From Wikipedia, the free encyclopedia
சேகண்டி அல்லது சேமக்கலம், மேலும் இதனைச் சவுண்டி , செகண்டை , செயகண்டி , செயகண்டிகை , என்றும் அழைக்கப்படுகிறது. சேமக்கலத்தை வெண்கலத்தால் வட்ட வடிவமாக உருவாக்கப்படுகிறது. வெண் சங்கொலியுடன், சேகண்டி அல்லது சேமக்கலத்தை, கனத்த தேக்கு குச்சியால் அடித்து ஒலி எழுப்பப்படுகிறது.
திருச்சங்கு திருமாலுக்கு உரியது. சேமக்கலம் சிவனுக்கு உரியது. சிவனும், திருமாலும் ஒன்றே என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்கும் பொருட்டு சேமக்கலத்தை, சங்கொலியுடன் இணைத்து இசைக்கப்படுகின்றன.[1]
சிவன் கோயில்களில் சுவாமி புறப்பாட்டின்போது சேமக்கலம் எனும் சேகண்டி இசை ஒலி எழுப்பப்படுகிறது. பிற்காலத்தில் மனித இறப்புகளில் சேகண்டியுடன் சங்கு ஒலிப்பது நடைமுறைக்கு வந்துள்ளது. இறப்புகளில் வாசிக்கப்படும் பித்தளையால் ஆன சேமக்கலத்தை சேகண்டி அல்லது சவுண்டி அல்லது சேகண்டி என்பர்.
மேற்கு வங்காள மாநிலத்தில் திருமண விழாவின் போது சேமக்கல ஒலியுடன், சங்கொலி மற்றும் குலவை ஒலி பெண்களால் எழுப்பப்படுகிறது.
சோமன் எனும் சந்திரன் போன்ற வட்ட வடிவ அமைப்பு கொண்ட சேகண்டிக்கு சோமன் கலம் . என்ற பெயராயிற்று. பின்னர் இப்பெயர் மறுவி சேமக்கலம், சேகண்டி என்றாயிற்று.
Seamless Wikipedia browsing. On steroids.