பகாங் ஆறு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பகாங் ஆறு; (மலாய்: Sungai Pahang; ஆங்கிலம்: Pahang River) என்பது மலேசியாவின் பகாங் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஆறு ஆகும். 459 கி. மீ. நீளமுடைய இந்த ஆறு தீபகற்ப மலேசியாவில் மிக நீளமான ஆறு ஆகும்.
பகாங் ஆறு Pahang River | |
---|---|
அமைவு | |
நாடு | மலேசியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ஜெலாய் ஆறு |
⁃ அமைவு | தித்திவாங்சா மலைத்தொடர் |
2nd source | தெம்பிலிங் ஆறு |
⁃ அமைவு | உலு தெம்பிலிங் |
முகத்துவாரம் | தென்சீனக் கடல் |
⁃ அமைவு | கோலா பகாங் |
நீளம் | 459 km (285 mi) |
வடிநில அளவு | 29,300 km2 (11,300 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 596 m3/s (21,000 cu ft/s) |
இந்த ஆறானது, தித்திவாங்சா மலைத்தொடரில் உள்ள ஜெலாய் மற்றும் தெம்பெலிங் ஆறுகளின் சந்தியில் உற்பத்தியாகி தென்சீனக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் வடிநிலப் பகுதியின் பரப்பளவு 29,300 சதுர கி.மீ ஆகும். இந்தப் பரப்பில் 27,000 சதுர கி.மீ. அளவிற்கு பகாங் மாகாணத்திலேயே அமைந்துள்ளது. [1]
தித்திவாங்சா மலைத்தொடரின் (Titiwangsa Mountains) மேல் சரிவுகளில் உள்ள கேமரன் மலையில் இருந்து ஜெலாய் ஆறு (Jelai River), தென்கிழக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. பகாங் ஆறு, தெம்பிலிங் ஆற்றில் (Tembeling River) சேர்வதற்கு முன்பாக கோலா லிப்பிஸ் வழியாகப் பாய்கிறது.[2]
தெம்பிலிங் ஆறு, பகாங் மற்றும் திராங்கானு மாநிலங்களின் எல்லையில் உள்ள உலு தெம்பிலிங்கில் தொடங்கி தென்கிழக்கு திசையில் நகர்ந்து கோலா தாகான் வழியாகக் கடந்து செல்கிறது.
பகாங் ஆறு, தெற்கு திசையில் கடந்து ஜெராண்டுட், கோலா குராவ், கெர்டாவ் (Kerdau) மற்றும் தெமர்லோ ஆகிய பகுதிகளைக் கடந்து செல்கிறது. மெங்காராக் (Mengkarak) எனும் இடத்தில், வடகிழக்கு நோக்கி திரும்பி செனோர் (Chenor) வழியாகப் பாய்ந்து பின்னர் லுபோக் பாக்கு (Lubuk Paku) மற்றும் லெபார் என்ற இடத்தில் கிழக்கு திசை நோக்கி திரும்புகிறது.
அதன் பின் வெள்ளப் பெருக்குச் சமவெளியான பாலோன் இனாய் (Paloh Hinai), பெக்கான் மாவட்டம் மற்றும் கோலா பகாங் ஆகிய நிலப்பரப்புகளைக் கடந்து தென்சீனக் கடலில் கலக்கிறது.[3]
இந்தப் பகாங் ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கேமரன் மலை, லிப்பிஸ், ஜெராண்டுட், தெமர்லோ, பெரா, மாரான் மற்றும் பெக்கான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகாங் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் கடந்து செல்கிறது.
ஜெலாய் ஆற்றின் கிளை நதியான லிப்பிஸ் ஆறானது; பகாங் மற்றும் பேராக் மாநிலங்களின் எல்லையில் உள்ள ரவுப் மாவட்டத்தின் உலு சுங்கை (Ulu Sungai) எனும் இடத்தில் உற்பத்தியாகிறது.
