நியு தெக்ரி

From Wikipedia, the free encyclopedia

நியு தெக்ரி (New Tehri) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தெக்ரி கார்வால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் ரிஷிகேஷிலிருந்து 74 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிபழைய தெக்ரி நகரம் பகீரதி ஆறும், பிலங்கா ஆறும் கூடுமிடத்தில் உள்ளது. இப்பழைய தெக்ரி நகரம் கார்வால் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. [2]பகீரதி ஆற்றின் குறுக்கே தெக்ரி அணை கட்டிய போது, பழைய தெக்ரி நகரம் மூழ்கியதால், புது தெக்ரி நகரம் நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் நியு தெக்ரி திரிஹரி, நாடு ...
நியு தெக்ரி
திரிஹரி
நகரம்
Thumb
தெக்ரி அணையின் காட்சி
அடைபெயர்(கள்): NTT
Thumb
நியு தெக்ரி
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் நியு தெக்ரியின் அமைவிடம்
Thumb
நியு தெக்ரி
நியு தெக்ரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 30.38°N 78.48°E / 30.38; 78.48
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்தெக்ரி கார்வால்
அரசு
  வகைநகராட்சி
  நிர்வாகம்நியு தெக்ரி நகராட்சி மன்றம்
ஏற்றம்
1,750 m (5,740 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
  மொத்தம்24,014
மொழிகள்
  அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
249001
தொலைபேசி குறியீடு01376
வாகனப் பதிவுUK-09
இணையதளம்http://tehri.nic.in/
மூடு

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 13 வார்டுகளும், 6,175 வீடுகளும் கொண்ட நியு தெக்ரி நகரத்தின் மக்கள்தொகை 24,014 ஆகும். அதில் ஆண்கள் 13,172 மற்றும் பெண்கள் 10,842 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 823 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.55% ஆகும். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 2483 10.34% ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 92.15%, இசுலாமியர் 6.63%, சீக்கியர்கள் 0.50% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.