Remove ads
From Wikipedia, the free encyclopedia
வட துருவம், அல்லது வட முனை (North pole), புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள, அதன் சுழல் அச்சும், மேற்பரப்பும் சந்திக்கும் புள்ளியைக் குறிக்கும். இதை, புவியியல் வட துருவம் என்றும் புவிசார் வட துருவம் என்றும் அழைப்பதுண்டு. இது காந்தவியல் வட துருவத்தில் இருந்தும் வேறுபட்டது.
வட துருவம் புவியின் வட கடைக் கோடியில் உள்ள புள்ளி, தென் துருவத்துக்கு நேர் எதிராக உள்ளது. இது நிலநேர்க்கோடு 90° வடக்கையும், உண்மை வடக்குத் திசையையும் குறிக்கிறது. வட துருவத்தில் எல்லாத் திசைகளும் தெற்கையே குறிக்கின்றன.
நிலத்திணிவின் ஒரு பகுதியாக உள்ள தென் துருவம் போலன்றி வட துருவம், தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கும் கடற் பனிக்கட்டிகளால் நிரந்தரமாக மூடப்பட்டு ஆர்க்டிக் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ளது. இதனால் நிரந்தரமான நிலையம் ஒன்றை வட துருவத்தில் நிறுவுவது இயலாததாக உள்ளது. எனினும், முன்னைய சோவித ஒன்றியமும், பின் வந்த ரஷ்யாவும் பல ஆளியக்கு மிதக்கும் நிலையங்களை நிறுவியுள்ளன. இவற்றுட் சில வட துருவத்துக்கு மிக அண்மையில் உள்ளன. ஆர்க்டிக் சுருக்கம் காரணமாக, 2050 ஆம் ஆண்டளவில், வட துருவத்தில் பனியற்ற பருவகாலம் ஏற்படக்கூடும் என அண்மையில் சில அறிவியலாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
வட துருவத்தின் கீழ் கடலின் ஆழம் 4261 மீட்டர் (13,980 அடி) என அளக்கப்பட்டுள்ளது. இதற்கு மிக அண்மையில் உள்ள நிலப்பகுதி காஃபெக்லுபென் தீவு ஆகும். இது கிறீன்லாந்துக் கரையில் இருந்து 440 மைல்கள் (700 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. நிரந்தரமற்ற உடைகல் நிலப்பகுதிகள் சில மேலும் சிறு தொலைவு வடக்கே அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வட துருவத்தில் சூரியன் தொடர்ந்து கோடைகாலத்தில் அடிவானத்தில் மேலேயும் மற்றும் தொடர்ந்து குளிர்காலத்தில் அடிவானத்திற்கு கீழேயும் உள்ளது. சூரியன் சுமார் 20 மார்சு அன்று உதயமாகும். சூரியன் அதன் உச்ச நிலையினை 23½ ° உயரத்தை கோடைகாலத்தில் சூன் 21 அன்று அடையும். இதன் பிற்கு மெல்ல சூரியன் மறையத் தொடங்கும். சுமார் 23 செப்டம்பர் அன்று முழுவதுமாக மறையும் அதுவரை இந்த நிகழ்வு தொடரும். சூரியன் துருவ வானிலிருந்து தோன்றும் போது, அது அடிவானத்திற்கு மேலே ஒரு கிடைமட்ட வட்டத்திற்குள் நகர்த்துவதாக தோன்றும். இந்த வட்டம் படிப்படியாக கோடைகால மழைக்காலத்தில் அடிவானத்திற்கு மேல் அதன் அதிகபட்ச உயரத்திற்கு (டிகிரிகளில்) வந்தப் பிறகு, அடிவாரத்தின் அருகே இருந்து உயர்கிறது, மேலும் அது இலையுதிர்காலத்தில் கீழே மூழ்கி முன் அடிவானத்தில் நோக்கி மறைகிறது. எனவே வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள் பூமியில் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நிகழ்வுகள் மெதுவான விகிதங்களில் நடக்கின்றது.