ஜெலாய் ஆறு முடிவு அடையும் இடத்தில் கோலா லிப்பிஸ் எனும் இடத்தில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. பகாங் ஆற்றின் கிளை ஆறான செமாந்தான் ஆறு (Semantan River) பென்டாங் மாவட்டத்தில் தன் நகர்வைத் தொடங்கி பகாங் ஆறு மற்றும் செமாந்தான் ஆறு சங்கமிக்கும் இடமான கோலா செமாந்தானில் (Kuala Semantan) முடிவடைகிறது. பகாங் மாநிலத்தில் பகாங் ஆறு பாய்ந்து வளப்படுத்தாத ஒரே ஒரு மாவட்டம் ரொம்பின் ஆகும்.
1400-ஆம் ஆண்டுகளில், பகாங் ஆற்றின் கரையோரங்களில் போர் வீரர்களும், கடலோடிகளும் கடல்சார் தென்கிழக்காசியா, அச்சே, ரியாவு, பலெம்பாங் மற்றும் சுலாவெசி போன்ற இடங்களில் இருந்து குடியேறத் தொடங்கினர். பகாங் ஆறு மற்றும் நதியோரமாகக் குடியிருந்த உள்ளூர்வாசிகள் பற்றிய தொடக்க கால வரலாற்றுப் பதிவுகள் மலாய் காலப் பதிவுகள் (Malay Annals) மற்றும் இக்காயாட் முன்சி அப்துல்லா (Hikayat Munshi Abdullah) ஆகிய பழைய மலாய்க் காப்பியங்களில் காணப்படுகின்றன.
பகாங் ஆறு மற்றும் மூவார் ஆறு ஆகிய இரன்டு ஆறுகளும் நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்போல் எனும் இடத்திற்கு அருகில் இணைகின்றன. ஜெம்போல் ஆறும் மூவார் ஆற்றுக்குள் கலக்கிறது. மூவார் ஆற்று வழியாகப் பெக்கான் நகருக்கு அருகில் உள்ள கோலா பகாங் அல்லது கோலா லிப்பிஸ் வரை வணிகப் படகுகளின் மூலமாகத் தங்களின் பயணத்தைத் தொடநர்ந்து உள்ளார்கள்.
ஜெலாய் ஆறு மற்றும் தெம்பிலிங் ஆறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஜெராண்டுட் நகரம் அமைந்துள்ளது. தெமர்லோ நகரம், செமந்தான் ஆறும்; பகாங் ஆறும் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. பகாங் மாநிலத்தின் சிறப்பு வாய்ந்த நகரம் பெக்கான் ஆகும்.இந்த நகரம் பகாங் ஆற்றின் சமவெளியில் தெற்குக் கரையோரமாய் அமைந்து உள்ளது.
பகாங் ஆற்றின் மீது ஏழு பாலங்கள் குறுக்காக கட்டப்பட்டு உள்ளன. அவை பெக்கான் நகரில் உள்ள அபுபாக்கார் பாலம் (Abu Bakar Bridge), பாலோ இனாய் பாலம் (Paloh Hinai Bridge), செனோர் பாலம் (Chenor Bridge), தெமர்லோவில் உள்ள புதிய தெமர்லோ பாலம் (Temerloh Bridge), சங்காங்கில் உள்ள கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையின் (East Coast Expressway) செமந்தான் பாலம் (Semantan Bridge), கோலா குராவ் சுல்தான் அகமத் ஷா பாலம் (Sultan Ahmad Shah Bridge) மற்றும் சுல்தான் அப்துல்லா பாலம், ஜெராண்டுட் பெரியில் உள்ள பாலம் ஆகியவை ஆகும்.
பகாங் ஆற்றங்கரையில் உள்ள பெரா மாவட்டம் மட்டுமே பகாங் ஆற்றின் குறுக்காக எந்த ஒரு பாலத்தையும் கொண்டிராத மாவட்டம் ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.