பிரிட்ஜோப் நான்ஸன்
From Wikipedia, the free encyclopedia
பிரிட்ஜோப் நான்ஸன் (Fridtjof Nansen) (பிறப்பு: 1861-இறப்பு: 1930) நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் பிறந்தவர். சிறந்த கடல் ஆராய்ச்சியாளர், விலங்குகள் ஆராய்ச்சியாளர், ஓவியர், கடல் ஆய்வுப்பயணம் செய்பவர் மற்றும் மனிதநேயம் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர்.
பிரிட்ஜோப் நான்ஸன் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஓஸ்லோ, நார்வே | 10 அக்டோபர் 1861
இறப்பு | 13 மே 1930 68) நார்வே | (அகவை
கல்வி | ஓஸ்லோ பல்கலைக்கழகம், ராயல் பிரடெரிக் பல்கலைக்கழகம் |
பணி | அறிவியலாளர், கடல் ஆய்வுப்பயணம் மற்றும் மனித நேயப் பணிகள் |
சமயம் | இறைமறுப்பாளர்[1] |
பெற்றோர் | பால்டுர் நான்ஸன் - அடிலாய்டி நான்ஸன் |
வாழ்க்கைத் துணை | பிராம் நான்ஸன் |
பிள்ளைகள் | 2 மகள்கள், 3 மகன்கள் |
விருதுகள் | நோபல் பரிசு,(1922) ஆர்டர் ஆப் செயிண்ட் ஒலவ் ஆர்டர் ஆப் டன்னர்ப்ரொக் விருது, நார்வே அரசின் தேசியப்படையணி விருது, குல்லம் புவியியல் விருது.(1897) |
கையொப்பம் | ![]() |
கடற்பயணங்கள்

1888ஆம் ஆண்டில் கிரீன்லாந்தை கிழக்கிலிருந்து மேற்காகக் கடக்கத் திட்டமிட்டு, அதன்படி 2 மாதங்கள் வரை வட அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பல் மூலம் பயணித்து அரிய வானிலைத் தகவல்களைச் சேகரித்தார்.[2]
1893ஆம் ஆண்டு நான்ஸன் வட துருவம் நோக்கி கப்பலில் தன் பயணத்தைத் தொடர்ந்தார். ஆர்டிக் கடல் நீரோட்டங்கள் பற்றியும், பனிப்பாறைகளின் நகர்வு பற்றியும் ஆய்ந்து குறிப்புகள் எழுதினார்.[3][4]
விடுதலைப் போராட்டம்
1905ஆம் ஆண்டு வரை சுவீடனிடம் அடிமை நாடாக இருந்த நார்வேயை, விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி, நார்வேக்கு விடுதலைப் பெற்றுத் தந்தார்.[5]
மனிதநேயப் பணிகள்
- முதல் உலகப் போர் முடிவில் நார்வேயின் 4,27,000 படை வீரர்கள் ரஷ்யாவிடம் போர்க் கைதிகளாக இருந்தனர். நான்ஸன் உருசியாவிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, நார்வே படைவீரர்களை மீட்டார்.
- உருசியப் புரட்சியின் போது பல்லாயிரம் மக்கள் ஏதிலிகளாக ஐரோப்பாவிற்கு வந்தனர். நான்ஸன் அவர்களை ஒன்றுதிரட்டி சான்றிதழ் வழங்கினார். இச்சான்றிதழே நான்ஸன் பாஸ்போர்ட் என்று அழைக்கப்பட்டது. இவரின் மனித நேயத்திற்காக, இவர் வழங்கிய சான்றிதழ்களை 52 நாடுகள் அங்கீகரித்து அவற்றை வைத்திருப்போருக்கு வாழிடம் வழங்கியது. அச்சான்றிதழில் எந்தவித அரசு முத்திரையும் இல்லை. நான்ஸனின் மார்பளவுப் புகைப்படம் மட்டுமே இருந்தது. "இதை வைத்திருப்பவர் நம்முள் ஒருவர். அகதியாய் வந்தவர். அவரைக் காப்போம்!' என்ற வாசகம் மட்டுமே அதில் எழுதப்பட்டு இருந்தது. இதன் மூலம் சுமார் ஒன்றரை லட்சம் பேர் மறுவாழ்வு பெற்றனர்.[6][7]
விருதுகள்
கடல் ஆய்வுகள், நார்வே விடுதலை இயக்கம் மற்றும் மனிதநேயப் பணிகளுக்காக கிடைத்த விருதுகள். [8].[9]
- 1922ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு[10].
- ஆர்டர் ஆப் செயிண்ட் ஒலவ் விருது.
- ஆர்டர் ஆப் டன்னர்ப்ரொக் விருது
- நார்வே அரசின் தேசியப்படையணி விருது
- குல்லம் புவியியல் விருது.
ஊடகங்களில்
பிரிட்ஜோப் நான்சனின் 156வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், கூகுள் நிறுவனம், 10 அக்டோபர் 2017 அன்று, கூகுள் தளத்தின் முதல் பக்கத்தில் ஒரு சிறப்பு டூடுல் சித்திரம் வெளியிட்டுள்ளது.[11][12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.