Remove ads
பண்டைய கிரேக்க தத்துவஞானி (428/423 - 348/347 கிமு) From Wikipedia, the free encyclopedia
பிளேட்டோ (Plato, (/ˈpleɪtoʊ/; Greek: Πλάτων Plátōn, பழமையான உச்சரிப்பு [plá.tɔːn] கிமு 427 - கிமு 347 ) [1]பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் வல்லுனர். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் கல்விக்கூடம் நிறுவினார். இவர் தனது ஆதரவாளர் சாக்கிரட்டீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டில் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இவரைப்பற்றி ஆய்வாளரான ஏ. என். ஒயிட்ஹெட் பின்வருமாறு கூறியுள்ளார்: [சான்று தேவை]
பிளேட்டோ | |
---|---|
பிறப்பு | 428/427 or 424/423 கிமு ஏதென்ஸ் கிரீஸ் |
இறப்பு | 348/347 கிமு (age அண். 80) ஏதென்ஸ்,கிரீஸ் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Apology பீடோ Symposium Republic |
பகுதி | Western philosophy |
பள்ளி | பிளாட்டோனிசம் |
முக்கிய ஆர்வங்கள் | சொல்லாட்சிக் கலை, கலை, இலக்கியம், அறிவாய்வியல், நீதி, நல்லொழுக்கம், அரசியல், கல்வி, குடும்பம், நட்பு, அன்பு |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | தத்துவார்த்த தத்துவங்கள், பிளாட்டோனிய கருத்துவாதம், தத்துவியலாளர்கலின் அரசன், ஆன்மா பற்றிய பிளாட்டொவின் முத்தரப்பு கருத்துகள், அனுவத்திக்கொடை |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
ஐரோப்பிய தத்துவப் பாரம்பரியத்தின் பாதுகாப்பான பொதுவான குணாதிசயம் என்னவென்றால் அது பிளேட்டோவின் அடிக்குறிப்பு வரிசையைக் கொண்டிருப்பதுதான். அவர் எழுதியவற்றின் சாராம்சங்களை அறிஞர்கள் சந்தேகத்துடன் எடுத்துக் கொண்ட சிந்தனையின் முறையான திட்டம் என்ற பொருளில் நான் சொல்லவில்லை. நான் அவற்றில் பரவியுள்ள பொதுவான கருத்துக்களின் செறிவைத்தான் சொல்கிறேன்.
பிளேட்டோவின் இளமைக் காலம் குறித்து விரிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் அவரின் இளமைக் காலம் குறித்த தகவல்கள் சிறிய அளவில் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, பிளேட்டோ மிகவும் செல்வ செழிப்புமிக்க அரசியல் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்திருக்கிறார். மேலும், கல்வியில் மிகச் சிறந்து விளங்கியுள்ளார். பிளேட்டோ கல்வி கற்பதற்கு அவரின் தந்தை மிகவும் உதவியிருக்கிறார். பிளேட்டோவிற்கு அவரின் தந்தை பல புகழ் பெற்ற கல்வியியலாளர்களைக் கொண்டு இசை, இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்திருக்கிறார்.
பிளேட்டோவின் பிறந்த சரியான நேரத்தையும் இடத்தையும் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பண்டையக் கால ஆதாரங்களின் அடிப்படையில், பெரும்பாலான நவீன அறிஞர்கள் அவர் ஏதென்ஸில் அல்லது ஏஜினாவில் கி மு 429 மற்றும் 423 க்கு இடையில் பிறந்ததாக நம்பப்படுகிறது.[2] பிளாட்டோவின் தாய் பெக்கிக்சே ஆவார், இவர் சார்மிசின் சகோதரி ஆவார்.
தன் வாழ்நாளில் பிளேட்டோ இத்தாலி, சிசிலி, எகிப்து, சைரின் போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.[3] தனது நாற்பதாவது வயதில் ஏதென்ஸ் நகருக்கு வந்த போது கெக்காடமஸ் என்ற பெயரில் மேற்கத்திய பள்ளி ஒன்றை நிறுவினார். இது மேற்கத்திய நாடுகளில் தோற்றுவிக்ககப்பட்ட முதல் பள்ளியாகக் கருதப்படுகிறது.
