From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 (War of 1812) வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுடன் பெரும்பிரித்தானியாவும் அதன் குடியேற்றங்களும் சிவப்பிந்திய நேசப் படைகளும் இணைந்து தொடுத்த 32-மாத போரினைக் குறிக்கும். இந்தப் போரின் விளைவாக எந்த எல்லை மாற்றமும் ஏற்படாதபோதும், அமெரிக்கப் புரட்சிப் போரிலிருந்து தீர்க்கப்படாதிருந்த பல சிக்கல்களுக்கு முடிவுண்டாயிற்று. 1812இல் ஐக்கிய அமெரிக்கா பல காரணங்களுக்காக போர் அறிவித்தது; முதன்மைக் காரணிகளாகப் பிரித்தானியாவின் தொடர்ந்த பிரான்சியப் போரினால் விதிக்கப்பட்ட வணிகக் கட்டுப்பாடுகள், அமெரிக்க வணிக கப்பல் மாலுமிகளை அரச கடற்படைக்கு கட்டாயச் சேவைக்குட்படுத்தல், அமெரிக்க விரிவாக்கத்தை எதிர்த்த அமெரிக்க செவ்விந்திய குடிகளுக்கு பிரித்தானியா வழங்கிய உதவி, நடுக்கடலில் ஏளனப்படுத்திய பின்னர் தேசிய பெருமைக்கு ஏற்பட்ட களங்கங்கள், ஒருவேளை அமெரிக்காவிற்கு கனடாவைக் கையகப்படுத்தும் ஆர்வம் [3] ஆகியன அமைந்தன.
பிரித்தானிய அமெரிக்கப் போர் 1812 | |||||||
---|---|---|---|---|---|---|---|
வலதிலிருந்து இடதாக, மேலிருந்து: வாசிங்டன் எரியூட்டலுக்குப் பின்னர் சேதமடைந்த அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்; குயின்ஸ்டன் ஐயிட்சு என்னுமிடத்தில் கடும் காயமடைந்த ஐசக் புரோக் துருப்புக்களை உற்சாகப்படுத்துதல்; அமெரிக்க கன்ஸ்டிடியசன் கப்பலும் பிரித்தானிய கெர்ரியர் கபலும் போரிடல்; மொரோவியன்டவுணில் டிக்கம்சாவின் மரணம்; நியூ ஓர்லியன்சு தற்காப்பிற்கு ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையேற்றல். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்காவும் நேசப்படைகளும் | பிரித்தானியப் பேரரசும் நேசப்படைகளும்
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜேம்ஸ் மாடிசன்
| இராபர்ட் ஜென்கின்சன், லிவர்ப்பூல் பிரபு | ||||||
பலம் | |||||||
ஐக்கிய அமெரிக்கா •வழமையான ஐக்கிய அமெரிக்கப் படைகள்: — 7,000 (போர் தொடங்கியபோது); — 35,800 (போர் முடிவின்போது) •ஐக்கிய அமெரிக்க ரேஞ்சர்கள்: 3,049 •ஐக்கிய அமெரிக்கப் குடிப்படைகள்: 458,463 * •ஐக்கிய அமெரிக்க கடற்படை, ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு, and சுங்க படைப் பிரிவு (போரின் துவக்கத்தில்): — பீரங்கிப் போர்க்கப்பல்: 6 — மற்ற கப்பல்கள்: 14 உள்நாட்டு நட்புப் படையினர்: — 125 சோக்டா, — (அறியப்படாத மற்றவர்கள்)[1] | பிரித்தானியப் பேரரசு •பிரித்தானியப் படைகள்: — 5,200 (போரின் துவக்கத்தில்); — 48,160 (போரின் முடிவில்) •மாநில வழமையாளர்கள்: 10,000 •மாநில குடிப்படை: 4,000 •அரச கடற்படை மற்றும் அரச ஈரூடகப் படைப்பிரிவு: — அணிவகுப்புப் போர்க்கப்பல்கள்: 11 — பீரங்கிப் போர்க்கப்பல்கள்: 34 — பிற கப்பல்கள்: 52 •மாநில கப்பற்படையினர் ‡ : — கப்பல்கள்: 9 (போர் தொடக்கத்தில்) உள்நாட்டு அணிகள்: — 10,000 [2] |
||||||
இழப்புகள் | |||||||
* 2,260 களச்சாவு.
| * 1,600 களச்சாவு
|
||||||
* * சில இராணுவங்கள் தங்கள் பகுதிகளில் மட்டுமே போரிட்டன.
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.