில்லியன் டன்கள் புகையிலை உலகம் முழுதும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சீனா (39.6%), இந்தியா (8.3%), பிரேசில் (7.0%) ஐக்கிய அமெரிக்கா (4.6%).[18] விழுக்காட்டில் முக்கிய புகையிலை உற்பத்தி நாடுகளாக உள்ளன.
பிரேசிலில் சுமார் 1,35,000 விவசாயக் குடும்பங்கள் அவர்களின் முக்கியப் பொருளாதாரத்தேவைக்காக புகையிலை சார்ந்த தொழில்களைச் செய்கின்றனர்.
புகையிலை சார்ந்த தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்கள் உலகில் சீனா, இந்தியா, அர்ஜெண்டினா, இந்தொனேசியா, மலாவி, பிரேசில், மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் [24] பயன்படுத்தப்படுகின்றனர்.
புகையிலைப் பயன்பாடால் புற்றுநோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. சான்றாக,
நுரையீரல் வளர்ச்சியைக் குறைக்கிறது. சுவாசப்பாதை குறுக ஆரம்பிக்கிறது. புகையிலை புகைப்பதால் நுரையீரல் சீர்கெட்டு பல்வேறு சுவாசநோய்கள் ஏற்பட முக்கியக் காரணமாக அமைகிறது.
உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
2017 ல் உலக சுகாதார நிறுவனம் புகையிலையும் அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.[36]
புகையிலையின் தீங்கு, பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டு புகையிலையின் விளம்பரங்கள் மற்றும் சந்தைபடுத்டுதலில் பல்வேறு கட்டுப்படுகள் மற்றும் தடைகள் உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப் படுகிறது.
இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதார விழிப்புணர்விற்காக,
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.