பிளேட்டோ சாக்கிரட்டீசின் மாணவர். இவருடைய அரசியல் கருத்துகள் மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்தது. இவர் பல்வேறு துறைகளில் வல்லுநராக இருந்தார். கி.மு 387 ஆம் ஆண்டில் அத்தீனியன் என்ற பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இதன் மூலம் சிறந்த தத்துவவாதிகளை உருவாக்க வேண்டும் என விரும்பினார். இவருடைய அரசியல் கருத்துகள் செரக்யூஸை ஆண்டு வந்த டைனீஸஸ் போன்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவருடைய அரசியல் கருத்துக்களைக் குடியரசு (நூல்) மற்றும் சட்டங்கள் (Laws) என்ற நூலில் எழுதியுள்ளார்.[4]
பிளேட்டோவின் அரசியல் பாகுபாட்டின் விளக்கங்கள் மிகவும் கற்பனை நிறைந்தது. இவருடைய கற்பனையான விளக்கத்தைத் தன்னுடைய நூலான குடியரசுவில் தெளிவாகக் கூறியுள்ளார். இவருடைய அரசியல் பாகுபாட்டினை அரிஸ்டாட்டில் மற்றும் கால்வின் போன்றவர்களுடன் ஒப்பிடலாம். பிளேட்டோவின் கருத்தின்படி ஒரு நாட்டின் தலைவன் என்பவன் மெய்யியல் தெரிந்த மன்னனேயாகும். (Republic 475c) இவருடைய கோட்பாடுகளின் படி மன்னன் சட்டத்திற்கும் , தன்னலத்திற்கும் அப்பாற்பட்டவன். அவ்வாறு இருப்பவனே ஒரு தலை சிறந்த தலைவனாக இருக்க முடியும் எனக் கருதினார். இவருடைய கருத்தின்படி மன்னன் என்பவன் முழு அதிகாரம் பெற்றவனாகவும், அவனை எதிர்த்து எவரும் வினா எழுப்ப இயலாது எனவும் கூறுகிறார்.
ஒரு நாட்டின் அமைதிக்கும் , நல்லாட்சிக்கும் நீதியே முக்கியமானதாக இருக்கவேண்டும் எனக் கூறுகிறார்.
இவரது கற்பனையின் படி மன்னன் வரம்பிற்கு மீறிய அதிகாரங்களுடன் இருந்தாலும் இயற்கைக்கு எதிராகச் செயல்பட இயலாது. பிளேட்டோ சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஏழை - பணக்காரர் என்ற பிரிவு, நாட்டின் அளவு, நீதியின் தன்மை, கல்வி இவற்றையெல்லாம் விளக்கி உள்ளார்.
இவரது குடியரசு எனும் நூலில் பலவகையான அரசாங்கங்களைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் அவை மாற்றங்களுக்கு உட்பட்டது எனவும் கூறியுள்ளார். இவர் ஐந்து வகையான அரசாங்கங்கள் உள்ளன எனக் கூறியுள்ளார். அவையாவன,
இவற்றில் முதலாவதாக இருப்பதும் மற்றும் கடைசியாக இருப்பதும் ஒருவரிடம் இருக்கும் அதிகாரத்தைக் குறிக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருசிலரிடம் இருக்கும் ஆட்சியையும் , நான்காவதாக இருப்பது பலபேரிடம் இருக்கும் ஆட்சியையும் குறிக்கிறது. இவற்றில் முதலாவதாக இருப்பது நல்ல ஒரு மனிதரிடம் இருப்பது . அவரே பிளோட்டோவின் தத்துவ மன்னர் ஆவார். இந்த அரசன் நீதியின் அடிப்படையிலேயே ஆட்சி செய்வான். ஆனால் காலப்போக்கில் அவன் தன்னுடைய பெருமைக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் ஆட்சி செய்வான். அவன் நீதியின் வழியில் செல்வதையும் மறந்து விடுவான். இவாறு ஆட்சி செலுத்தும் தனி மனிதனைப் பதவியில் இருந்து நீக்கி சொத்து (தத்துவம்) உள்ளவர்கள் மட்டும் அரசாங்கம் நடத்துவது செல்வர் ஆட்சி (Timocracy) என்று பிளேட்டோ கூறுகிறார்.
பிளேட்டோ ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது அவர் எழுதியுள்ள சாக்ரடீஸின் கேள்வி பதிலில் இருந்து தெரிகிறது. இதில் முப்பத்தாறு உரையாடல், பதிமூன்று கடிதங்களை இவர் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிளேட்டோவின் எழுத்துக்கள் பல வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிளேட்டோ எழுதியவற்றுக்குப் பெயரிடுதல் மற்றும் குறிப்பிடுதலை பற்றி விவாதிக்கும் பல்வேறு கூட்டங்கள் நடைபெற வழிவகுத்தது.
பிளேட்டோவின் உரையாடல்கள் தத்துவம், தர்க்கம், நெறிமுறைகள், சொல்வளம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளைக் கற்பிக்கப் பயன்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.