சூரிய உதயத்திற்கு முன் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சுமார் இரண்டு வாரங்களுக்கு ஒரு மெல்லிய வெளிச்சம் கொண்ட அந்திக் காலம் ஏற்படுகிறது, ஒரு கடல் மைல் தொலைவிற்கு அந்திப் பொழுது வெளிச்சம் சுமார் ஐந்து வாரங்களுக்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஏற்படுகிறது மற்றும் சுமார் ஏழு வாரங்களுக்கு ஒரு வானியல் ஒளியின் காலத்திற்கு ஈடான அந்திப் பகல் சூரிய உதயத்திற்கு முன் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் ஏற்படுகிறது.
இந்த விளைவுகள் பூமி தனது அச்சில் சுழல்வதாலும் மற்றும் சூரியனை அதன் சுற்றுப்பாதையில் பூமி சுற்றி வருவதாலும் நிகழ்கிறது. பூமியின் சுழலும் அச்சின் திசையிலும் மற்றும் சூரியனை சுற்றி வரும் பூமியின் சுற்றுப்பாதையின் அதன் கோணத்திலும் ஏற்படும் மாற்றங்கள், ஒரு ஆண்டு காலப்பகுதியில் மிகவும் மெதுவாகவே உள்ளது (இரண்டுமே நீண்ட காலத்திற்குள் மிக மெதுவாக மாறுகின்றன). வட துருவம் சூரியனை அதன் கோடைக்கால மத்தியில் அதிகபட்ச அளவிற்கு எதிர்கொள்ளும், நாட்கள் மெதுவாக நகர்ந்துச் செல்ல பூமி சூரியனை சுற்றி வருவதால், வட துருவம் சூரியனை விட்டு விலகத் தொடங்குகிறது. இது ஆறு மாதக் காலத்திற்கு இருக்கும். இதேபோன்ற நிலை தான் தென் துருவத்திலும் காணப்படுகிறது.
பூமியின் பெரும்பாலான இடங்களில், உள்ளூர் நேரம் தீர்க்கரேகை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது, ஏன்னென்றால் அந்த நாள் நேரம் வானில் சூரியனின் நிலைக்கு ஒத்ததாகவோ குறிக்கவோ அல்லது அளவிடப்படுகிறது (எடுத்துக்காட்டாக, நடுப்பகலில் சூரியன் அதன் உச்சநிலையில் உள்ளது). வட துருவத்தில் இந்த வழி முறை தோல்வியடைகிறது, ஏனென்றால் சூரிய உதயமும் அஸ்தமனமும் வருடத்திற்கு ஒருமுறை தான் நிகழ்கிறது மேலும் அனைத்து தீர்க்கரேகைகளும் துருவத்தில் ஒன்றிணைவதால் அனைத்து நேர மண்டலங்களும் ஒருங்கிணைக்கின்றன. வட துருவத்தில் நிரந்தரமாக மனிதர்கள் வாழ்வதில்லை என்பதால் ஒரு குறிப்பிட்ட நேர மண்டலம் என்று எதுவும் ஒதுக்கப்படவில்லை. அதனால் துருவப் பயணம் மேற்கொள்வோர், அவர்களுக்கு வசதியான எந்த நேரத்தையும் பயன்படுத்தலாம்.
தென் துருவத்தைக் காட்டிலும் வட துருவம் கணிசமாக வெப்பமானதாக உள்ளது, ஏனெனில் ஒரு கண்டதின் நிலப்பகுதியின் உயரத்தை விடவும் வட துருவம் கடலின் நடுவில் கடல் மட்டத்தில் உள்ளது (இது வெப்பத்தின் நீர்த்தேக்கமாக செயல்படுகிறது). ஒரு பனி மூடி இருந்தபோதிலும், சூலை மற்றும் ஆகத்து வெப்பநிலைகள் உறைபனிக்கு மேல் உயர்ந்து வருவதால், டன்ட்ரா காலநிலை (ETF) சில அம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறது.
