கர்ணாலி பிரதேசம் (Karnali Pradesh) (நேபாளி: कर्णाली प्रदेश) (முன்னாள் பெயர்:மாநில எண் 6), 2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 20 செப்டம்பர் 2015ல் நிறுவப்பட்ட நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றாகும். [1]30,301 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட இம்மாநிலத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 1,701,800 ஆகும். (1 சனவரி 2016ல்).[2] இம்மாநிலம் 10 மாவட்டங்களைக் கொண்டது.
கர்ணாலி பிரதேசம்
முன்னாள் பெயர் மாநில எண் 6 कर्णाली प्रदेश | |
---|---|
கர்ணாலி பிரதேசம் எனும் முன்னாள் மாநில எண் 6 (இளஞ்சிவப்பு நிறத்தில்) | |
நாடு | நேபாளம் |
நிறுவப்பட்டது | 20 செப்டம்பர் 2015 |
தலைநகரம் | விரேந்திரநகர் |
முக்கிய நகரங்கள் | விரேந்திரநகர் |
மாவட்டங்கள் | 10 |
அரசு | |
• நிர்வாகம் | கர்ணாலி பிரதேச அரசு |
• ஆளுநர் | துர்கா கேசர் கனால் |
• முதலமைச்சர் | மகேந்திர பகதூர் சாகி ( மாவோயிஸ்ட்) |
• அவைத்தலைவர் | ராஜ் பகதூர் |
• சட்டமன்றத் தொகுதிகள் |
|
• மாநில சட்டமன்றம் | அரசியல் கட்சிகள்
|
பரப்பளவு | |
• மொத்தம் | 30,213 km2 (11,665 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,70,418 |
• அடர்த்தி | 52/km2 (130/sq mi) |
இனம் | கர்ணாலி மக்கள் |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
புவிசார் குறியீடு | NP-SI |
அலுவல் மொழி | நேபாளி |
நேபாளத்தின் வடமேற்கில் அமைந்த கர்ணாலி பிரதேச மாநிலத்தின் முன்னாள் பெயர் மாநில எண் 6 ஆகும். பிப்ரவரி, 2018ல் பதவியேற்ற இம்மாநில சட்டமன்றத் தீர்மானத்தின் படி, இம்மாநிலத்தின் பெயர் கர்ணாலி பிரதேசம் பெயரிப்பட்டது.[3]சனவரி, 2018ல் விரேந்திரநகர் இம்மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.[4]
கர்ணாலி பிரதேசத்தின் மாவட்டங்கள்
கர்ணாலி பிரதேச்ம் 30,301 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 17,01,800 மக்கள் தொகையும், பத்து மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
அரசியல்
இம்மாநில சட்டமன்றம் 40 உறுப்பினர்கள் கொண்டது. அதில் 24 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 16 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மேலும் நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும் மற்றும் நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 12 உறுப்பினர்களையும் இம்மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர்.
கர்ணாலி மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் கூட்டணி கட்சியான மாவோயிஸ்ட் கட்சியின் மகேந்திர பகதூர் சாகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார.[5] நேபாளி காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்கட்சியாக உள்ளது.
2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
அரசியல் கட்சி | நேரடித் தேர்தலில் | விகிதாசாரத்தில் | மொத்தம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகுகள் | % | இடங்கள் | ||||
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் | 14 | 169,755 | 34.35 | 6 | 20 | ||||
மாவோயிஸ்ட் மையம் | 9 | 162,003 | 32.78 | 5 | 14 | ||||
நேபாளி காங்கிரஸ் | 1 | 117,298 | 23.74 | 4 | 5 | ||||
ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி | 0 | 15,629 | 3.16 | 1 | 1 | ||||
பிறர் | 0 | 29,477 | 5.97 | 0 | 0 | ||||
மொத்தம் | 24 | 494,162 | 100 | 16 | 40 | ||||
Source: Election Commission of Nepal பரணிடப்பட்டது 2022-11-10 at the வந்தவழி இயந்திரம் |
சுற்றுலாத் தலங்கள்
- ராரா காட்டுயிர் தேசியக் காப்பகம், முகு மாவட்டம்
- ராரா ஏரி முகு மாவட்டம்
- கர்னாலி ஆறு
2023 நிலநடுக்கம்
இப்பிரதேசத்தில் 9 நவம்பர் 2023 நள்ளிரவில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட் மாவட்டம் மற்றும் மேற்கு ருக்கும் மாவட்டத்தில் வீடுகள் இடிந்து 150 மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர்.[6][7][8]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.