உருளை வடிவிலான இசைக்கருவி From Wikipedia, the free encyclopedia
பம்பை ஒரு தாள இசைக் கருவி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
|
பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை "அவனத்த வாத்தியம்" (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். "அவனத்த" என்றால் மூடிய என்று பொருள்.ஆரம்ப காலத்தில் பம்பையானது வெண்கலம் மற்றும் பித்தாளை போன்ற உலோகத்தால் பயன்படுத்தி வந்தனர் ஆனால் இப்போது இரும்பு(கலாய்) தகடு போன்ற உலோகத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் நையாண்டி மேளம் என்று சொல்லப்படும் ஒரு வகை பிரிவினர் மரத்தால் (பலா, வேங்கை)செய்து இசைத்து வருகின்றனர்..
பம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.
பம்பை என்னும் இந்த இசைக்கருவியை வாசிப்பவர் தமிழ் நாட்டில் பம்பைக்காரன் என்றும் ஆந்திராவில் "பாம்பால" என்றும் அழைக்கப்படுகிறார். திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப்படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி அங்காளபரமேஸ்வரி கதைப் பாடல்களை பாடுகின்றனர். 24 மனை தெலுங்கு செட்டியார் குலதெய்வக் கோவில்களில் பம்பைக்காரரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். பெரும்பாலும் இவர்கள் கோவில் ஊழியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.
மேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு உறுமி, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். தமிழ் நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது.
தொகு | தமிழிசைக் கருவிகள் |
---|---|
தோல் கருவிகள் | ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
|
நரம்புக் கருவிகள் | வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
|
காற்றிசைக் கருவிகள் | கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
|
கஞ்சக் கருவிகள் | தாளம் | சேகண்டி |
|
பிற | கொன்னக்கோல் | கடம் |
|
Seamless Wikipedia browsing. On steroids.