வட துருவத்தின் கடல் பனியின் அடர்த்தி பொதுவாக 2 முதல் 3 m (6 அடி 7 அங் முதல் 9 அடி 10 அங்) உள்ளது.[1] பனியின் அடர்த்தி, அதன் வெளி சார்ந்த மற்றும் பனிக்கட்டியில் உள்ள திறந்த நீரின் அளவு ஆகியவை விரைவாகவும், வானிலை மற்றும் காலநிலை காரணமாகவும் மாறுபடும்.[2] சமீபத்திய ஆண்டுகளில் சராசரியாக பனியின் அடர்த்தி குறைந்துவிட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன.[3] இதற்கு புவி வெப்படைதல் ஒரு காரணியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் சமீபத்தில் ஆர்க்டிக்கில் காணப்பட்ட வெப்பம் முற்றிலும் பனி உருகுவதற்குக் காரணமாக இருக்கிறது.[4] சில தசாப்தங்களுக்குள் ஆர்க்டிக் பெருங்கடலில் கோடைகாலத்தில் முற்றிலும் பனிப்பகுதிகள் இருக்காது என்று அறிக்கைகள் கணித்துள்ளன.[5] இது குறிப்பிடத்தக்க வர்த்தக தாக்கங்களைக் கொண்டிருக்கலாம்;
ஆர்க்டிக் கடல் பனி சுருங்குவதால் புவி வெப்பமடைதலை விரைவுபடுத்துகிறது, ஏனெனில் குறைந்த பனிப்பரப்பு குறைவான சூரிய கதிர்வீச்சை பிரதிபலிக்கிறது, மேலும் ஆர்க்டிக் சூறாவளி தோன்ற்வதன் மூலம் கடுமையான காலநிலை தாக்கங்களை ஏற்படுத்தும்.[6]
தட்பவெப்ப நிலைத் தகவல், Greenlandic Weather StationA | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | -13 (9) |
-14 (7) |
-11 (12) |
-6 (21) |
3 (37) |
10 (50) |
13 (55) |
12 (54) |
7 (45) |
-2 (28) |
0.6 (33.1) |
0.7 (33.3) |
13 (55) |
உயர் சராசரி °C (°F) | -29 (-20) |
-31 (-24) |
-30 (-22) |
-22 (-8) |
-9 (16) |
0 (32) |
2 (36) |
1 (34) |
-7 (19) |
-18 (-0) |
-25 (-13) |
-26 (-15) |
−16.2 (2.9) |
தினசரி சராசரி °C (°F) | -31 (-24) |
-32 (-26) |
-31 (-24) |
-23 (-9) |
-11 (12) |
-1 (30) |
1 (34) |
0 (32) |
-9 (16) |
-20 (-4) |
-27 (-17) |
-28 (-18) |
−17.7 (0.2) |
தாழ் சராசரி °C (°F) | -33 (-27) |
-35 (-31) |
-34 (-29) |
-26 (-15) |
-12 (10) |
-2 (28) |
0 (32) |
-1 (30) |
-11 (12) |
-22 (-8) |
-30 (-22) |
-31 (-24) |
−19.8 (−3.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -47 (-53) |
-50 (-58) |
-50 (-58) |
-41 (-42) |
-24 (-11) |
-12 (10) |
-2 (28) |
-12 (10) |
-31 (-24) |
-41 (-42) |
-41 (-42) |
-47 (-53) |
−50 (−58) |
% ஈரப்பதம் | 83.5 | 83.0 | 83.0 | 85.0 | 87.5 | 90.0 | 90.0 | 89.5 | 88.0 | 84.5 | 83.0 | 83.0 | 85.83 |
ஆதாரம்: Weatherbase[7] |
வட துருவக் கரடிகள் உண்வுப் பற்றாக்குறையின் காரணமாக வடக்கே 82 டிகிரிக்கு அப்பால் பயணம் செய்கிறது. அதனால் இவைகள் அரிதாகவே துருவத்தின் அருகில் காண்ப்படுகிறது. ஆனால் கரடிகளின் பாதத் தடங்கள் துருவப் பகுதியில் காணப்பட்டுள்ளது. மேலும் 2006 ஆம் ஆண்டில் துருவப்பயணத்தில் ஒரு துருவக் கரடி துருவத்திலிருந்து 1 mi (1.6 km) தொலைவில் காணப்பட்டது.[8][9] மோதிர வளைவைக் கொண்ட நீர்நாய்கள் வட துருவத்தின் அருகில் காணப்பட்டது மற்றும் துருவ நரிகள் வட துருவத்திலிருந்து சுமார் 60 கிமீ (37 மைல்) தொலைவில் காணப்படுகின்றன.[10][11]
