ரொம்பின்
நெகிரி செம்பிலான் செம்போல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். From Wikipedia, the free encyclopedia
நெகிரி செம்பிலான் செம்போல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். From Wikipedia, the free encyclopedia
ரொம்பின் (மலாய்; ஆங்கிலம்: Rompin; சீனம்: 峇都基基; ஜாவி: اتو كيكير) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், செம்போல் மாவட்டத்தில், மூவார் ஆற்றின் கரையில் அமைந்து உள்ள ஒரு நகரம். கிம்மாஸ் மற்றும் பகாவ் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ரொம்பின் நகரம் அருகிலுள்ள உள்ளூர் சமூகத்திற்கான ஒரு நகரமாக உருவானது.[1]
ரொம்பின் | |
---|---|
Rompin | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°42′0″N 102°30′0″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | செம்போல் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 73500 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06498000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
ரொம்பின் நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள் கம்போங் பாரு ரொம்பின், கம்போங் ரொம்பின், கம்போங் பாலாய் சீனா மற்றும் கம்போங் தானா பஞ்சிஸ். புக்கிட் பிலா தோட்டம் மற்றும் நியூ ரொம்பின் தோட்டம் போன்ற அருகிலுள்ள தோட்டங்களின் மையமாகவும் ரொம்பின் நகரம் விளங்குகிறது.
ரொம்பின் நகரில் உள்ள பொது வசதிகளில் அஞ்சல் அலுவலகம், மசூதி, காவல் நிலையம், ரொம்பின் தேசியப் பள்ளி, தமிழ்ப் பள்ளி மற்றும் சீனப் பள்ளி ஆகியவை அடங்கும். 1 மலேசியாவின் பாணியில் பல்வேறு சமூங்களைச் சேர்ந்த மக்களும் ரொம்பினில் வசிக்கின்றனர்.[2]
நெகிரி செம்பிலான்; செம்போல் மாவட்டத்தின் ரொம்பின் பகுதியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 168 மாணவர்கள் பயில்கிறார்கள். 38 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD6005 | கெல்பின் தோட்டம் | SJK(T) Ldg Kelpin[3] | கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73500 | ரொம்பின் | 24 | 9 |
NBD6010 | ரொம்பின் | SJK(T) Dato' K.Pathmanaban[4] | டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி | 73500 | ரொம்பின் | 110 | 21 |
NBD6011 | மிடில்டன் தோட்டம் | SJK(T) Ldg Middleton[5] | மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73500 | ரொம்பின் | 34 | 8 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.