பறைவகள் வட துருவத்தின் அருகே காணப்பட்டுள்ளது. அவைகளில் கறுப்பு-கால்-கிகிவேக், ஸ்னோ பன்டிங், வடக்கு புல்மார் ஆகும். பறவைகள் சில சமயங்களில் கப்பல்களை பின் தொடர்வதால் இடருக்கு உள்ளாகின்றன.[12]
வட துருவத்தில் கடல் மீன் காணப்படுகிறது, ஆனால் இவை அநேகமாக சில எண்ணிக்கையில் உள்ளன.[12] ஆகஸ்ட் 2007 இல், வட துருவத்திற்குச் சென்ற ரஷ்ய அணியின் அங்கத்தினர் ஒருவர் அங்கே கடல் உயிரினங்களைக் காணவில்லை என்று அறிக்கை கொடுத்தார்.[13] இருப்பினும், ரஷ்ய அணியினர் கடற்பாறையிலிருந்து கடல் அனிமோனைக் பார்த்ததாகவும், மேலும் ஒளிக் காட்சிகளில் கடலுக்கு அடியில் இருந்து அடையாளம் காணப்படாத இறால்கள் மற்றும் amphipods ஆகியவற்றைக் காணமுடிந்ததாகவும் பின்னர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டனர்.[14]
தற்போது, சர்வதேச சட்டத்தின் கீழ், எந்த நாடும் வட துருவத்தையோ அல்லது சுற்றியுள்ள ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியையோ சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை. ஆர்க்டிக்கைச் சுற்றியுள்ள நாடுகளான, ரஷியன் கூட்டமைப்பு, கனடா, நோர்வே, டென்மார்க் (கிரீன்லாந்து வழியாக) மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றால், அவற்றின் கடற்கரையிலிருந்து 200 கடல்-மைல்கள் (370 கிமீ, 230 மைல்) சுற்றியுள்ள பிரதேசத்தில், பிரத்தியேக பொருளாதார மண்டலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதற்கும் அப்பால் உள்ள பகுதிகள் சர்வதேச கடல் ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
கடல் சட்டத்தின் மீதான ஐக்கிய நாடுகள் அவையின் ஒப்புதலுடன், 200 மைல் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அப்பால் நீட்டிக்கப்பட்ட கண்டத்தின் நிலப்பகுதியாக கோருவதற்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு நாட்டிற்கு உரிமை உள்ளது. அப்படி, கோரப்பட்ட மண்டலத்திற்குள்ளேயே கடலுக்கு அடியில் இருக்கும் அல்லது அதற்குக் கீழ்ப்பகுதிகளில் இருப்பவற்றை உரிமை கோரவும் அந்த நாட்டிற்கு அனுமதி கிடைக்கிறது.[15] நோர்வே (1996 இல் மாநாட்டில் ஒப்புதல் அளித்தது [16]), ரஷ்யா (1997 இல் [16] உறுதிப்படுத்தப்பட்டது), கனடா (2003 இல் [16] உறுதிப்படுத்தப்பட்டது) மற்றும் டென்மார்க் (2004 இல் [16] உறுதிப்படுத்தப்பட்டது) இந்த நாடுகளால் தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தங்களின் அடிப்படை உரிமையான ஆர்க்டிக் கண்டத்தில் பகுதிகளில் தங்கள் முழு இறையாண்மைக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதாகவே உள்ளது.
கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான அண்டார்டிகா கண்டத்தின் வரலாறு, புவியியல், அறிவியல் அம்சங்கள் அனைத்துமே விவரிக்கப்பட்டுள்ள முழுநூல். [தொடர்பிழந்த இணைப்பு] ISBN 81-8368-228-6
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.